சசிகலா போயஸ் தோட்டத்தில் அளித்த பேட்டியில் “முதல்வர் ஓபிஎஸின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறினார். னில் சட்டசபைக்கூட்டத்தின் போது முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் என்றும் அவர்கள் சிரித்துக்கொண்டதே இதற்கு ஆதாரம் என்றும் சசிகலா கூறினார்.

சசிகலாவின் இந்த குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் பலரும் எள்ளி நகையாடி வருகின்றனர்.

இந்த சூழலில், அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு ஒ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அப்போது “எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலினை பார்த்து நீங்கள் சிரித்ததாக குற்றம் சொல்கிறார்களே?” என்ற கேள்விக்கு “மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வேறுபாடே சிரிப்புதான். மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும். எனவே சிரிப்பது மிகப்பெரிய குற்றம் ஆகாது” என்று பதில் அளித்துள்ளார். .