சந்திரமோகன்

சந்திர மோகன்
சந்திர மோகன்

சனவரி 29 அன்று சென்னை, சேலம் எனத் தமிழ்நாட்டில் சில இடங்களில் RSS ராஷ்ட்ரிய சுயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிகள் நடைபெற்றது.

வாழ்நாள் முழுவதும் ‘இந்துத்துவா’வை எதிர்த்த அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழா, சுபாஸ் சந்திர போஸ் 120, குரு கோவிந்த் சிங்கின் 350 ம் பிறந்த நாள் விழா, ராமனுஜத்தின் 1000 வது ஆண்டு நிறைவு விழா எனப் பல்வேறு ஆளுமைகளின் பெயர்களை முன்னிட்டு இப் பேரணிகள் நடத்தப்பட்டதாக விளம்பரம் செய்யப்பட்டன.

சென்னை எழும்பூரில், ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் 2000 பேர் சீருடை அணிவகுப்பு நிகழ்ந்தது. சேலத்தில் 300 போலீஸ் பாதுகாப்புடன் 500 சீருடைத் தொண்டர்கள் பங்கேற்ற பேரணி மரவனேரியில் துவங்கி புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு …

ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்பு என்பதால், பொதுவாக தமிழகத்தில் RSS அமைப்பு வெளிப்படையாக நிகழ்ச்சி நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், உள் அரங்கத்தில் ஷாகாக்களை நடத்தி தான் வந்தது. தற்போது மோடி ஆசிபெற்ற OPS அரசாங்கம் இருப்பதால் அனுமதி அளித்தது.

பள்ளிக்கூடங்கள் ஆட்களை சப்ளை செய்தது!

சேலத்தில் பேரணிக்கு தங்களுடைய பள்ளி வாகனங்கள் மூலமாக, மாணவர்களையும் பின்வரும் கல்வி நிலையங்கள் அனுப்பி வைத்தன.

1)ஆத்தூர், வடசென்னிமலை ஜெயபாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி.
2)தம்மம்பட்டி- செந்தாரப்பட்டி சுவாமி விவேகானந்தா வித்யாலயா.

பேரணித் துவங்கும் இடத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு புதிய அடர் காக்கிநிற முழுக்கால் டிரவுசர், அரைக்கை வெள்ளை சட்டை, குல்லா ஆகியவை வழங்கப்பட்டன. சீருடை மாற்றிக் கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காந்தியை கோட்சே கொலை செய்தபோதும், எமர்ஜென்ஸியின் போதும் RSS / ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது என்றாலும், பல்வேறு படுபாதக கொலைகளில் சம்பந்தப்பட்டது தான் என்றாலும் கூட,

சனநாயக இந்தியாவில் (?) RSS அனுமதிக்கப் பட்டுள்ள அமைப்பு தான் ! அரசியல் ரீதியாகத் தான் பதில் காண வேண்டும்.

ஆனால்,காவி நஞ்சை பிஞ்சுகள் மத்தியில் விதைக்கும், கல்வி நிலையங்களை….. காவிக் கூடாரங்களாக மாற்றும் பள்ளிக்கூடங்களை என்ன செய்யலாம்?

கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்குமா?

சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.