சர்ச்சை

“பிரைவேட் லிமிடெட்’ ஆன சுற்றுச்சூழல் இயக்கம்”: ஆர். ஆர். சீனிவாசன் குற்றச்சாட்டு

சுற்றுச்சூழல் இயக்கமான பூலகின் நண்பர்கள் அமைப்பை கைப்பற்றி பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக சிலர் மாற்றிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் (தமிழ்நாடு) அமைப்பைச் சேர்ந்த ஆர். ஆர். சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தோழர்கள் அனைவருக்கு பசுமை வணக்கம், சில தினங்களுக்கு முன்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பிற்கு ஏகபோக உரிமை கொண்டாடிவருகிற பொறியாளர் சுந்தர்ராஜன், வழக்கறிஞர் சுந்தரராஜன்,வெற்றிச்செல்வன் குழுவினர் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை அதிதீவிரவாத அமைப்பொன்று கைப்பற்ற முனைவதாக முகநூலில் பதிவிட்டிருந்தனர்.

அமைப்பில் பல பத்தாண்டுகளாக செயல்பட்டுவந்த என்னை மிரட்டுவதற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும், அனைவரின் உழைப்பில் உருவான பூவுலகின் நண்பர்கள் நூல்கள் அனைத்தையும் ‘பூட்டை உடைத்து’ பகல்கொள்ளையடித்து சென்ற இவர்களே சொந்த நலனுக்காக ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற மக்கள் இயக்கத்தைக் கைப்பற்றி, ‘பிரைவேட் லிமிடெட்’ ஆக மாற்றியுள்ளனர்.

மறைந்த தோழர் நெடுஞ்செழியன், அவருடைய நண்பர்களால் 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் பெயரை நாங்கள் மட்டுமே பயன்படுத்துவோம் என்று இவர்கள் குழு தன்னிச்சையாகவும் அடாவடியாகவும் அறிவித்துக்கொண்டு செயல்பட்டுவருகிறது. 25 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இயங்கி வந்த அமைப்பின் பெயரை, வேறு யார் பயன்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சமீபகாலமாக மிரட்டிவந்தனர். அத்துடன் 2009-ல் நிர்வாக வசதிக்காக என்ற முகமூடியுடன் டிரஸ்டாக பதிவு செய்த ஆவணங்களில் உள்ளவர்கள் மட்டுமே ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்புப் பெயரில் இயங்குவதற்கு உரிமை கோர முடியும் என அராஜகமாக அறிவித்துவிட்டு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் இருந்து என்னை ‘சட்டப்பூர்வமாக’ நீக்குவதாக அவர்களே அறிவித்துக்கொண்டார்கள்.

நிர்வாகிகள் பட்டியலில் இல்லாத நூற்றுக்கணக்கானோரின் உழைப்பால் வளர்ந்த இயக்கத்தை, சட்டப்பூர்வ டிரஸ்ட் என்ற பெயருடன் வலிந்து கைப்பற்றினார்கள். இவர்களுடைய கைப்பற்றலுக்கு இணங்காமல் மக்கள் பங்கேற்போடு சூழலியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அக்கறையுடனும், ‘பூவுலகின் நண்பர்கள்‘ நெடுஞ்செழியனின் நெருக்கமான தோழர்களின் வற்புறுத்தலின் காரணமாகவும் பூவுலகின் நண்பர்களைத் தோற்றுவித்த பழைய செயல்பாட்டாளர்களோடு, புதிய இளைஞர்களும் இணைந்து பூவுலகின் நண்பர்கள் (தமிழ்நாடு) என்ற பெயரில் ‘சட்டப்படி’ பதிவு செய்து இயங்கி வருகிறோம் இந்த சூழலில் கையாலாகாத நிலையில், வெற்றுப் புலம்பல்களை மீண்டும் அள்ளி வீச ஆரம்பித்துவிட்டார்கள்.

‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தை புராஜெக்ட் எழுதிப் பணம் பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனம் போலவும், சூழலியல் சிக்கல்களை நீதிமன்ற வழக்குகளுக்குள் வலிந்து அடைக்கிற போக்கிலும், தனிப்பட்ட தொடர்பில் இருக்கும் சில அரசியல் கட்சிகளிடம் அமைப்பை அடமானம் வைக்கிற வகையிலும், ஜனநாயகமற்ற சர்வாதிகார செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். அதை விமர்சித்துவந்த அருண் நெடுஞ்செழியன் மீது, ஆளும் பா.ஜ.க. அரசு போல ‘அதிதீவிரவாத’ முத்திரை குத்தும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டுவதற்கு சற்றும் குறையாமல் ஜார்ஜின் உழைப்பை பல ஆண்டுகளுக்குச் சுரண்டியவர்கள், முதலாளிகளின் இயல்பை பிரதிபலிப்பதுபோலவே இன்றைக்கு அவர் மேல் அபாண்டமாகப் பொருளாதாரப் பழி சுமத்தி, தங்களை புனிதர்களாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழலியல் பிரச்சினைகள் கூர்மை அடைந்துவருகிற இச்சூழலில், அரசை எதிர்ப்பதைவிட இவர்களைப் போன்றவர்கள் திசைதிருப்புவதற்கு முன்வைக்கும் வெற்று அவதூறுகளுக்கு பதில் சொல்வதே நமது வேலையாக மாறிவிடுமோ என்று தோன்றுகிறது. நேரத்தையும் ஆற்றலையும் இவ்வகையான அறமற்ற போலி அவதூறுகளுக்கு பதில் அளித்து இழக்க விருப்பம் இல்லை. ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு அது உருவாக்கப்பட்ட காலம் முதல் பாரபட்சமற்ற – அக்கறையான செயல்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் மூலமே இயங்கிவந்துள்ளது. எந்த சட்டப்பூர்வப் பூச்சாண்டி வேலைக்கும் அது அஞ்சாது. நம் மண்ணைக் காக்க, மக்களைக் காக்க களம் காணும் ஒவ்வொருவரும் பூவுலகின் நண்பர்களே!

பூவுலகின் நண்பர்களுக்காக,

ஆர் ஆர் சீனிவாசன் மற்றும் தோழர்கள்

12.03.2017

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: