செய்திகள்

திமுக எம்.எல்.ஏக்கள் பூங்கோதை, கு.க. செல்வம் கடும் ரகளை

முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். திமுகவின் 89 எம்.எல்.ஏக்களில் திமுக தலைவர் கருணாநிதியைத் தவிர மற்ற அனைவரும் அவைக்கு வந்தனர். காங்கிரஸின் 8 எம்.எல்.ஏக்களும் முஸ்லிம் லீக் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் 122 பேரும் பேரவைக்கு வந்தனர். அவை 11 மணிக்கு கூடியதும் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர், பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களுன் முழக்கமிட்டனர். இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரினர். இதை சபாநாயகர் தனபால் மறுத்தார். இதைக்கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை மேசையின் மீது ஏறி முழக்கமிட்டார். திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். சபாநாயகரின் மைக்கும் இருக்கையும் உடைக்கப்பட்டது. சபாநாயகர் அவையை 1 மணி வரை ஒத்திவைத்தார். சபாநாயகர் இருக்கையில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்ட மன்ற திமுக உறுப்பினர் கு.க.செல்வம் அமர்ந்து ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என முழக்கமிட்டார். அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s