செய்திகள்

போராட்ட இளைஞர்களை இழிவுபடுத்துவதா?

அலங்காநல்லூரில் போராடிய இளைஞர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை வழங்க முன்வந்த போது, அவற்றை  தடுத்து திருப்பி அனுப்பியது, உணவு தர முன்வந்த உள்ளூர் பெண்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தொடர்புபடுத்தி கொச்சையான வார்த்தைகளை உதிர்த்தது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டதை பாமக நிறுவனர் இராமதாசு கண்டித்துள்ளார்.

அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளின் மாணவர்களும் இன்று வகுப்புகளை புறக்கணித்து , போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் போராட்டம் இந்த அளவுக்கு தீவிரமடைந்த பிறகும், அதை கையாளுவதில் முதிர்ச்சியான அணுகுமுறையை கையாள அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை. மாறாக சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போன்ற சிறுபிள்ளைத் தனமான அணுகுமுறையைத் தான்  தமிழக ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர். அலங்காநல்லூரில் போராடிய இளைஞர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை வழங்க முன்வந்த போது, அவற்றை  தடுத்து திருப்பி அனுப்பியது, உணவு தர முன்வந்த உள்ளூர் பெண்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தொடர்புபடுத்தி கொச்சையான வார்த்தைகளை உதிர்த்தது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்ட காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறும் பகுதியில் மின்சாரத்தை துண்டித்திருக்கிறது. மின்சாரத்தை  துண்டித்தால் போராட்டத்தை நிறுத்திவிடலாம் என்ற புத்திசாலித்தனத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

மாணவர் சக்தி எல்லையில்லா வலிமை கொண்டது. உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தவை மாணவர்களின் போராட்டங்கள் தான். 1967&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட அடித்தளம் அமைத்ததும் 1965-ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தான். மாணவர் சக்தியை குறைத்து மதிப்பிட்டவர்கள் வீழ்ந்து போனதை விளக்க பல வரலாறுகள் உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்தை இன்னுமொரு போராட்டமாக நினைத்து அலட்சியம் காட்ட வேண்டாம். மாணவர் சக்தியை மதித்து, அவர்களுடன் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், போராட்டப்பகுதியை கடந்து பலமுறை செல்லும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் இன்று அதிகாலை நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்து விட்டன. இதன்பிறகும் முதலமைச்சர் ஒதுங்கி இருக்காமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஆந்திரா, கேரளம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாக இத்தகைய நெருக்கடி ஏற்பட்ட போது, அம்மாநிலங்களின் முதலமைச்சர்கள் மக்களின் பக்கம் தான் நின்றார்களே தவிர, மக்களை ஒடுக்க முயலவில்லை. உச்சநீதிமன்றத்தின் தடையை ஒதுக்கி வைத்து விட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாகும். எனவே, முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பிரதமருடன் பேசி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறக்க இயலுமா… இயலாதா? என்பதைக் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றால், ஆந்திர மாநிலத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டது போன்று தமிழகத்திலும் சட்டம் &ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்க  வேண்டும். ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என இராமதாசு குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s