பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது “செல்லாத நோட்டு திட்டத்திற்கு நாட்டு மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர்  ஏற்க மறுத்து முதலை கண்ணீர் வடிக்கின்றனர்” என்று குற்றமசாட்டினார்.

“எனக்கு முந்தை பிரதமராக ( மன்மோகன் சிங்) இருந்தவர் ஆட்சியில் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியும். அவற்றை ஒழிக்க அவருக்கு துணிச்சல் இல்லை. அவரது ஆட்சியில் ஊழல் மழை பெய்தது அதில் ரெயின் கோட் மாட்டிக்கொண்டு மழையில் நனைந்தார்” என்று மோடி கூறினார்.

இதனிடையே பாராளுமன்றத்தின் மாண்பை , தன்னுடைய தரம்தாழ்ந்த பேச்சுக்களின் மூலம் அவமதிக்கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.