தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலையில் நிலவிவரும் நிலையில் இன்று சென்னை வரும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மாலை 5 மணிக்கு முதல்வருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல அதிமுக சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு இரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.