கடந்த ஆறு நாட்களாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனக்கு ஆதரவாக உள்ள இந்த எம். எல்.ஏக்களை இப்படி ‘அடைத்து’ வைத்திருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,  முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ரிசார்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு தொலைபேசியில் பேசி ஓ.பீ. எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் “மக்களின் தீர்ப்பே  மகேசன் தீர்ப்பு… மன்னார்குடிய நம்பி  வெச்சிக்காத ஆப்பு…!” என்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

எங்க போன எம்.எல்.ஏ.
எங்க ஊரு எம்.எல்.ஏ…
ஊரு பக்கம் வாயான்னா
ஊரு ஊரா பிக்னிக் போற…

அம்மா பேச்ச கேட்டு
போட்டமைய்யா ஓட்டு…
எங்க பேச்ச கேட்கலைன்னா
வெச்சிருவோம் வேட்டு…

மக்களின் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு…
மன்னார்குடிய நம்பி
வெச்சிக்காத ஆப்பு…

மாட்டுக்கே கூடுன
மானமுள்ள கூட்டம்…
நாட்டுக்காக கூடுனா
என்னாகும் உங்க ஆட்டம்…

ஓட்டுப்போட்ட உரிமையில்
ஒன்னே ஒன்னு கேட்கிறோம்
உங்க பேஸ்டில் உப்பிருந்தா
ஊரு பேச்ச கேளுங்க…

எங்க போன எம்.எல்.ஏ.
எங்க ஊரு எம்.எல்.ஏ…
ஊரு பக்கம் வாயான்னா
ஊரு ஊரா பிக்னிக் போற…

பாடலை இங்கே கேட்கலாம்…

நன்றி: தளவாய் சுந்தரம்.