சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நிபந்தனையின்றி திமுக ஆதரவளிக்கும் என திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை பங்கு உள்ளிட்ட எந்தவித நிபந்தனையும் இன்றி திமுக ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்ததாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.