செய்திகள்

பொங்கல் விடுமுறை விருப்ப பட்டியலில்தான் இதுவரை இருந்தது; ஆனால், கட்டாய விடுமுறை பட்டியலில் சேருங்கள்!

கடந்த 15 ஆண்டுகளாக பொங்கல் விடுமுறை விருப்ப பட்டியலில்தான் இதுவரை இருந்தது; ஆனால், கட்டாய விடுமுறை பட்டியலில் சேருங்கள் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்தது போலவும், நடப்பாண்டில் அது கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது போலவும் ஊடகங்களில் இன்று மாலை செய்திகள் வெளியாயின. அதன் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறியுள்ள திமுக, மத்திய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதிமுக தலைமையும் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது. இந்த செய்திகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு விபரம் தெரிந்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை. விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய தேசிய விடுமுறை நாட்களாகவும், 12 நாட்கள் விருப்ப விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகின்றன. கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் விடுதலை நாள், குடியரசு நாள், காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் அனைத்து மத திருவிழாக்கள், முகரம் ஆகியவை தவிர தமிழகத்தில் கொண்டாடப்படும் தீப ஒளித் திருநாளும் இடம் பெற்றுள்ளது. விருப்ப விடுமுறை நாட்களில் 10ஆவது இடத்தில் பொங்கல் திருநாள் இடம் பெற்றிருக்கிறது. இதே நடைமுறை தான் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், தவறுதலாக யாரோ பரப்பிய தகவலை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கண்டனம் மற்றும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் நடந்திருப்பதாக கருதுகிறேன்.

அதேநேரத்தில் தேசிய இனமான தமிழர்களின் முதன்மைத் திருநாளான பொங்கல் திருநாளுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாளில் இடம் பெறுவதற்கான அனைத்து சிறப்புகளும், தகுதிகளும் உள்ளன. அவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் திருநாள் கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவ்வாறு செய்யப்படவில்லை. இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கும் அவர் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisements

One comment

  1. தமிழர் பண்டிகையான பொங்கல் கட்டாய விடுப்புப் பட்டியலில் உடனடியாக சேர்ப்பிக்கப்பட வேண்டும்இதில் நான் பிஜேபி என்றோ காங்கிரஸ் என்றோ வேறுபடுத்திக் பார்ப்பதில்லைஇந்திய அரசு அமைப்பின் கீழ் தமிழ் தமிழர் தமிழ்நாடு பல சிக்கல்களில் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.பெரும்பாலும் வட வர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு அங்கமாக என்றுமே கருதியதில்லை.அண்மையில் பிரசாந்த் பூஷன் தலைமையிலான ஒரு கட்சி ஆவணம் என்னிடம் விவாதத்துக்கு வந்தது.ஸ்வராஜ்யா என்று கட்சியின் பெயர்.அதில் இந்திய தேசிய இனங்கள்/மாநில உரிமைகள் தொடர்பான ஒரு பத்திகூட அந்த ஆவணத்தில் இல்லை .இந்தியா என்பது பல தேசங்களின் ஒரு கூட்டமைப்பு என்ற சிந்தனையே வடவர்களுக்கு இல்லை.எனவே நாம்தான் நமது தேசிய இனத்தின் உரிமையை நலனைத்தான் விடுதலையைப் போராடிப் பெற வேண்டும் தோழர்களே

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.