சென்னை க்ரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்துக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த மதுசூதனன், “சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை ஒழிக்க அதிமுகவுக்கு ஓ.பி.எஸ். தலைமை ஏற்க வேண்டும். சசிகலா தரப்பை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். அதிமுகவை காக்கவே பன்னீர்செல்வத்து ஆதரவு தெரிவிக்கிறேன்” என ஆதரவாளர்கள் முன் பேசினார்.

அதிமுக மூத்த தலைவரான மதுசூதனன், வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளர் பதவிக்கு பரிந்துரைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.