1991-1996 கால கட்டத்தில், ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தபோது, அவரும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் வழங்கிய 570 பக்க தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

jaya-letter-600-12.jpg

நகைகள்

 • தங்கம், வைர நகைகளின் மதிப்பு 2 கோடியே 51 லட்சம்.

 • கைக்கடிகாரங்களின் மதிப்பு  15 லட்சத்து 90 ஆயிரம்.

 • கார்களின் மதிப்பு  1 கோடியே 29 லட்சம். (மாருதி கார், கண்டெசா கார், வேன்கள், ஜீப்புகள் அடங்கும்.)

 • 400 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு 20 லட்சத்து 80 ஆயிரம்.

jjsasikalanakeeran

சொத்துகள்

 • அசையா சொத்துகளின் மதிப்பு 20 கோடியே 7 லட்சம்.
  புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு 22 கோடியே 53 லட்சம்.
 • 1991-1996 கால கட்டத்துக்கு முன்பு அவர்களது சொத்து மதிப்பு 2 கோடியே 1 லட்சம். மீதி சொத்துகள் அனைத்தும் 5 அல்லது 6 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டதாகும்.
 • தண்டிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருப்பு 97 லட்சத்து 47 ஆயிரம்.
  3 கோடியே 42 லட்சத்தை நிலைத்த வைப்புகளிலும், பங்குகளிலும் வைத்துள்ளனர்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.