செய்திகள்

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்பது அவமானம் இல்லையா? : தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி….

தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவ கல்லூரிகள் தங்களிடம் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை அரசிடம் ஒப்படைப்பது இல்லை என்று தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அப்போது “‘நீட்’ தேர்வை பிற மாநிலங்கள் எதிர்க்காத போது, தமிழக அரசு மட்டும் ஏன் விலக்கு கேட்கிறது? தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தையும், அவர்களது திறமையையும் தமிழக அரசு குறைத்து மதிப்பிடுகிறதா? பிற மாநில மாணவர்களை விட தமிழக மாணவர்களின் கல்வி தரம் குறைந்திருக்கிறது என்று அரசு நினைக்கிறதா? தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழகத்துக்கு அவமானம் இல்லையா?” என்று கேட்டார்.

தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஏன் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தயக்கம் காட்டுகிறது? தனியார் மருத்துவ கல்லூரிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றால், அந்த தடை உத்தரவை எதிர்த்து ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதில்லை? என்றும் நீதிபதி கிருபாகரன் அப்போது வினவினார்.

இவ்வாறு செயல்படுவதால், மருத்துவ கல்லூரிகள் எல்லாம் வியாபார நிறுவனமாகி விட்டது என்றும் கோடிக்கணக்கில் செலவு செய்து மருத்துவ படிப்புகளை முடிக்கும் டாக்டர்களிடம் இருந்து சேவை மனப்பான்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றும் அவர் அப்போது சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s