சினிமா

“அநாகரீகமான பேச்சுக்கள், அலட்சியங்களே தயாரிப்பாளர் சங்க மூத்த நிர்வாகிகளின் தோல்விக்குக் காரணம்!”

அநாகரீகமான பேச்சுக்கள், அலட்சியங்களே தயாரிப்பாளர் சங்க மூத்த நிர்வாகிகளின் தோல்விக்குக் காரணம் என  இயக்குனரும் தயாரிப்பாளருமான மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். தன்னுடைய முகநூல் பதிவில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்து பதிவிட்டுள்ள அவர்,

“கடந்த நான்கு வருடங்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இரண்டு தலைவர்களிடமும் இரண்டு விதமான பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறேன். அவர்கள் நினைத்திருந்தால் சில மணி நேரங்களிலேயே அதற்கு ஓர் தீர்வை அளித்திருக்க முடியும். ஆனால் மிகுந்த அவநம்பிக்கையும் மன உளைச்சலையுமே பெரும் அனுபவங்களாகப் பெற்றேன். விழித்திரு படத்தின் வெளியீடு தாமதமானதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று என்பது என் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். சங்கத்திற்கு அலைந்து களைத்தவர்களில் நானும் ஒருவன்.

என்னைப் போன்றவர்கள் கண்கூடாகப் பார்த்த அநாகரீகமான பேச்சுக்கள், அவநம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள், அலட்சியமான போக்குகள் இவையனைத்துமே மூத்தவர்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணிகளாக இருந்தன என்பது முற்றிலும் உண்மை. தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் என்னைப் போன்ற பல இளம் தயாரிப்பாளர்களைச் சந்தித்து உரையாடியபோது அவர்கள் வெளிப்படுத்திய விசயமும் அது தான்.

தெளிவான குறிக்கோள்களும் திட்டங்களையும் கொண்ட விஷால், கவுதம் மேனன்,எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா மற்றும் பலரும் அடங்கியிருக்கிற இந்த புதிய அணியின் வெற்றி என்பது என்னைப் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கியிருக்கிறது. எளியவர்கள் விரும்பியது, பிரார்தித்தது இன்று நடந்திருக்கிறது. புதிய ரத்தம் பாய்ச்சப்போகும் வெற்றியாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இனியொரு விதி செய்வேம்.!” என புதிய நிர்வாகிகளை வாழ்த்தியுள்ளார்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s