தலித் ஆவணம்

தென்மாவட்ட சாதிய கொலைகளுக்கு சிபிஐ விசாரனை தேவை

முருகன் கன்னா

murugan-kanna

நெல்லையில் காவல்துறையின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பாளை சிறையில் இருந்து சிங்காரம் என்பவர் வாய்தாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் மர்ம நபர்களால் வெட்டி படுகாலை செய்யப்பட்டுள்ளார்.

தென்மாவட்டங்களில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட சாதிய படுகொலைகள் நடந்துள்ளது. இதில் சமுக செயல்பாட்டாளர்கள் சமுக ஆர்வலர்கள் அதிகமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அரசும் காவல்துறையும் எந்த வகையில் சமுக பிரச்சனையாக கருதவே இல்லை மற்றும் வழக்குகளும் விசாரனைகள் இன்றி தேங்கி கிடக்கிறது. இது குறித்து கேள்வி கேட்டால் மெத்தனமான பதில்களே தரப்படுகிறது.

தொடர் கொலைகள் நடக்கும் தென்மாவட்டங்களில் இன்று வழக்கு வாய்தாவுக்காக பாளை மத்திய சிறையில் இருந்து தூத்துக்குடி நீதிமன்றம் கொன்டு செல்லும் வழியில் பாளை கேடிசிநகர் அருகே காவல்துறை வாகனத்தை டாடாஏசி என்ற வாகனத்தை குறுக்கே விட்டு மறித்து மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளித்து காவல்துறையினர் முன்பு பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான சிங்காரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் காவல்துறையினருக்கு யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அதே சமயம் பாதுப்புக்கு வந்த காவல்துறையினரிடம் இரு துப்பாக்கியும் இருந்துள்ளது. ஆனால் சிங்காரத்தை காப்பாற்றும் செயலுக்காக கூட அதனை பயன்படுத்தவில்லை. காவல்துறையினர் நடவடிக்கைகளை பார்த்தால் இந்த கொலை காவல்துறையும் சாதிய கூட்டமும் இணைந்து திட்டமிட்டு அரங்கேற்றியதாக தெரிகிறது.

தென்மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்துள்ள சாதிய கொலைகளை ஒன்றைக் கூட இதுவரையில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டது இல்லை. அதே சமயம் காவல்துறையினரும் வழக்கில் மெத்தனமாகவே செயல்படுகிறார்கள். இது குறித்து சட்டமன்றத்தில் கடந்த ஆட்சியில் டாக்டர் கிருஷ்னசாமியும் தோழர் பாலபாரதியும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அளித்த பதில் அந்த கொலைகள் அனைத்தும் தனிட்ட விரோதம் தான் காரனம் என்றார். பட்டியல் சமுகத்தை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் ஒடுக்குமுறை நிகழ்ந்தால் அது தனி நபர்களுக்குள் நடந்தாலும் அதில் சாதிய மேலாதிக்க சிந்தனையோடு தான் அவர்கள் ஒடுக்கப்படும் நிகழ்வே நடக்கிறது. இதனால் அவற்றை னி நபர் பிரச்சனை என்று ஒதுக்கி வைத்திட முடியாது. அதனை சமுக பிரச்சனையாக தான் பார்க்க வேன்டும் என்று அரசியல் அமைப்பு சட்டமே சொல்கிறது

தமிழகத்தை கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை ஆண்ட ஆளும் ஆட்சியாளர்களின் சமுக பார்வையும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சாதிய சக்திகளுக்கும் துணை போகும் செயல்களும் மெததனமான போக்குமே பல படுகொலைகளுக்கு காரனமாக அமைகிறது இதனால் சமுக பணியில் ஈடுபடுபவர்களின் உயிர்களுக்கு எந்த விதத்திலும் உத்திரவாதமில்லாத சூழலே நிலவுகிறது எனவே தென்மாவட்ட சாதிய படுகொலைகளை தடுத்திடவும் இதுவரையில் நடந்துள்ள கொலைகள் குறித்து உரிய விசாரனையும் தேவை எனவே இதற்கு சிபிஐ விசாரனை அமைப்பதே சரியாகும்.

முருகன் கன்னா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

Advertisements

One comment

  1. மாநில சுயாட்சிக்காகப் “போர் முழக்கம்” செய்யும் அதே தலைவர்களும் சமூக சேவகர்களுந்தான் அதேவாயால் மத்தியரசின் தலையீட்டுக்காகவும் இறைஞ்சுகிறார்கள். தம்மைதாம் ஒழுங்கு படுத்திக்கொள்ளத் தெரியாதவர்கள், மாநில அதிகாரங்களை பலப்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்கள், தமது பலத்தில் துளியளவும் நம்பிக்கை இல்லாதவர்கள், மாநில சுயாட்சிக்காக “போர் முழக்கம்” செய்வதெல்லாம் ஒரு அரசியல் நாடகமே.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.