கருத்து

உ. பி. ஆட்சி மாற்றம்; அகிலேஷ், மாயாவதி செய்யத் தவறியவை

உத்திரபிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 322 இடங்களைப் பிடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம்? எழுத்தாளர் அன்புசெல்வம் தரும் சில காரணங்கள்…

அன்பு செல்வம்

  • உ.பி -யில் பாஜக வெற்றி பெற்றது புதிய விசயமல்ல. ஏற்கனவே கல்யாண்சிங், ராம் பிரகாஷ் தலைமையில் ஆட்சி இருந்திருக்கிறது.

  • மத வெறுப்பு அல்லது மதப் புறக்கணிப்பு என்பதை விமர்சித்தவர்கள் ஓபிசி. “சாதித் தொகுப்பு – Caste Consolidation” மேற்கொண்ட வியூகங்களை கண்டு கொள்ளாமல் விடப்பட்டதை இந்த தேர்தல் முடிவிலும் காண முடிந்தது.

  • முலாயம் இருந்தவரைக்கும் சமாஜ்வாடி கட்சிக்குரிய‌ “சோசலிஸ்ட் – செக்குலரிசம்” பேச்சுக்கள் கொஞ்சம் இருந்தன‌. அகிலேஷின் ஆட்சியில் “சோசலிச‌” பேச்சு மருந்துக்கு கூட‌ இல்லை. அனுபவமற்ற ஆட்சிமுறை (Immature Ruling), மாநில முன்னேற்றத்துக்கான வேலைத்திட்டம் இல்லாமல் தொடர் குடும்பச் சண்டை, இளைஞர்களைக் கொண்ட குண்டாயிசம், பாலியில் குற்ற‌ச்சாட்டு.

  • கடந்த 37 ஆண்டுகளில் காங்கிரஸ் தலித்துகளுக்காக எதையும் செய்யவில்லை என பரப்பப்பட்ட தொடர் பிரச்சாரம். பாமர மக்களை ஈர்க்காத ராகுலின் பேச்சு.

  • மோடியின் அபாரமான பேச்சாற்றல் (Oration), அதில் வெளிப்படும் குறைந்தபட்ச‌ சமூக சித்தாந்தப் பேச்சு (Social Theory), “தீபாவளி – ரம்ஜான்” இணக்கமான யுக்திகள் (Harmony Strategy), அமித்ஷாவின் கள வேலை.

  • அம்பேத்கர் மகாசபா தலைவர் லால்ஜி பிரசாத் நிர்மல், மெவானி மேற்கொண்ட‌ “தலித் – இஸ்லாமியர் – இடதுசாரி” தோழமை அவர்களையும் தொகுப்பாக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியையும் பலப்படுத்தவில்லை.

  • சட்டமன்ற தொகுதிகளை பகுஜன் சமாஜ் பணத்துக்கு விற்கத் தொடங்கியதை விமர்சித்து மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவும், ஆர்.கே. சௌத்ரியும் கட்சியிலிருந்து வெளியேறியது.

  • காங்கிரசிலிருந்து வெளியேறிய முஸ்லிம் எம்.எல்.ஏக்களும் (நவாப் காசிம் அலிகான், முஸ்லிம் கான், தில் நவாஸ் கான்), அதேபோல சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் எ.எல்.ஏ நவாசிஸ் நவாஷ் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்ததும், கட்சியின் பொதுச் செயலாளர் நஸிமுதின் சித்திக்கின் கள வேலைகளும் ஏழை இஸ்லாமியர்களைக் பெரிதும் கவரவில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s