இந்துத்துவம்

கேரள முதல்வர் தலையை வெட்டினால் ஒரு கோடி ரூபாய் ; ஆர்எஸ்எஸ் தலைவர் பகிரங்க அறிவிப்பு…

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொலை செய்பவர்களுக்கு  1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய பிரதேச ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா  தலைவர் டாக்டர் சந்த்ரவாத் அறிவித்துள்ளார்.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களுக்கும், தங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதற்கும் முதலமைச்சரும், கம்யூனிஸ்ட் தலைவருமான பினராயி விஜயனே காரணம் என்றும் சந்திரவாத் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடும் பினராயி விஜயனின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு தனது சொத்துக்களை விற்றாவது 1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய பிரதேச ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா  தலைவர் டாக்டர் சந்த்ரவாத் அறிவித்துள்ளார்.

Advertisements

2 replies »

  1. பாராளுமன்ற அரசியல்த் தளத்திலும், பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு உட்பட்ட மக்கள் இயக்க அரங்குகளிலும் சிபிஎம் கட்சியானது இந்துத்துவத்திற்கும், அக் கோட்பாட்டை செயற்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் ஆற் எஸ் எஸ், பிஜேபி போன்ற அரசியல் கட்சிகளுக்கும் எதிராகவே இருக்கின்றன. பிரதமர் மோடியின் முரட்டுத்தனமான துணிச்சலின் பின்னரும், மேற்குவங்காளத்தை இழந்ததன் பின்னரும், தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது பணநாயகத்திடம் செம்மையான அடிவாங்கிய பின்னரும் அக்கட்சியின் போர்க்குணம் அதிகரித்திருப்பது வரவேற்க்கப்படவேண்டியதே. அவர்களில் ஒரு வளர்திசை மாற்றம் உருவாகியிருப்பது தெரிகிறது. ஆனால் இன்னமும் வாக்குப்பொறுக்கித்தனத்தில் இருந்தும், இந்தியத் தேசியம் எனும் மாயையில் இருந்தும் அவர்கள் விடுபட்டுவிட்டார்கள் என்பதற்கான அரசியல் அடையாழம் எதுவுமே தெரியவில்லை. எவ்விதமோ தமது இருத்தலைத் தங்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் போராட நிர்பந்திக்கப்படுகிறார்கள். அது நல்லதே. தெசிய இனக்கள் மீதும், அனைத்து மதப்பிரிவினர் மீதும், பழங்குடியினர் மீதும், பாலினத்தினர் மீதும் ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர்கள் மீதும் செலுத்தப்பட்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவார்களானால் அவர்கள் பிழைத்துக் கொள்வது மாத்திரமல்ல, இந்தியப் புரட்சியின் தலைமையாகவும் மாறுவார்கள். இல்லையேல் அவர்கள் மெள்ளச் செத்துப்போவார்கள்.

    Like

  2. பினராய் விஜயன் ஒரு கிருத்துவர். கேரள கம்யூனிஸ்ட் பார்ட்டி பெரும்பாலும் கிருத்துவரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் பார்ப்பனர்கள் தாக்கப்படுவதால், இந்துத்வா தீவீரவாதிகள் கிருத்துவர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s