ஒவ்வொரு துறையிலும் சமூக அக்கறையுடன், நிறைய சித்தாந்தங்களுடன் இயங்கும் பல்வேறு களப்பணியாளர்கள், செயல்பாட்டாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ முன்னெடுக்கும் விதமாக ‘கலகக்காரன்’ என்றொரு நிகழ்வை நிகழ்த்துகிறது. அதன் முதல் நிகழ்வாக கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கான் பங்கேற்கும் கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு மாலை வடபழனியில் நடைபெறவிருக்கிறது.

இதுகுறித்து வெளியிட்ட செய்தியில்,

“வார பத்திரிகையில் அரசியல் தொடர்பான கார்ட்டூனில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியவர் ஹாசிப் கான். கார்ட்டூன் மூலமும் சித்தாந்தங்களை, சமூக அக்கறையோடு வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்தவர். அவர் பங்கேற்கும் முதல் பொது கலந்துரையாடல் இது. இதில் ஒரு கார்ட்டூன் வரைந்தும், தன்னுடைய தொடர் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துக்கொள்ளவிருக்கிறார். சமூகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம் வாருங்கள்” என தமிழ் ஸ்டுடியோ அழைத்திருக்கிறது.

துறை: பத்திரிகை கார்ட்டூனிஸ்ட்.

19-02-2017, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு

திறந்தவெளி அரங்கம், பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் மூன்றாவது மாடியில்.

இருக்கையை உறுதி செய்ய முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்: முன்பதிவுக்கு: 9566266036