சர்ச்சை

நேரு-எட்வினா இடையே காதல் இருந்தது உண்மை: அது ஆன்ம நேசம்; மவுண்ட் பேட்டனின் மகள் பேட்டி…

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி ‘வைஸ்ராய்ஸ் ஹவுஸ்’ என்ற ஹாலிவுட் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.  ஆங்கிலேய ஆட்சியின் கடைசி அரசு பிரதிநிதியாகவும், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த மவுன்ட் பேட்டனின் இந்திய வாசம் பற்றிய கதையும் இப்படத்தில் இடம்பெறுகிறது.

இத்திரைப்படம் குறித்தும், மவுண்ட் பேட்டன் குடும்பத்தினர் டெல்லியில் தங்கியிருந்த வைஸ்ராய்ஸ் ஹவுஸ் மாளிகை குறித்தும் அவரது மகள்  87 வயதான பமீலா ஹிக்ஸ் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில்”மவுண்ட் பேட்டனின் மனைவியும், தன்னுடைய தாயுமான எட்வினா மற்றும் இந்திய பிரதமர் நேரு இடையே இருந்த காதல் குறித்தும் அவர் கூறியுள்ளார்.

“நேருவும், என் தாயும் ஒருவருக்கொருவர் நேசித்ததை மறுப்பதற்கில்லை. அவர்கள் ஆன்ம ஜோடிகள். ஆனாலும், அவர்கள் நேசிப்பதை பார்த்து என் தந்தை பொறாமை கொள்ளவில்லை. அந்த உறவானது என் தாயை சந்தோஷப்படுத்தும் ஒரு உறவாகவே என் தந்தை பார்த்தார்.

ஜவகர்லால் நேரு மிகவும் நேர்மையான மனிதர். அவர் என் தாயுடன் தனிமையில் இருந்ததற்கான வாய்ப்பே இல்லை. அவர்களுக்குள் உடலுறவு இருந்ததில்லை. அவர்களைச் சுற்றி எப்போதும் போலீசாரும், பாதுகாவலர்களும் துணை நிற்பார்கள். என் தந்தையின் நண்பரான நேரு, எப்படி அவருக்கு துரோகம் செய்வார்?

1948ல் நாங்கள் இங்கிலாந்துக்கு திரும்பியபோது, நானும் என் தாயும் எங்களை ஒரு இந்தியர்களாகவே கருதி வந்தோம்”  இவ்வாறு பமீலா கூறி உள்ளார்.

இதனிடையே பமீலாவின் மகனும், மவுண்ட் பேட்டனின் பேரனுமான ஆஷ்லே ஹிக்ஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் “நேரு ஆண்மையற்றவர் என்றும் நேருவுக்கும் எட்வினாவுக்கும் இடையே உடலுறவு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் நேருவின் சகோதரி தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
Sources: http://www.telegraph.co.uk/films/2017/02/17/lady-mountbattens-grandson-prime-minister-nehru-had-platonic/

Advertisements

பிரிவுகள்:சர்ச்சை

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s