நையாண்டி

சமூக விரோதிகளை விரட்டிப் பிடிக்க போலீசுக்கு சில யோசனைகள்…!

ராஜசங்கீதன் ஜான்

ராஜசங்கீதன்
ராஜசங்கீதன்

சமூக விரோதிகளை போலீஸ் மீனவர் குப்பங்களில் பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள். பல உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை பார்த்து உலகமே சிலாகித்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறப்பான சில யோசனைகள் காவல்துறை நண்பர்களுக்காக:‍‍‍‍‍‍

1. பெயர் பேட்ஜ், தோள் பட்டை நட்சத்திரங்களை ஒளித்து வைத்த சம்யோசிதத்துக்கு பாராட்டுகள். இருந்தும் முகங்கள் தெரிந்து விடுகிறது. ஆதலால், சமூகவிரோதிகளை பிடிக்க செல்லுகையில் முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். நிறைய பாணி முகமூடிகள் இருக்கின்றன. ‘மூடர் கூடம்’ பட குரங்கு குல்லாய் பாணி, மிஷ்கினின் ‘முகமூடி’ பட பாணி, ஆங்கில படம் Dark Knight-ல் வரும் ஜோக்கர் முகமூடி பாணி என! ஆனால், பெயர் பேட்ஜ்கள் ஒளித்து வைப்பவர்கள், காக்கி சட்டை இல்லாமல், வேறு சட்டையில் வந்திருந்தால் எந்த சந்தேகமும் வந்திருக்கிறாதே! ஏதேனும் சட்ட சிக்கல் இருக்கிறதா என தெரியவில்லை.‍‍‍‍‍‍

2. சமூக விரோதிகள் வாழும் வீட்டு பெண்களிடம் பேண்ட் ஜிப்பை திறந்து காட்டி இருக்கிறார்கள். அற்புதம். அதற்கு அஞ்சாதவர்கள் எவருமே இருக்க முடியாது. இருப்பினும், தெளிவாக அச்சத்தை உருவாக்க முனையலாம். Pulp Fiction படம் போல் வசனத்திலேயே, அனைத்தையும் பேசி, கூச வைத்து, அதற்கு பிற்பாடு காட்டி ஆண்மையை நிரூபித்தால் இன்னும் dramatic‍‍‍‍‍‍ ஆக இருக்கலாம். முக்கியமாக, erectile dysfunction கோளாறு இருக்கிறதா என பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையெனில் American Pie பட காமெடி ஆகிவிடும்.‍‍‍‍‍‍

3. வெள்ளை பாஸ்பரஸ் உத்தி, கனா கண்டேன் படத்தில் வில்லன் காரை எரிக்க ஸ்ரீகாந்த் பயன்படுத்தும் உத்தி! சிறப்பு. இந்த மாதிரி out of box thinking-தான் ஸ்காட்லேண்ட் யார்டுக்கு நிகரானோர் என்ற பெருமையை பெற்று தந்திருக்கிறது. க்ளோரின் ட்ரைஃப்ளோரைடு, க்ளோரின் வாயு போன்று இன்னும் பல ரசாயன உத்திகளை கண்டுபிடிக்க பயன்படுத்த முடியும். இப்படியான ஆராய்ச்சிகளுக்கு அரசு தனி இலாகா உருவாக்கலாம். ஹிட்லரே உருவாக்கி இருந்தார். நாம் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம்?‍‍‍‍‍‍

4. பேப்பரில் தீயை பற்ற வைத்து ஆட்டோவில் போடுவதும் குடிசையில் போடுவதும் ஓகேதான் எனினும் இன்னும் கொஞ்சம் நவீனம் இருக்கலாம். மலை பிளக்க பயன்படுத்தும் டைனமைட் போன்றவற்றை ஒயர் வழியே பொருத்தி கொளுத்தலாம். குப்பம் வரை சென்று நேரத்தை வீணடிக்க கூட தேவை இல்லை. ஸ்டேஷனில் லேடி கான்ஸ்டபிளிடம் கடலை போட்டபடியே லிவரை அழுத்தினால், குப்பத்தில் மீன் மார்க்கெட்டை துவம்சம் செய்து விடலாம்.‍‍‍‍‍‍

5. மதுரை போலீஸ், பைப் குண்டு கண்டெடுத்து இருக்கிறார்களாம். கண்டெடுப்பது என முடிவான பிறகு, ஏன் பைப் குண்டு? பிளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் போன்ற நவீன ரகங்களை வைத்து, கண்டெடுக்கலாமே! ஒரு பசூக்கா, ஷாட் கன், ஸ்னைப்பர் என போர் ஆயுத ரகங்களை கூட கண்டெடுக்கலாம். நம் மக்களை நாமே குறைத்து சொல்லக்கூடாது அல்லவா?‍‍‍‍‍‍

6. முக்கியமான விஷயம், பகலில் சமூக விரோதிகளை பிடித்தல் கூடாது. வெளிச்சம், மொபைல் போன் கேமரா என சீக்ரெட் ஆப்பரேஷன் வெளிவந்து விடும். மற்ற சமூக விரோதிகள் உஷாராகி உண்ணாவிரத போராட்டத்துக்கு தயாராகி விடுவர். பதிலாக, சூது கவ்வும் பட என்கவுண்ட்டர் ஸ்பேஷலிஸ்ட், நைட் விஷனை மாட்டி, இருட்டு அறையில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா கூட்டத்தை முரட்டு குத்து குத்துவாரே, அதுபோல் இரவில் சென்று சமூக விரோதிகளை குத்தி கும்மியடிக்கலாம்.‍‍‍‍‍‍

7. கற்களை எரியும்போது இன்னும் கொஞ்சம் நுணுக்கம் தேவைப்படுகிறது. தூர இருந்து எறிவதால் பேஸ் பவுலிங் வேலைக்கு ஆகாது. ஸ்பின் முயற்சி பண்ணலாம். அதுவும் லெக் ஸ்பின் போடுவது போல், லெக் பக்கத்து க்ரீஸ்ஸில் நுழைந்து, ஆஃப் ஸ்பின் இறக்கினால், பேட்ஸ்மேன் குழம்பிவிடுவார். தலையும் க்ளீன் போல்ட் ஆகும். ஒருவேளை மூளை தெரியும் அளவுக்கு பிளந்து விட்டால் தெர்ட் அம்பையர் டிஸிஷனுக்கு விட்டுவிடலாம். ஜார்ஜும் அமல்ராஜும் பார்த்து கொள்வார்கள்.‍‍‍‍‍‍

8. கர்ப்பிணிகளை அடிப்பதற்கு முன் ஸ்கேன் ரிசல்ட்ஸ் பார்த்துவிடுவது நல்லது. அப்போதுதான் கர்ப்பத்தின் காலம் தெரிந்து, உயிர் போக வைக்கும் இடத்தை கண்டு சரியாக மிதிக்கலாம். குழந்தையின் உயிர் மட்டும் போவது வீண். தாயின் உயிரையும் சேர்த்து ஒரே மிதியில் போக்குவதுதான் நல்ல போலீஸுக்கு அழகு. ப்ரொமோஷன் சாத்தியங்களை கூட்டும்.
‍‍‍‍‍‍
9. நாம் எதிர்பாராத வகையில் நம் மீதும் கற்கள் எறியப்படலாம். ஆகவே, டாஸ் போடும்போதே பேட்டிங்கா ஃபீல்டிங்கா என சரியாக முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் நம் தலைகள் க்ளீன் போல்ட்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.‍‍‍‍‍‍

10. வாயில் ரத்தம் வந்தால் பற்கள் உடைந்திருக்கலாம். தவடை பெயர்ந்திருக்கலாம். அந்த மாதிரி காயத்தை வைத்து கொண்டு வசன காட்சி ஒளிப்பதிவு செய்யக் கூடாது. நம்பகத்தன்மை கெட்டுவிடும். தலை, நெற்றி, கை என வேறு பகுதிகளில் ரத்தம் தடவ வேண்டும். வசனமில்லாமல் வெறும் பெர்ஃபார்மன்ஸ் காட்சி என்றால் வாயில் ரத்தம் வரலாம். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் போல் கையில் கட்டு போட்டுக்கொண்டு ஹார்ட் அட்டாக் என சொல்லக்கூடாது. ‘அவார்டா கொடுக்குறாங்கோ… இப்படி ஆக்ட் பண்றியே’ என கமலை போல் மக்கள் கேட்டுவிடுவார்கள்.
‍‍‍‍‍‍
உபரி யோசனை:
‍‍‍‍‍‍
சம்பவத்தின்போது ஒரு உளவுத்துறை ‘பி.சி.ஸ்ரீராம்’ அதிகாரி ஹேண்டி கேமுடனேயே ஓடி வந்து கொண்டிருந்தாரே, அவரிடம் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வாங்கி, எடிட் செய்து ஒரு போர்ட்ஃபோலியோ போட்டு கொள்ளலாம். ஆட்சி மாறும்போதோ அல்லது பதவி மாற்றப்படும்போதோ அதை போட்டு நம் பெருமைகளை காட்டி பதவியை தக்க வைத்து கொள்ளலாம்.
‍‍‍‍‍‍
இசை தேவைப்பட்டால் ஆதி உதவுவார். ஓண்ணா மண்ணா பழகிட்டு இதை கூட செய்யலேன்னா எப்படி?

ராஜசங்கீதன் ஜான், ஊடகவியலாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.