காவிரி டெல்டா பகுதியில் ஆற்றுமணலை அள்ளாதே, தண்ணீரின்றி காயவைத்து எங்கள் பெற்றோரை கொல்லாதே என்று கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் சுமார் 3500 பேர் ஜனவரி 9,10 இரண்டு நாட்களாக வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் விவசாயிகளின் மரணத்தை தடுத்த நிறுத்த தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். கடன் வாங்கி வைத்த நெற்பயிர் கண்முன்னே காய்ந்துபோனதை பார்த்து அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ள விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அர்சு வேலை வழங்க வேண்டும். கொள்ளிடம் பகுதியில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காலை, மாலை இரண்டு ஷிப்டுகளிலும் இரண்டு நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.  10.1.2016 போராட்டத்தின் இறுதியில் மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று துனை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்

படங்கள், செய்தி: பு.மா. இ.மு, கும்பகோணம்.