சமூகம் சர்ச்சை

கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

இளங்கோ கிருஷ்ணன்

இளங்கோ கிருஷ்ணன்
இளங்கோ கிருஷ்ணன்

கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள் என்பதற்கு சமூகரீதியான காரணிகள் என்ன என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை. ஆனால் சில அவதானங்களுக்கு வர முடிகிறது அதைப் பற்றி நிறைய கேள்விகள் உள்ளன.. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, தொடர்பற்ற குழப்பமான கேள்விகள் இவை… இவற்றை தொகுக்க முயன்றுகொண்டிருக்கிறேன். இவை கறாரான சிந்தனைகள் அல்ல என்னுள் இருப்பதன் கரட்டு வடிவங்கள் என்பதால் இது குறித்து முழுமையாக ஏதும் சொல்லாமல் இருக்கிறேன்.

1.தொன்னூறுகளின் பிற்பகுதியில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் இந்திய சமூகத்தில் குறிப்பாக, தமிழ் சமூகத்தில் பெருகத் தொடங்குகிறார்கள். இது ஏன்?

2.ஒஷோ எண்பதுகளில் தீவிரமாக தொழிற்பட்டதன் உச்சமாக இந்த கார்ப்பரேட் சாமியார்களுக்கான தத்துவார்த்த, சிந்தாந்த அடிப்படைகள் கிடைக்கின்றனவா?

3.ஓஷோ உயர் வர்க்க, மேல் மத்தியதரவர்க்க மக்களுக்கான சாமியாராக இருந்தார் எனில் இந்த நவீன கார்ப்பரேட் சாமியார்கள் கீழ் மத்தியதர வர்க்கத்தினருக்குமான சாமியார்களாக இருக்கிறார்கள் என்பது என்ன மாதிரியான சமூக வளர்ச்சிப் போக்கு என்பதைக் கவனிக்க வேண்டும்.

4.தொன்னூறுகளுக்குப் பிற்பகுதியில்தான் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இதற்கும் நவீன கார்ப்பரேட் சாமியார்களின் வருகைக்கும் என்ன தொடர்புகள் உள்ளன?

 1. அரை நூற்றாண்டு சுதந்திரத்தின் வளர்ச்சி மத்திய தரவர்க்கம் என்பதற்கு வழங்கிய வளர்ச்சிகளின் முகமாக இந்த கார்ப்பரேட் சாமியார்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

 2. கார்ப்பரேட் சாமியார்களின் சமூக-அரசியல்-பொருளாதார இருப்பு என்பது என்ன என்பதைப் பற்றிக் கவனிக்க வேண்டும்.

 3. இந்தியாவின் ஆன்மிக தேடல் என்பது என்ன? நிஜமாகவே நம் ஆன்மிக தேடல் என்பதைததான் இந்த சாமியார்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்களா என்று நோக்க வேண்டும்.

8.சாதிக்கும் பொருளாதாரத்துக்கும் அரசியலுக்கும் இடையேயான உறவில் இந்த சாமியார்களின் வகிபாகம் என்ன?

9.மூலதன திரட்சி மற்றும் உபரி பகிர்வின் மையங்களாக இந்த சாமியார்கள் இருப்பார்கள் எனில் இதற்கு முந்தைய தலைமுறையில் அது யாரிடம் இருந்தது. இப்போது அது எப்படி இவர்கள் மூலம் தொழிற்படுகிறது.

 1. இந்திய சமூகத்தின் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுக்கு இந்த சாமியார்கள் எவ்வகையிலான தடையாக, கிரியா ஊக்கிகளாக செயல்படுகிறார்கள்.

 2. இந்து மதம் என்ற கட்டுமானத்துக்கும் இந்த நவீன சாமியார்களின் ஆன்மிக உரையாடல்களுக்குமான உறவுகள் எத்தகையவை?

 3. மதம் கடந்த ஆன்மிகம் என்ற சொல்லாடலின் பின் உள்ள உண்மையான பொருள்கோள்களுக்கும் இவர்கள் முன்வைக்கும் ஆன்மிக அனுபூதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது என்ன?

 4. இந்தியாவின் நாஸ்திகவாத மதங்களான பெளத்தம், சமணம் போன்றவற்றையும் கிருஸ்துவம், இஸ்லாம் உள்ளிட்ட ஆபிரகாமிய மதங்களையும் இந்த நவீன கார்ப்பரேட் சாமியார்கள் உட்செரிக்கும் முறை எத்தகையது? அதன் முரண்பாடுகளை எப்படிக் கையாள்கிறார்கள்.

14.லெளகீக விடுதலைக் கருத்துகளான பெண்ணியம், தலித்தியம், வர்க்கவிடுதலை போன்ற கருத்தாக்கங்களை இவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள்.

 1. நிரூபணவாத சிந்தனைகளை இவர்களின் மெய்மைகடந்த டிரான்ஸாண்டலிச சிந்தனைகள், பாரா சயின்ஸ் கோட்பாடுகள் எவ்வாறு கட்டுடைக்க முயல்கின்றன. அதன் நோக்கங்களாக என்ன இருக்கின்றன.

16.இந்திய தர்க்கம் என்பதன் முறைமையை எப்படி இவர்கள் தங்களுக்கு ஏற்ப வளைக்கிறார்கள்.

 1. ஆன்மிகம்-மதம் – அரசு – அதிகாரம் என்ற கண்ணியில் இவர்கள் எந்தெந்த புள்ளிகளுடன் எப்படி எல்லாம் இணைகிறார்கள்? எப்படி எல்லாம் விலகுகிறார்கள்.

 2. கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் இவர்களிடம் கொண்டுள்ள நெருக்கத்துக்கு லெளகீக தேவைகளுக்கு வெளியே என்ன மாதிரியான காரணங்கள் உள்ளன?

 3. சாமியார்கள் என்று சொன்னாலும் அனைவரையும் ஒரே தரப்பாக நிறுத்திவிட இயலுமா? இவர்களுக்கு இடையேயான வேறுபாடுகள் ஒற்றுமைகள் என்னென்ன?

 4. பிராமணியத்துக்கு அனுசரனையாக அல்லது எதிராக இவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்.

 5. பிராமணியத்துக்கும் கார்ப்பரேட் சாமியார்களுக்குமான உறவு என்பது என்ன?

 6. இந்திய சமூகத்துக்கு அரசியல்-சமூக-பொருளாதார- ஆன்மிக வெளிகளில் இவர்கள் தேவைப்படுவதன் உள்ளர்ந்த இயங்கியல் என்ன?

 7. நவீன கார்ப்பரேட் சாமியார்களால் இந்த சமூகத்துக்கு விளைந்தவை என்னென்ன?

 8. நம் சமூகத்தில் இயல்பாகவே உள்ள ஆன்மிக நம்பிக்கைகளை இவர்கள் எப்படி தர்க்கப்படுத்துகிறார்கள்?

25.சாதியை வகுப்பதில் தொகுப்பதில் சமன்படுத்துவதில் இவர்களின் செயல்முறை என்ன?

இன்னும் இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. இதை எல்லாம் தொடர்ந்து சிந்திக்க விரும்புகிறேன். வாய்ப்பு இருந்தால் வேறு வேறு தருணங்களில் எழுதுகிறேன். இந்த ஒவ்வொன்று குறித்தும் சொல்ல நிறைய சொற்கள் உள்ளன. பேசுவோம்…

இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர்; ஊடகவியலாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.