சமூகம்

அசைவத்தினால் ஆன உலகு; தினசரி வாழ்வில் நம்மை சூழ்ந்திருக்கும் அசைவம் பற்றித் தெரியுமா சைவத் தீவிரவாதிகளே….

முத்துகிருஷ்ணன்

 1. கண் விழித்ததும் நீங்கள் தேடும் உங்களின் பற்பசையில், கோமாதா என்று உங்களால் வணங்கப்படும் பசு மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட கிளிசரின் கலந்திருக்கவில்லை என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா ? ஆமாம். கிளிசரின் மாட்டுக்கொழுப்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அது கோல்கேட், க்ளோஸ்-அப், பியர்ஸ் அல்லது நீங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பிரான்ட் பற்பசையாக வேண்டுமானால் இருக்கலாம். அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கிளிசரின்  சோயா அல்லது பனை போன்ற சைவ பொருட்களில் உருவாக்கப்பட்டது என்று எண்ணுகிறீர்களா ? சரி உங்களின் நம்பிக்கையை மதித்து கேட்கிறேன்…. அசைவ கொழுப்பை விட பல மடங்கு செலவாகும் சைவ கொழுப்பைத்தான் இந்த பற்பசைகளில் கலந்திருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறீர்களா ?
  1. நீங்கள் உபயோகப்படுத்தும் ஷேவிங் கிரீம், சோப், தலை முடி கிரீம், ஷாம்பூ, கண்டிஷனர்கள், மாய்ஸ்சரைசர்கள்,  போன்றவை உங்களின் கோமாதாவில் இருந்து தயாரிக்கப்படவில்லை என்று உறுதியாக நம்புகிறீர்களா ? இந்த பொருட்களில் உபயோகப்படுத்தப்படும்   “Panthenol”, “Amino acids”, அல்லது  “Vitamin B” போன்றவற்றுக்கெல்லாம் விலங்குகள் அல்லது செடிகள்தான் உற்பத்தி மூலம்.  உபயோகிப்பதற்கு முன் நீங்கள் தெளிவு பெற்று விடுவது உசிதம்.  துணிகளை மென்மையாக்கும்  Dihydrogenated tallow dimethyl ammonium chloride-ன் மூலம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு ??
  2. பல் தேய்த்து விட்டீர்களா ? நல்லது. அடுத்து காபிதானே ? ஆனால் சற்றுப் பொறுங்கள்…. காபிக்கு நீங்கள் உபயோகப்படுத்தும் சர்க்கரை,  பசு மாட்டின் எலும்புகளால் வெண்மைப்படுத்தப்படுகிறதா ? அல்லது வேறு மூலப் பொருட்களினாலா?  என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.
  3. காலை உணவிற்கு செல்லலாம். உங்கள் டைனிங் டேபிளை நிரப்ப போவது ஏது ? பூரி சப்பாத்தி சோலாபூரி ? இவற்றை சமைப்பதற்கு நீங்கள் உபயோகப்படுத்தும் “அதானி நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்” மாட்டுக்கறியின் கொழுப்பினால் கலப்படம் செய்யப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா ? உங்களின் தகவலுக்கு……  வனஸ்பதியில் மாட்டுக்கறி கொழுப்பு பயன்பட்டது என்பதற்காக, இந்திரா காந்தியின் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட  அசைவ கொழுப்பின் மீதான தடையை, 32 வருடங்களுக்கு பிறகு நீக்கி இருக்கிறது நீங்கள் தேர்வு செய்த தேசப்பற்று மிகுந்த மத்திய அரசு.
  4. சரி. உணவு பழக்கத்தில் இருந்து வெளியே வருவோம். வாகனங்களில் உங்களின் விருப்பத் தேர்வு ஏது ? பைக் அல்லது கார் ? எதுவாக இருந்தாலும் சரி… அதனுடைய டயர்களைப் பாருங்கள்.  அந்த டயர் உருவாக்கத்தில் , விலங்கிலிருந்து தயாரிக்கப்படும் stearic acid . பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளவும்.
  5. எதையாவது ஓட்ட வேண்டுமா ? glue பயன்படுத்துங்கள். ஆனால்,  கொதிக்க வைக்கப்படும் விலங்கின் திசு மற்றும் எலும்பிலிருந்து எடுக்கப்படும்  glue-வா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  6. சரி. ஷாப்பிங் பக்கம் செல்லலாம். தயவு செய்து பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை தவிர்க்கவும். பெரும்பாலான பிளாஸ்டிக் பை தயாரிப்பில், விலங்கின் கொழுப்பும் இடம் பெற்றிருக்கிறது என்பது தெரியுமா ?

  7. அசைவதிற்காக தினமும் தலித்துகளையும்-இஸ்லாமியர்களையும் அடித்து துவைக்கும் உங்களின் தினசரி நடவடிக்கையில், தவறிக்கூட நீங்கள் காயப்பட்டு விடாதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி காயப்பட்டால், மருத்துவரிடம் செல்லும்போது தயவு செய்து மாத்திரைகளை மட்டுமே வாங்குங்கள். கேப்சியூல்களை அல்ல. ஏனென்றால், கேப்சியூல்களின் உறை விலங்கின் ப்ரோட்டீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அப்புறம்…. நீங்கள் படுகாயமடைந்து, அதற்கு தையல் ஏதாவது தேவை இருக்குமானால், அந்த அறுவை சிகிச்சை இழைகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். சாதரணமாக, அவை “உங்களின் கோமாதா, புனிதப் பசுவின் குடலில்” இருந்துதான் உருவாக்கப்படும்.

  8. மன உளைச்சலாக இருக்கிறதா. சரி கொஞ்சம் விளையாட்டு பக்கம் போகலாம்.  IPL  பார்க்கலாமா ? ஆனால், அதற்கு முன் ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கிரிக்கெட் பந்தின் மீதான , தோல் உறை, கன்றுக்குட்டியின், ஆமாம் கன்றுக்குட்டியின் தோலில் இருந்துதான் செய்யப்படுகிறது என்பதை சொல்லி விடுகிறேன்.

  9. ஓகே. நோ டென்ஷன். ஒரு சிகரட் அடிக்கலாம். ஆனால், சிகரெட் கூட அசைவம்தான். சிகரெட்டின் முனை பன்றியின் ரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை சொல்லி விடுகிறேன். குட்கா ?  காட்டு எருமை, ஆப்பிரிக்க எருமை போன்ற மிருகங்களின் தோலை சுத்தப்படுத்தும்போது, கிடைக்கும் கழிவுகளில் இருந்துதான் குட்காவிற்கான சுபாரி தயாரிக்கப்படுகிறது. இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் குட்காவில் பிறகு எந்த சுபாரியை எதிர்பார்க்கிறீர்கள்?. கான்பூர்தானே சுபாரிகளின் தாய்வீடு. அதுதானே தோல் பதனிடும் சாலைகளுக்கான முக்கிய நகரம் என்றழைக்கப்படுகிறது? சந்தேகமா ? கூகிள் செய்யுங்கள்.

  10. சரி. இந்த சிகரெட், குட்கா, இவை எல்லாம் உடல்நலத்திற்கு கேடானாவை. அதனால் அவற்றில் இருந்து வெளி வரலாம். கேண்டீஸ், ஜெல்லி, என்று சிறுவர்களுக்கு விருப்பமான இனிப்புகள் பக்கம் செல்லலாமா ? அவை எல்லாம் விலங்குகளின் எலும்பில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது என்பதாவது தெரியுமா ? அட.. உங்கள் இல்லப் பெண்கள் உபயோகப்படுத்தும் லிப்ஸ்டிக். அதுவும் விலங்கின் கொழுப்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

உங்களின் நம்பிக்கைகளை சிதைப்பவர்கள் தலித்துகளும்-இஸ்லாமியர்களும் அல்ல. கார்பரேட்கள்தான் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களை அடித்து நொறுக்க உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா ?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.