பெண் குரல்

மவுனம் என்பது சம்மதம் மட்டுமல்ல மவுனம் என்பது எதிர்ப்பும்தான் : ‘செம்ம கட்ட’ என்ற உயர் அதிகாரிக்கு உரத்த குரலில் ஒரு பதில்….

ரேவதி சதீஷ்

சொந்த வாழ்க்கைல போன வாரம் நடந்தததை   எழுதவா வேண்டாமா என்று யோசித்ததில், எழுதிவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது.

கடந்த வாரத்தில் ஒரு நாள் மாலை டியூட்டி முடிந்து கிளம்பிய பொழுதில் எதிரில் வந்த இளம் டாக்டர் “இன்னைக்கு ‘மால்’ மாதிரி இருக்கிங்க” என்று ஹிந்தியில் செப்பியருளினார்.(மால் என்பதற்குச் சரக்கு,செம்ம கட்டை, என்று தமிழில் அர்த்தம் கொள்ளலாம் )

எதிர்பாராத இந்தக் கமெண்ட்டினால் சட்டென்று “எனது உடைகள் ஒழுங்காக இருக்கிறதா” என்று சரி பார்க்க தூண்டப்பட்டேன். சுற்றிலும் இன்சார்ஜ் , நர்ஸ்கள், நோயாளிகள் இருந்த நிலையில் மவுனமாகக் கடந்து வந்தேன் என்றாலும் தலைக்குள் பல கேள்விகள் .

“ஏன் என்னை அப்படிச் சொல்ல வேண்டும் ? யார் கொடுத்தார்கள் அந்த உரிமையை ? நீ எனது ப்ரெண்ட்டா? லவ்வரா? கணவனா? நீ ஒரு டாக்டர். நான் ஒரு நர்ஸ். அவ்வளவுதானே. அதனைக் கடந்து என்ன இருக்கிறது எங்களுக்குள்…என்னைப் பற்றி உடல் ரீதியாகக் கருத்து சொல்ல ?என்று அவ்வளவு வினாக்கள்.

அடுத்த நாள் காலையில் அந்த டாக்டரிடம் சென்று “இது போன்ற பேச்சுகள் எனக்குப் பிடித்தமில்லை. இனி இது போலப் பேசாதீர்கள்” என்ற போது “நான் வேறு எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை” என்றான் அந்த டாக்டர்.

இதில் முக்கியமானது என்னவெனில் இதற்கு முன் வேறு ஒரு நர்சிடம் “லிப்ஸ்டிக் அதிகமா இருக்குது” என்று தனது ரசனையினை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த் டாக்டர். அதாவது அவர் அப்படித்தானாம். “மனதில் தோன்றியதை வெளிப்படுத்திடுவார்.கள்ளமில்லாதவர்” என இன்னும் சில நர்ஸ்கள் சப்போர்ட் செய்ததின் விளைவுதான் இந்தப்பதிவு.

மேற்கொண்டு சதிஷிடம் உரையாடிய போது பல பார்வைகள் கிடைத்தது இருவருக்கும்…

1) நட்பு வட்டத்திலிருப்பவர் எனில் டாக்டராக இல்லாமல் நண்பராக அவர் பேசியிருப்பதைப் பெரிதுபடுத்தாமல் கடக்கலாம். இந்தப் பதிவிற்கு அவசியமில்லாது போயிருக்கலாம்.

2) ஒவ்வொரு துறையிலும் இப்படியான நபர்கள் இருப்பார்கள்.உதாரணத்திற்கு இப்டிலாம் கூடப் பேசுவார்கள்…ட்ரெஸ் நல்லாருக்கு…என்னாச்சு அடுத்தக் குழந்தை பெத்துக்குற ஐடியா இல்லியா? அவர் தூரத்துல இருக்காரே எப்படித் தனியா சமாளிக்கிறிங்க? லிப்ஸ்டிக் டார்க்கா ஏன் ? இதெல்லாம் உன்னை நான் கவனிக்கிறேன் எனும் அர்த்தக்குறிப்பீடுகள்.

3) இது போன்ற நிலையில் என்னைப்போன்ற பெண்கள் முதலில் பயப்படுவது தனது உடைகள் குறித்து.நாம் கண்ணியமில்லா உடை உடுத்தியிருக்கிரோமோ என்றுதானே பீதியாகிறோம்.

4)அவர் ஜோவியல் என்று பார்த்தால் கூட, தனது சக டாக்டரிடமோ அல்லது மேலே இருக்கும் சீனியர் லேடி டாக்டர்களிடமோ இப்படி ஜோவியலாகப் பேசுவாரா?பேச தடுப்பது என்ன? ஆனால் தனக்குக் கீழான பணியில் இருப்பவர்களை மட்டும் இப்படியான கமெண்ட்களோடு அணுகுவதன் காரணம் “தனக்குக் கீழே இபணிபுரிபவர்கள்” என்கிற எண்ணம் அல்லாது வேறென்ன? (இதே மனநிலைதான் தலித் பெண்களை வன்புணர்வு செய்பவர் மனநிலையும்..எனக்குக் கீழானவர்கள் என்னை என்ன செய்துவிட இயலும் ?)

5) நர்ஸ்களிடம் அவர் நட்பாகவே பழகுவதாகத் தோன்றினால் கூட அவரின் சக டாக்டர்களுடன் ,அல்லது கல்லூரி நட்புகளுடன் பழகுவதைப் போல நட்பு பாவிக்கிறாரா என்ன ? நட்பு அடிப்படையில் அவரைப் பெயர் சொல்லி அழைத்திட முடியுமா என்ன? முடியாதல்லவா. அப்போது . அவருடைய இந்த ஜோவியலான நட்பை, பெண்களுடன் பேசி கழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் என வகைப்படுத்தலாமா?

6) நானோ அல்லது வேறு யாராக இருந்தாலும் அந்த டாக்டரின் இடத்தில் “ஒரு வார்ட் பாய் இருந்திருந்தால்” அந்தக் கணமே அவனை உண்டு இல்லை எப்றி ஆக்கிருப்போம் . தனக்குச் சீனியரான டாக்டரை விடத் தனக்கு ஜூனியரான வார்ட் பாயை எளிதில் திட்டிவிடும் வர்க்க மன நிலை இல்லை என்பதை மறுக்க இயலாது.

7) நம்மிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம்… நம்மை விடச் சீனியராக முக்கியப் பதவி வகிப்பவர்களைச் சிறந்த அறிவாளியாகப் பிரமிப்பிலேயே அவர்களைப் பார்ப்பது. இந்தப்பார்வை தரும் தைரியம் அவர்களை அவர்களின் பேச்சுக்களைப் புனிதப்படுத்த வைத்துக்கொண்டே இருக்கும்.தவறாகத் தோன்றாது. உங்களது எதிர்ப்பின்மை அவர்களுக்கு அங்கீகாரம் என்பதை மனதில் வையுங்கள்.

😎 பொதுவில் இதனைப் பேச முதலில் பயந்தேன். ஏனெனில் ஆண்கள் மட்டுமல்லாது உடன் வேலை பார்ப்பவர்கள் கூட உடனடியாக இப்படித்தான் கேட்பார்கள்..”இவ பேசாமயா அவன் பேசுவான் ? இவ இடம் கொடுக்குற அளவுக்கு ஏன் இருந்திருக்கக் கூடாது?” என்று.

ஒன்றை நன்றாக நினைவில் வையுங்கள்…இந்த மாதிரியான கேவலமான கேள்விகள்தான் அவர்களின் பலமே..

9) மவுனம் சம்மதமாக அர்த்தப்படுத்திய நிலையில், மவுனம் எதிர்ப்பு என்று மாற்றப்படட்டும்.

10)இது ஒரு சின்ன உதாரணம்.சின்ன விசயத்தைப் பெரியதாக்கிவிட்டதாக நினைக்கலாம். சிறியதிலே நறுக்கி விட்ட திருப்தி இருக்கிறது எனக்கு. பேச பல செய்திகள் இருக்கும்போது சிஸ்டர் என்று அழைத்துப் பின் பிசிக்கலாகக் கவனித்துக் கமெண்ட் செய்வது அவர் எல்லை தாண்டும் நிலையாகத்தான் கருதுகிறேன். அவர் அவர் நண்பர்களுடன் என்னைப்பற்றி எப்படியும் பேசித்தொலையட்டும். என்னிடம் நேரடியாகப் பேசினால் என்னைக் “கிள்ளுக்கீரையாக” கவனிப்பதாகவே உணர்கிறேன்.

11) உங்கள் வீட்டில் உள்ள “மால் (செம்ம கட்டை) எல்லாம் நலமா ? என்று கேட்டால் அந்த டாக்டர் எப்படி உணர்வார் என்று யோசிக்கிறேன்.

12) வெளியில் பேசுங்கள். பேசாமல் இருத்தல் பலவீனம்…

நட்பு என்ற ரீதியில் ஐடி போன்ற துறைகளில் மானாவாரியாகத் தங்களுக்குள் கமெண்ட் அடித்துக்கொள்வதையும் இங்குப் பேசுவதையும் ஒரே விதமாக எடுக்க முடியாது. ஏனெனில் நட்பெனில் அங்கு ரேங்க் சீனியர் ஜூனியர் பேதங்கள் இருக்காது. அது போலச் சிலர் குடும்பத்தினர் போலப் பழகுவார்கள். உரிமையாகப் பேசுவார்கள். அவர்களுக்க்கானது அல்ல இந்தப்பதிவு.

“உங்கள் வீட்டிலிருக்கும் மால்களுக்கு (செம்ம கட்டைகளுக்கு) இனிய ஹோலி வாழ்த்துக்கள் என்று” சொன்னால் அந்த டாக்டர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Revathi Sathish, AIIMS, Jodhpur.

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.