21 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.

“சொத்துக்குவிப்பு வழக்கில் 21 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தாமதமானாலும் ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கிறது. பொதுவாழ்வில் இருப்போர் தூய்மைக்கு இலக்கணமாக இருக்க வேண்டும். அந்த தூய்மை, நேர்மை பாதையில் இருந்து விலகும் அல்லது விலக நினைக்கும் அரசியல் வாதிகளுக்கு இந்த தண்டனை தக்க பாடமாக இருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதால் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையை அரசியல் சட்டத்திற்குட்பட்டு ஆளுனர் அவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என கேட்டிருக்கிறார்..