தலித் ஆவணம்

தலித்துகள் தொழில் செய்யக்கூடாதா?

கருப்பு கருணா

கருப்பு கருணா

திருவண்ணாமலையிலிருந்து எட்டு கிமீ தூரத்தில் உள்ளது சோமாசிபாடி எனும் கிராமம். இங்குள்ள காந்திநகர் குடியிருப்பில் முழுதும் உடலுழைப்பு தொழிலாளிகள்.அதிலும் செங்கல் அறுப்பதிலும் சூளை வைப்பதிலும் கெட்டிக்காரர்கள். த மு எ க ச வின் கலை இலக்கிய இரவு சமயங்களில் படையாக திரண்டு வந்து வேலை பார்ப்பார்கள். ஒரு நாள் கூலி போகுதேன்னு யோசிக்காமல் நாடகங்களில் நடிப்பது தொடங்கி…வசூல் செய்வது வரை அனைத்தையும் கடும் உழைப்பை சிந்தி செய்துமுடிப்பார்கள். அந்த தோழர்களில் முக்கியமானவர்கள் ரவியும் மதி என்னும் மதியழகனும்.

இதில் ரவி கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டான். மதி கடுமையான உழைப்பின் மூலம் ஜேசிபி இயந்திரம் வாங்கி தொழில் செய்தான். தொழில் போட்டியில் ஜேசிபியால் கடனே வந்தது. கடனை அடைக்க மீண்டும் செங்கல் அறுக்கும் வேலைக்கு போய்வந்து கொண்டிருந்தான்.

நேற்று முந்தினம் அவனுக்கு திருமண நாள். மாலையில் மதியை சிலர் வந்து அழைத்துச்சென்றனர். இரவு 7 மணி அளவில் சிறுநாத்தூர் அருகே மதி விபத்தில் சிக்கி விழுந்து கிடப்பதாக அறிந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருக்கும் மருத்துவர்கள் ஒப்புக்கு பரிசோதித்துவிட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு போய்டுங்கன்னு சொல்லிவிட்டனர். (விபத்துக்கூட சிகிச்சையளிக்க முடியாத நிலையில்தான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் லட்சணம் இருக்கிறது )

வேலூர் அடுக்கம்பாறையில் சிகிச்சையளித்துவிட்டு கொஞ்ச நேரத்தில் இறந்துவிட்டதாக உடற்கூராய்வு செய்து உடலை தந்தனர். ஆனால் உடலில் சிறு சிராய்ப்புகூட இல்லாத நிலையில் உச்சந்தலையில் மட்டுமே பெருங்காயம் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தவே அவ்வூர் இளைஞர்கள் போலீசில் இது கொலையாக இருக்கும் என புகார் கொடுத்ததை போலீஸ் வாங்கவில்லை. அங்கிருந்த வைக்கோல் புதரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியையும் கையுறைகளையும் கண்டெடுத்து போலீசில் சொல்லியும்கூட போலீஸ் காதில் வாங்கவில்லை.

இந்நிலையில் இன்று காலையில் தகவலறிந்து போய்சேருவதற்குள் அங்கிருந்த தோழர்களும் மக்களும் சடலத்தை சாலையின் குறுக்கே போட்டு சாலை மறியலில் இறங்கிவிட்டனர். போராட்டத்தால் சென்னை – திமலை சாலையில் போக்குவரத்து முடங்கியபின்னர்தான் போலீஸ் இறங்கிவந்தது. மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன், நான் பாலாஜி உள்ளிட்ட த மு எ க ச நிர்வாகிகளும் போலீசுடன் பேசினோம். விபத்து வழக்கு என்பதை மாற்றி 302 வது பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யவேண்டும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், உடலை மறு கூராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். நீண்ட பேச்சுக்குப்பின் ஏ. எஸ்.பி. கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தபின்பே…4 மணிநேர போராட்டத்திற்குப்பின் மறியல் கைவிடப்பட்டது. மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமைதான் உடற்கூராய்வு நடக்கும்.

அதுவரையிலும் மார்ச்சுவரியில் காத்திருப்பான் மதி.

மதியை கொன்றவர்கள் யார்..? வேறு யாராக இருக்க முடியும்..! அதே ஆண்ட பரம்பரை ஊடு கொளுத்திகள்தான்…

காரணம் என்ன…? வேறென்ன…! கைக்கட்டி கூலி வேலை பார்த்தவன்..தொழிலுக்கு போட்டியாக வருவதா என்ற சாதியத்திமிர்தான்..

கொலையான மதி என்ன சாதி..? இப்படி நடுரோட்டிலேயே வெட்டப்பட்டு சாவதற்கென்றே விதிக்கப்பட்ட சாதிதான்….தலித்…

கருப்பு கருணா, சமூக செயல்பாட்டாளர்.

Advertisements

One comment

 1. /// காரணம் என்ன…? வேறென்ன…! கைக்கட்டி கூலி வேலை பார்த்தவன்..தொழிலுக்கு போட்டியாக வருவதா என்ற சாதியத்திமிர்தான்.. //
  —————–

  பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம்:

  திருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.

  சிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.

  “நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால், அவரால் பார்ப்பனியத்தை ஒழிக்கமுடிந்ததா?. புத்தரையும் பௌத்த மதத்தையும் பார்ப்பனீயம் முழுங்கிவிட்டதென்றால் மிகையாகாது.

  இந்தியா, சீனா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பௌத்த மடங்களனைத்தும் உயர்ஜாதி புத்தபிட்சுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதே உயர்ஜாதி கீழ்ச்சாதி வேற்றுமைகள் பௌத்தத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினால், அங்கேயும் அதே தாழ்ந்த ஜாதி முத்திரையுடன்தான் நடத்தப்படுவர் என்பதுதான் யதார்த்தம்.

  இது தவிர, “ஹிந்து தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு, மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது” எனும் அல்வாவை ப்ராஹ்மின் பனியா கூட்டுக்களவானிகள் அம்பேத்கருக்கு கொடுத்தனர். ஆனால், இன்று 60 வருடங்களாகியும் தலித்துக்களின் நிலையென்ன?. எத்துனை தலித்துக்கள் இட ஒதுக்கீட்டால் பயனடைந்தனரென்று சிந்தித்தால் உண்மை வெளிப்படும்.

  வேதனையின் உச்சகட்டம் என்னவென்றால், பயனடைந்த தலித்துக்களனைவருமே நவீன பார்ப்பனராகி விட்டனரென்பதுதான் கண்கூடு. ஆம். இன்று தலித்துக்களின் மிகப்பெரிய எதிரியே இந்த நவீன பார்ப்பனர்தான் என்றால் மிகையாகாது. இட ஒதுக்கீடு எனும் எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எந்த ஜென்மத்திலும் தலித்துக்களுக்கு விடிவுகாலம் வரவே வராது.

  பார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் அவனுக்கு கதிகலங்கிவிடும்.

  ஆகையால்தான் தந்தை பெரியார் “ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.