செய்திகள்

கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியானது; ஆதார் எண் பாதுகாப்பானதுதானா ?

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, சமீபத்தில் தனக்கு ஆதார் எண் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.  இப்பணியில் ஈடுபட்ட சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம்,  போட்டோக்களுடன் ட்விட்டரில் வெளியிட்டது. அதில் தோனி தன் கைரேகைகளை பதிவு செய்யும் போட்டோ மட்டுமல்லாமல், அவரது ஆதார் விண்ணப்ப போட்டோ ஆகியவையும் பதிவிடப்பட்டன.

Capture 2.JPG

இதனால் அதிர்ச்சியான தோனியின் மனைவி சாக் ஷி சிங், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, tag செய்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.  ‛விண்ணப்ப போட்டோவை வெளியிடலாமா; தனி மனித சுதந்திரம் என்பது இருக்கிறதா ? இல்லையா ?” என்று வினவினார்.

Capture.JPG

இதற்கு பதில் அளித்த ரவி ஷங்கர் பிரசாத், “தனிமனித விவரங்கள் ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா” என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் வெளியிட்ட புகைப்படங்களை சாக்ஷி பகிர்ந்தார்.

Capture1.JPG

தொடர்ந்து,  இப்பிரச்சனை தொடர்பாக விசாரணையும், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் என்று கூறியுள்ளார்.

capture-2.jpg

இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ள கருத்தில், ’இது போல தனிப்பட்ட விவரங்கள் வெளியாகுவது  மிகப்பெரிய அவமானம். இதற்காக பிரஷாத் உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன், தோனிக்கு வேறு ஆதார் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s