சர்ச்சை

கருப்பான தென்னிந்தியர்களையே சகித்துக்கொள்ளும் நாங்களா இனவெறியாளர்கள் ? பிஜேபியின் தருண்விஜய் வன்ம பேச்சு…

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பிஜேபி கட்சியின் முன்னாள் எம்பியும், வள்ளுவர் சிலை அமைக்கப் போவதாக பேசி வருபவருமான தருண் விஜய் பேட்டியளித்தார்.

அப்போது ஆப்பிரிக்க நாட்டவர் மீது டெல்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் “தென்னிந்தியார்களையே சகித்துக்கொள்ளும் வடஇந்தியர்கள், எப்படி இனவெறியாளர்களாக இருக்க முடியும் ? என்று வினவினார்.  தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவை பாருங்கள். எங்களை சுற்றிலும் கறுப்பர்கள்தான் வாழ்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து தருண் விஜய் தன்னுடய பேச்சு குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.

“நாங்கள் இனவெறி கொண்டவர்கள் அல்ல. அப்படியிருந்தால் கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?”

– இப்படி டிவிட்டரில் கேட்டிருக்கிறார் தருண் விஜய். இவர் தான் தமிழை வளர்க்கிறேன், திருவள்ளுவரைப் போற்றுகிறேன் என்று புருடா விட்டுக்கொண்டிருப்பவர். நம்ம ஊர் வைரமுத்து போன்ற பெரிய மனிதர்கள் இவருக்கு அல்லக்கைகள்.

நாம் கருப்பாக இருப்பதையும் பொருட்படுத்தாது, பெரிய மனதுடன் நம்முடன் சேர்ந்து வாழ்கிறார்களாம் “சிவப்புத்தோல்” வட இந்தியர்கள்.

இது தான் வட இந்தியர்களின் உண்மையான மனநிலை.

அவர்களைப் பொருத்தவரை தென்னிந்தியா அவர்களது காலனி (colony).

நாம் அவர்களது வேலைக்காரர்கள். இரண்டாம் தர குடிமக்கள்.

இந்த ஒரு அறிக்கையே போதுமே அவர்கள் எத்தகைய இனவெறி கொண்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள.

இதில் கட்சி பேதம் இல்லை.

லல்லு, முலாயம், சரத் யாதவ் கூட தென்னிந்தியர்களை பல முறை இழிவாகப் பேசியவர்கள் தான்.

இந்தியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் தான்.

இந்தியா எனும் தேசம் இனும் வளரவில்லை.

இந்தியர்கள் நிறவெறியர்கள் கிடையாது. அப்படி இருந்திருந்தால் “கருப்பர்களான” தென்னிந்தியர்களுடன் நாம் சேர்ந்து இருந்திருக்கமாட்டோம்.

இப்படி ஒரு முத்தை உதிர்த்து இருப்பவர் பிஜேபியின் எம்.பி தருண் விஜய். இவர் திருக்குறளை புகழ்ந்து பேசினார் என்பதால் நம் கருப்பு வைரம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் கொண்டாடப்பட்டவர்.

தமிழை, தமிழர்களை புகழ்பவர்களை எல்லாம் ஈரோட்டு கண்ணாடி போட்டுப்பார்த்தால் யாரென்று புரியும். முக்கால்வாசி பேரு இன, மத, சாதி வெறியன் தான்!

அப்புறம்.. இந்த ஆரியம் திராவிடம் எல்லாம் மாயைங்க. அப்படி எல்லாம் எதுவுமில்லை. சந்தேகம் இருந்தால், முதல் பத்தியை திரும்ப திரும்ப படிங்க!

Advertisements

பிரிவுகள்:சர்ச்சை

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s