அதிமுக, இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அத்தனை எம். எல். ஏக்களின் தொடர்பு எண்களை சமூக ஊடகங்களில் பரவவிட்டனர். மக்கள் தங்களுடைய தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி தொடர்ந்து தொலைபேசியில் பேசினர். இதுகுறித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்களுடைய சுதந்திரம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதாக கருத்திட்டிருந்தார்.

pandiyarajan

இதற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பினை மக்கள் ஆற்றினர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மக்களின் விருப்பத்துக்காக செயல்பட வேண்டும் வலியுறுத்தினர்.

இன்று பாண்டியராஜன் தனது ட்விட்டரில் இன்று ‘அதிமுகவின் நலனுக்காக நல்ல முடிவை எடுப்பேன். மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பேன்’ என தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை ரி ட்விட்டும் செய்யப்பட்டுள்ளது.

‘மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என அழைத்தும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார் பாண்டியராஜன்.