சர்ச்சை செய்திகள்

இஸ்லாமியரான கமல்ஹாசன் அவருடைய மதத்தில் கவனம் செலுத்தவேண்டும் : தினமணி க்ரூப் கட்டுரையால் அதிர்ச்சி ….

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது ஆணவ படுகொலை குறித்த கேள்வி ஒன்றுக்கு   “மகாபாரதத்தின் சூதாட்ட படலத்தில் இருந்து நாம் மீண்டதாகவே தெரியவில்லை. பெண்ணை வைத்து சூதாடிய கதையை புத்தகமாக எழுதி அதை படித்தவர்கள் நாம். பெண்களை கவுரவத்தின் அங்கமாக வைத்து, அவர்களை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறோம்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறி இருந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் இந்த பேச்சை எதிர்த்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் குழுமத்தை சேர்ந்த பைனான்சியல் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிக்கையில் நேற்று முன் தினம் நீண்ட  நெடிய கட்டுரை ஒன்று வெளியானது.

Is Kamal Haasan anti-Hindu, does he even know what he is talking about?  என்ற தலைப்பில் வெளியான அந்த கட்டுரையை மனிகா குப்தா என்பவர் எழுதி இருந்தார்.

இந்து மதத்திற்கு எதிரானவர் கமல்ஹாசன் என்று எடுத்த எடுப்பிலேயே கமல் மீது தீர்ப்பெழுதப்பட்ட அந்த கட்டுரையில்,  அதற்கும் ஒருபடி மேலாக சென்று, கமல்ஹாசன் ஒரு இஸ்லாமியர் என்றும் அர்ச்சனை செய்யப்பட்டிருந்தது.

இந்துக்கள் மதிக்கும் புராணம் ஒன்றை விமர்சனம் செய்வது கமலுக்கு தேவையில்லாத வேலை என்றும், த்ரவுபதி வாழ்ந்த காலத்தை கணக்கில் எடுத்து விமர்சனம் செய்யவும் கமல் தவறிவிட்டதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கமல்ஹாசன் தன்னுடைய கருத்தின் மூலம், இரு தரப்பினருக்கிடையே பகைமையை தூண்டுவது மட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த மதத்தில் பெண்களுக்கு நிலவும் மோசமான சூழலை கவனத்தில் கொள்ள மறந்துவிட்டார் என்றும் கட்டுரையை எழுதிய மனிகா குப்தா கொந்தளித்திருந்தார்.  மேலும், மகாபாரதத்தில் த்ரவுபதி பற்றி கவலைப்படுவதை காட்டிலும், அவருடைய சொந்த மதத்தில் நிலவும் முத்தலாக் போன்ற பிரச்சனைகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்தலாமே என்றும் மனிகா அறிவுரை கூறி இருந்தார்.

C73v9u1XgAEmZE8.jpgநீண்ட நெடிய செய்தி பாரம்பரியம் கொண்ட எக்ஸ்ப்ரெஸ் குழுமத்தின் இத்தகைய, அரைவேக்காட்டுதனமான கட்டுரை சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

Capture.JPG

இந்து மதத்தை பற்றி குறைகூறினாலே, அவர்களை இஸ்லாமியர்கள் என்று குற்றம்சாட்டும் பொதுபுத்திக்கு பத்திரிகைகளும், ஆளாகி இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தவறுக்கு வருந்துவதாக பைனான்சியல் எக்ஸ்ப்ரெஸ் கூறியுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.