தமிழகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் முக்கியமான தலைவராக இருந்த சண்முகநாதன்,  தஞ்சாவூரைச் சேர்ந்தவர். 2015-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டவர் சண்முகநாதன்.

ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த சண்முகநாதன், இளம் பெண்களை வரவழைத்து ராஜ் பவனின் கண்ணியத்தை குறைக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டதாக அ‌ங்கு‌ பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், குடியரசுத் த‌லைவர், பிரதமர் மற்றும் ‌மத்திய உள்துறை அமைச்சருக்கு மனு அனுப்பினர்.  அவர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் தனது ஆளுநர் பதவியை சண்முகநாதன் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன், “ராஜ் பவனை ராஸலீலா பவனாக ஆளுநர் மாற்றியிருக்கிறார். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.