செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சட்ட உதவிக்குழு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  மதுரை வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டபட்ட அறிக்கையில்,

“தமிழக வரலாற்றில், மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் கொண்ட சுமார் ஒரு கோடிப்பேர் பங்கேற்று கடந்த 10 நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 23.01.2017 திங்கட்கிழமை அன்று முடிவுக்கு வந்தது.

மாணவர்கள், வழக்கறிஞர்கள், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள், பல்கலை, கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பத்திரம் எழுதுவோர், ஆட்டோ தொழிலாளர்கள், சினிமாத்துறையினர், குடும்பத்தலைவிகள், குழந்தைகள், அனைத்து அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் பங்கேற்ற மாபெரும் பண்பாட்டு, அரசியல் நிகழ்வாக இப்போராட்டம் இருந்தது.

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த இப்போராட்டம் கடந்த 23.01.2017 மாலை 04.30 மணிக்கு தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேறியபின் முடிவடைய இருந்தது.

இச்சூழலில் 23.01.2017 அன்று காலை தமிழ்நாடு காவல்துறை, சென்னை, அலங்காநல்லூர், மதுரை, கோவை மற்றும் தமிழகம் முழுவதும் மக்கள், மாணவர்கள் கூடியிருந்த இடங்களில் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டது.

அதன்பின் போராட்டத்தில் கலந்து கொண்ட,உதவி செய்த பலரையும் வீடுவீடாகச் சென்று கைதுசெய்து, காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சிறையில் அடைத்துள்ளனர். இன்னும் பலரை புகைப்படங்களை வைத்துக் கொண்டு தேடிக்கொண்டுள்ளனர்.

காவல்துறையின் இச்சட்ட மீறல்களால் மாணவர்களும், மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அரசின் இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க, மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.வினர் உறுதுணையாக உள்ளனர்.

மக்களும்-மாணவர்களும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள சூழலில் மதுரை உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இணைந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிக்குழு கீழ்க்கண்ட வழக்கறிஞர்கள் கொண்டு அமைத்துள்ளோம்.

1.கனகவேல்-97903 17864 2.கதிர்வேல்-9894913820
3.குருசாமி-98432 60434
4.நாராயணன்-9382823253
5.ஜான் வின்சென்ட்-9629709011

6.வில்லவன் கோதை-94430 56580 7.மனோகரன் – 9894344783 8.ஜெயராமச்சந்திரன் -9486729074 9.சிவக்குமார்-9894340925
10.ராஜேந்திரன் -9842159078

11.நாகலிங்கம்-9444509535
12.பழனியாண்டி-9443744348 13.பொற்கொடி-9865524094 14.பகத்சிங்-9443917588
15.பானுமதி-9443122860

16.சின்னராஜா-9443926381 17.மருது-9344120290
18.தியாகராஜன் – 9489871974
19.ராஜீவ் ரூபஸ்-9487682817
20.ஜெரின் மேத்யூ-9952004890

21.விஜயராஜா-9791114234
22.திருமுருகன் – 9942612950 23.ஆறுமுகம்-9942371885
24.நாகை திருவள்ளுவன் – 9842902437 25.ராபர்ட் சந்திரகுமார்-9865496521

26.அழகுதேவி-9585750745 27.அப்பாஸ்-98423 40954 28.அப்துல்காதர்-97511 51916 29.பாஸ்கர்-9842380072 30.வாஞ்சிநாதன்(வாழ்நாள் தடை)-9865348163

31.முருகன் – 9003782261 32.சின்னமணி-9843387100 33.வடிவேலன் -9443794926
34.அகராதி-9345717179 35.கிசோர்-9443710015

36.பகவன்தாஸ்- 9791432380 37.செந்தில்-9486910238
38.முத்து கிருஸ்ணன் -9894840093 39.மணி-9842665338
40.மாறன் -9865586446

41.கருணாநிதி-9994513250 42.நெடுஞ்செழியன்(வாழ்நாள்தடை) -9629502828 43.ஆனந்தமுனிராஜ்-9443042060 44.சிவக்குமார்-9629294292 45.பால்ராஜ்-9443456023

46.கோபிநாத்-9443394107
47.பாரதி பாண்டியன் – 9976925999
48.நஜீம்-9171444664
49.கணேசன் -9443571271 50.ஜின்னா-9443475003

நாங்கள் ஜாமின்,முன்ஜாமின், மருத்துவ உதவி, வாகனங்கள், பொருட்களைத் திரும்பப்பெற்றுத் தருவது, தாக்குதல் நடத்திய மற்றும் அச்சுறுத்திவரும் காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் எவ்வித கட்டணமின்றி செய்துதருகிறோம். மேற்காணும் வழக்கறிஞர்களை அனைவரும் தொடர்பு கொள்ளவும்.

வழக்கறிஞர் கனகவேல்
ஒருங்கிணைப்பாளர்
மதுரை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.