மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக, தமிழக காவல்துறை மெரினா கடற்கரை முழுவதும் போராட்டம் நடத்த தடை விதித்திருந்தது. இந்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் ஆணையர் சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக இளைஞர்கள் கூட இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையொட்டி இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடை பயணம் செல்பவர்கள், சுற்றுலா பயணிகள் மெரினா செல்ல எந்தவிதத் தடையும் இல்லை எனவும் கூடுதல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

பேரணி, மனித சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 28-1-2017 முதல்  பிப்ரவரி 12 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.