போர்…போர்!

மந்திரி: பீட்டா அமைப்பை சேர்ந்தவரை தளபதி ஆக்கியது தவறாக போய்விட்டது மன்னா

மன்னர்: என்ன நடந்தது அமைச்சரே?

மந்திரி: யானைப்படை, குதிரைப்படையை எல்லாம் கலைத்துவிட்டு போரும் புரியமாட்டேன் என சொல்லிவிட்டு போர்க்களத்தில் “போர் ஒழிக”ன்னு தட்டி வெச்சு நின்னுட்டிருக்கார் மன்னா.

அவர்கள் எங்கே?

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஒருமுறை சண்டை வந்துவிட்டது. கோபமடைந்த பிரம்மா “இனிமேல் முட்டாள்களாக படைத்து உலகுக்கு அனுப்புகிறேன். காக்கும் கடவுளான நீ எப்படி அவர்களை காப்பாற்றுகிறாய் என பார்க்கலாம்” என சொல்லி சில மனிதர்களை படைத்து அவர்கள் தலையில் மூளைக்கு பதில் களிமண்ணை வைத்து அனுப்பினார்.

சிவனுக்கு விசயம் தெரிந்ததும் அவர் சமாதானம் செய்துவைத்து, அதன்பின் அந்த களிமண் மனிதர்கள் பிரச்சனையை எப்படி தோர்ப்பது என மும்மூர்த்திகளும் சேர்ந்து குழம்பினார்கள். அதன்பின் அந்த களிமண் மண்டை மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்துவர நாரதரை அனுப்பினார்கள்.

பூமிக்கு போன நாரதர் திரும்பிவந்தார்.

“அந்த களிமண் மண்டை மனிதர்களை கண்டுபிடிப்பது மிக எளிது. எல்லாரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்” என்றார்

“அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என சிவன் கேட்டார்

“எல்லாரும் பீடாவில் உறுப்பினராக இருக்கிறார்கள்” என்றார் நாரதர்

பிரியாணி’ திருடன்

போலிஸ்காரர் 1: அங்கண்ணன் பிரியாணி கடைல நைட்டு புகுந்து திருடினவன் பீடா காரனா தான் இருக்கணும்

போலிஸ்காரர் 2: எப்படி சொல்றீங்க?

போலிஸ்காரர் 3: பிரியாணில பீஸை விட்டுட்டு குஸ்காவை மட்டும் தின்னிருக்கானே?

திங்கள் சொல்லுங்க

பீடாகாரரை வெள்ளிகிழமை சிரிக்கவைக்கணும்னா என்ன செய்யணும்?

திங்கள்கிழமையன்னிக்கு அவருக்கு ஒரு ஜோக் சொல்லணும்

எகிப்து மம்மியை லாரி அடிச்ச கேஸ்

இரு பீட்டா உறுப்பினர்கள் ஒரு மியூசியத்தில் ஒரு எகிப்திய மம்மியை பார்க்கிறார்கள்

உறுப்பினர் 1: எதுக்கு பிணத்தை சுத்தி இத்தனை பாண்டேஜ் போட்டிருக்கு?

உறுப்பினர் 2: ஆக்சிடண்ட் கேஸ் போல

உறுப்பினர் 1: ஆமாம். அவரை அடிச்ச லாரி நம்பரை கூட மேல எழுதிருக்காங்க BC 1765