ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தன்னுடைய  கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்திருக்கிறார்.

அந்த கேள்வி-பதில் வகையிலான பேட்டியில்…. “தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேட்டால்  25 ஆயிரம் பேர் வருவார்கள். ப்ரீ செக்ஸ் பற்றிய டாபிக் வைத்திருந்தால், அதற்கு கூட ஐம்பதாயிரம் பேர் வருவார்கள்.

ஒரு பிரச்சனைக்காக தெருவில் வருவதுதான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதை ஏற்று கொள்ள முடியாது.  இந்த நாடு என்பது சட்டத்தின் ஆட்சியே நடக்கிறது.

சட்டத்தின் ஆட்சிதான் இந்த நாட்டில் நடைபெறுகிறது. அதுதான் முக்கியம். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு சட்டம் பிறப்பிக்க பட்டிருக்கிறது என்றால், அதுதான் நடைமுறைப்படுத்தவேண்டும்” என்றும் ராதா ராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

பிபிசி தமிழோசையின் லிங்க்கை கீழே அளித்திருக்கிறோம்.

http://www.bbc.com/tamil/38670535

இந்த ராதா ராஜன் என்பவர்தான் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் “என்னுடைய வீட்டில் நான் தீண்டாமையை கடைபிடிப்பேன்” என்று அறைகூவல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!