“ராண்டேவூ வித் சிமி” என்கிற நிகழ்ச்சி மட்டுமே இன்று வரை ஜெயலலிதாவின் சிறந்த பேட்டியாக கணிக்கப்படுகிறது. எடிட் செய்யப்படாத அந்த பேட்டியின் முழு பதிப்பையும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், நிகழ்ச்சி தொகுப்பாளர் சிமி தன்னுடைய யூ டியூபில் வெளியிட்டு இருக்கிறார். வெளிவராத இந்த பகுதியில் மிக சுவாரஸ்யமான, கூடுதல் வெளிப்படையான ஜெயாவை பார்க்க முடிகிறது. அதையும் உங்களுக்காக தமிழில் மொழி பெயர்த்து அளித்திருக்கிறோம்.


சிமி: உங்களின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டால், ஜெயலலிதா வேடத்தில் யார் நடிக்க வேண்டும் ?

ஜெ: என்னுடைய வாழ்கையை எப்போதும் படமாக்க கூடாது என்பதே என்னுடைய விருப்பம்.

*********

சிமி: ஒரு வேளை… படமாக்கப்பட்டால் ?

ஜெ:  ஐஸ்வர்யா ராய். என்னுடைய இளமை காலத்தை படமாக்கினால், ஐஸ்வர்யா ராய்தான் என்னுடய தேர்வு.

ஆனால், என்னுடைய தற்போதைய (50 வயது) வாழ்க்கையை திரையில் நடிக்க , யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை

*********