சர்ச்சை

மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள்! : மீனா சோமு

மீனா சோமு

மீனா சோமு

“கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு தங்களை தலித்துகளாக உணர்வதென்பது, அவர்கள் இன்னும் சாதியை கடக்கவில்லை என்று கருதுவதற்கே இடமளிக்கிறது.”

கட்சிகள் அமைப்புகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!” -தோழர் Kotravai N

தலித் என்பது ஜாதியல்ல, தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் ஜாதிய அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் உணர்வு. தோழர் கொற்றவை போன்ற சில மார்க்ஸிய தோழர்களுக்கு மார்க்ஸ் சொன்ன “proletariat consciousness” என்றால் என்னவென்று புரியாது போல. அது தெரிந்தால் “Dalit consciousness” பற்றியும் புரியும். இப்படி அபத்தமா தலித் என்ற உணர்வை ஜாதிய உணர்வு என்று சொல்ல மாட்டார்கள். பார்ப்பன ஜாதியுணர்வும் மேல் ஜாதி என அந்தந்த ஜாதி மக்களிடையே இருக்கும் ஜாதிய உணர்வு தான் “ஜாதி மனநிலை”. “தலித் உணர்வு” என்பது அத்தகைய ஜாதிய ஒடுக்குதலுக்கு எதிர்ப்பு உணர்வு( நிலை). எப்போது தான் தோழர் கொற்றவை போன்றவர்களுக்கு சித்தாந்த தெளிவு ஏற்படும் என புரியவில்லை.

தொழிலாளர் புரட்சி ஏற்ப்பட proletariat consciousness முதல் கட்டமும் அவசியமான ஒருங்கிணைக்கும் நிலை. தொழிலாளர்களது வர்க்க உணர்வு ஒற்றுமை ஏற்ப்படவில்லை எனில் சோசலிச புரட்சியே சாத்தியமில்லை. அது போல ஜாதிய கட்டமைப்பை உடைக்க Dalit consciousness என்பது அவசியமான முதற்நிலை. அதை ஜாதியோடு ஒப்பிடுவது, முதலாளிகளின் வர்க்க சிந்தனையை தொழிலாளர்களது வர்க்க உணர்வோடு ஒப்பிட்டு கூறுவது போல அபத்தமானது. அத்தகைய அபத்தமான கருத்துக்களை தொடர்ந்து மார்க்ஸியவாதிகள் என சொல்லிக்கொள்ளும் ஒரு சிலர் (மார்க்ஸிய தூய்மைவாதிகள்) உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

தூய்மைவாதம் என்பது மத அடிப்படைவாதத்தோடு சம்பந்தப்பட்டது. இது போன்று தூய்மைவாதம் என்று அபத்தமான கருத்துக்களை முன் வைப்பவர்கள், தங்களை மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள், அடிப்படைவாதிகள் என அழைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் மார்க்சிய சிந்தனையின் அடித்தளம் இல்லவே இல்லை.

நான் ஒரு தலித்தாக இருப்பதாலேயே மார்க்ஸியவாதி என என்னை உணர்கிறேன் என்று என்னால் சொல்ல இயலும்.

Fundamentalism is closely related to religious fanaticism, so please call yourself fundamentalist rather than Marxist.

I am a Dalit and I turn to be a Marxist as I naturally stand against the system which suppresses me.

மீனா சோமு, எழுத்தாளர்.

Advertisements

6 replies »

  1. // நான் ஒரு தலித்தாக இருப்பதாலேயே மார்க்ஸியவாதி என என்னை உணர்கிறேன் என்று என்னால் சொல்ல இயலும்.//
    ——————-

    எனக்கு தலித்துனு பேரு வக்க நீ யாரடா நாயே? —— நேர்காணல் : அய்யா சி. சாமுவேல் பறையர் — by வேப்பூர் திருடன்

    தமிழகத்தின் தலித் போராட்டக் களத்தில் நன்கு அறிமுகமானவர் அய்யா சி. சாமுவேல் பறையர். விருதுநகர் மாவட்டம் சோமையாபுரத்தைச் சார்ந்தவர். இளமைக்கல்வியை தனது கிராமத்தில் முடித்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். சிறந்த புத்தக வாசிப்பாளர். இந்திய சுதந்தரத்துக்குப் பின் தன் பெயருக்குப் பின்னால் “பறையர்” என்கிற அடைமொழியை ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாளாகப் பிரயோகித்து, அவர்களின் சமூக – அரசியல் நடவடிக்கைகளில் தனித்த அடையாளத்தை நிறுவியர் இவராகத்தான் இருக்க முடியும். கிறித்துவராக இருந்தாலும் மதம் என்கிற கருதுகோலின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, ஆதிகுடிகளின் வரலாற்றில் நின்று பயணிப்பவர். தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவர். பறையர் குரல் என்கிற பத்திரிக்கையின் ஆசிரியர்.

    மதுரை தலித் ஆதார மய்யத்தின் சார்பில் 2002 -ல் தமிழகத்தில் உள்ள சில‌ தலித் தலைவர்களுடன் ஓர் உரையாடலைத் தொடங்கிய‌போது, 2002 ஆகஸ்டு மாதம் சென்னையில் முல்லை அச்சகத்தில், அய்யா சாமுவேல் பறையர் அவர்களுடனும் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. விறுவிறுப்பான, சுவராஸ்யமான உரையாடலாக இருந்தாலும் அவருக்கே உரித்தான விமர்சனப்பார்வையில் இது அமைந்தது. சூழல் சார்ந்து அன்றைக்கு “தமுக்கு” ஆங்கில இதழில் வெளியிடப்படாத இந்த நேர்காணலை அவரின் நினைவேந்தலுக்காக வெளியிடுவது காலத்திற்கு மிகவும் பொருத்தமானது.
    ———————————————-

    கேள்வி : அய்யா வணக்கம். தலித் ஆதார மய்யத்தின் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கிங்க?

    பதில்: அது கிடக்கட்டும். அது என்னா தலித்து. எவன்டா இத கண்டு புடிச்சது. இருக்கிற பறையன எல்லாம் கூப்பிட்டு மதுரையில தலித்து, தலித்துன்னு கூட்டம் போட்டுக்கிட்டு. இதுல தலித்து கலை விழாவாக்கும். வெளிநாட்டு பணத்தை வாங்கி உயிர்பொழைக்கிறதுக்கு எங்கள ஏன் அடகு வக்கிறீங்க. இதுல என் ஊர்கார பயலுவல்லாம் கூட்டம் சேத்துக்கிறீங்க. (நேர்காணலை தொடரலாமா – வேண்டாமா என எனக்குள் தயக்கம். நண்பர் யாக்கனை பார்த்தேன். அவர் ஒரு பரிதாபப் புன்முறுவலோடு அச்சகத்திலிருந்து வெளியேறினார். சரி என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என உரையாடலைத் தொடர்தேன்).

    கேள்வி : இப்போ தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா தலித் தலைவர்களோடேயும் ஒரு உரையாடல் நடத்தி வருகிறோம். உங்களையும் இச்சமூகத்தின் முன்னோடியாகக் கருதி தான் இந்த உரையாடல் நடத்த விரும்புகிறோம்.

    பதில்: இது வரைக்கும் யார் யாரை சந்தித்து உரையாடல் நடத்தியிருக்கீங்க? (நான் சிலரின் பெயர்களை குறிப்பிட்டேன்). ஹூம், பறைய‌னா பொறந்து தலித்து தலித்துன்னு சொல்லிக்கிட்டு திரியிர இந்த தெருப்புழுதியெல்லாம் உங்களுக்கு த‌லைவனா தெரியுறானுங்க. ஏங்க இவனுங்கல்லாம் என்ன செய்யப்போறானுங்கன்னு நெனைக்கிறீங்க? இதுல வேற தலித்து கலை விழாவுக்கெல்லாம் கூப்பிட்டு அந்த தெருப்புழுதிகளுக்குபதில். மாலை மரியாதை செய்றீங்க‌. என்னத்த சொல்ல.

    கேள்வி : இல்லீங்கய்ய உங்களையும் நிச்சயமா விழாவுக்கு கூப்பிடுவோம்.

    பதில்: எதுக்கு? நான் தான் பறையானாச்சேப்பா. என்னை கூப்புடறது இருக்கட்டும். நான் வரனுமில்ல. அதுவும் ஒரு பறையானா, பறையங்கிற அடையாளத்தோட, அதுவும் ஒரு பறையர் விழா மேடையாக இருந்தா வருவேன்.

    கேள்வி : அம்பேத்கர் சொன்னது போல நாம சாதி ஒழிப்பை மையமாக வைத்து தான் இயங்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது பறையர் என்கிற அடையாளம் ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இருக்குமே. அது நம்முடைய நோக்கத்துக்கும், விடுதலைக்கும் எதிரானதாக இருக்காதா?

    பதில்: ஒனக்கு அம்பேத்கர் சொன்னது இருக்கட்டும். எனக்கு எங்க தாத்தன் ரெட்டமலை சீனிவாசனும், அயோத்திதாசப் பண்டிதரும் சொன்னத நான் பின்பற்றனுமா – வேணாமா? வரலாற்றில் “பறையர்” என்கிற இனம் எப்படி இருந்திச்சின்னே இன்னைக்கு நிறைய பறையர்களுக்கு தெரியாது. பறையர்களுக்கே தெரியாத போது ஒங்க தலித்துகளுக்கு எங்க தெரியபோவுது. அதுக்கு காரணம் வரலாற்றை ஆரம்பத்துல இருந்து படிக்காம, நுனிப்புல் மேய்ஞ்சிட்டு படிச்சா அது ஒரு சாதியாகத்தான் தெரியும். அது ஒரு சாதியில்ல, தமிழக தொல்குடி வரலாற்றில் மூத்த குடியினம் பறையர் சமூகம் தான். இத நான் சொன்னா சாமுவேலு பறையர் பேரவை வச்சிருக்கான், பறையர் குரல் பத்திரிக்கை நடத்துறான் அதனால தான் சொன்னான்னு சொல்லுவானுங்க. நீங்களும் கூட சொல்லுவீங்க. எம்பாட்டன் வள்ளுவன் சொல்லியிருக்கான். சித்தப்பன் தொல்காப்பியன் சொல்லியிருக்கான். அவனுங்க சொன்னத எல்லா பயலும் வரலாறு, இலக்கியம்னு இங்க படிக்கிறான். அத இந்த சாமுவேலு பறையன் சொன்னா சாதியா தெரியுதா? .

    கேள்வி : வரலாறு, இலக்கியம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னைக்கி நடைமுறையில் பறையர் என்ப‌து ஒரு சாதி தானே?

    பதில்: நீ என்ன தம்பி திரும்ப திரும்ப இதையே சொல்ற. ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஒரு சமூகம் எப்படி ஒரு அடையாளத்தை பாதுகாத்து வந்திருக்கும்? என்பத புரிஞ்சா தான் அது சாதியா இல்ல ஒரு சமூகமா இல்ல ஒரு இனமான்னு கண்டுபிடிக்க முடியும். அதுக்கு ஆதாரமா இருப்பது எதுன்னா அந்த சமூகம் செய்து வந்த தொழில், அதைச்சார்ந்த பண்பாடு, அதன் மீது அது கட்டியெழுப்பியிருக்கிற வரலாறு. அப்படி பார்த்தா இந்த தமிழ்நாட்டுல “பறையர்” தவிர்த்து வேறு எந்த இனத்தையும் சொல்ல முடியாது. மற்றவை எல்லாம் பறையர் என்கிற ஒரு இனத்துக்கு எதிரா உருவானது தான் இன்னைக்கு நம்ம கண்ணு முன்னாடி தெரியுற சாதிகள், பிராமணியம், அது இதுன்னு.

    கேள்வி : அப்படி இருக்கும்போது பறையர்கள ஏன் இன்னைக்கு தீண்டப்படாதவரா கருதனும்?

    பதில்: நீங்க சொல்லலையா தலித்துன்னு. அந்த மாதிரி வரலாறு தெரியாத பல பல பட்டறைங்க சொல்லுது. விவசாயத்தையும், மறை ஓதுவதையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தை எப்படி தீண்டப்படாதவனாக்க முடியும்? இந்த சமூகத்துல விவசாயம் செய்வதையும், மறை ஓதுவதையும் யார் செய்ய முடியும்னா எல்லா மக்களையும் நேசிக்கிற, சமத்துவமா நடத்துற, வேறுபாடு காட்டாம பழகுகிற குறிப்பா வரலாறு கட்டத்தெரிந்த அறிவு சமூகம் தான் செய்ய முடியும். இலேன்னா இந்த நாட்டுல, இந்த மண்ணுல திருவள்ளுவன் எப்படி மூத்தகுடி தலைவனா இருந்திருக்க முடியும். அவுனுக்கு எங்க இந்த தீண்டாமை இருந்திச்சு. அவுனுக்கு இல்லாத ஒரு கொடுமை எனக்கு ஏன் பணிக்கப்பட்டது. ஏன்னா நான் அநீதிய ஏத்து போகல, விவசாயத்தை தவிர வேற எதையும் உருவாக்கி யாரையும் அடிமைப்படுத்தல, சைன்ஸ் எங்கிட்ட இருந்திச்சு, வான சாஸ்திரத்துல நான் கெட்டிக்காரன், நாட்டு நடப்ப கணிக்கத் தெரிஞ்சவன், ஒரு சேதிய சொல்லத் தெரிஞ்சவன். இந்த குணம் மத்தவங்களுக்கு ஏற்றுப்போகனும்னா அவர்களும் என்னை மாதிரியே நடந்துக்கனும். அதுக்கு எந்த சமூகம் சாத்தியம் இல்லையோ அது என் தொழிலை, என் பிறப்பை, என் பண்பாட்டை அசிங்கப்படுத்தி என்னையும் அசிங்கப்படுத்துது. இதுக்காக வரலாற்றையே திரிக்கும் வேலையை செய்து நான் பூர்வகாலமா தீண்டப்படாதவனா சொல்வது நுனிப்புல் மேயிறவன் பேசறது. அந்த நுனிப்புல் வரலாறு நமக்கு வேண்டாம். உண்மையான வரலாற்றை பேசுவோம்.

    கேள்வி : அப்போ இன்னைக்கி இருக்கிற சாதிகள எப்படித்தான் ஒழிக்கிறது?

    பதில்: சாதிய பறையனாகிய நான் உருவாக்கல. எனக்கு எதிரா உருவாக்கப்பட்டது தான் சாதி. அந்த சாதியின் எல்லா விஷமத்தனங்களையும் பறையர்கள் ஏற்றுப்போகாத‌தால் அவர்கள் மீதே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் போது எங்க பகுதியில தேவர்கள் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் பண்ணுவாங்க. அதுக்கு காரணம் நிலம் இல்ல, பொழைப்பு இல்ல, உழைப்பு ஒன்னு தான் மூலதனம். அதனால அவன சார்ந்து நான் வாழவேண்டியிருக்கு. இல்லேன்னா ரோடு போடற வேலைக்கு போக வேண்டியிருக்கு. அவன் மட்டுமா அடிக்கிறான். பள்ள‌னும் தான் சேர்ந்துக்குறான். இராஜபாளையத்துல 1985 -களில் மிகப்பெரிய அளவில் சாதிக்கொடுமைகள் நடந்தது. பல இடங்களில் வேலை செய்து பறையர்கள் அப்போது நிலம் வாங்கினார்கள். அது பல சாதிகாரப் பயலுகளுக்கு பொருக்கல. இதனால பல இடங்கள்ல சாதிக்கலவரம் நடந்திச்சு. 1992 -ல் தமிழ்நாடு பறையர் பேரவையை தொடங்கியதற்கு காரணமே சாதிக்கொடுமை தான்.

    கேள்வி : பறையர் பேரவையின் எழுச்சிக்கு சாதிக் கொடுமை காரணமா? அல்லது அம்பேத்கரின் நூற்றாண்டு காரணமா?

    பதில்: சொல்லப்போனா ரெண்டுமே இல்ல. அறிவு தான் காரணம். அறிவில் சிறந்த பறையன் ரெட்டமலை சீனிவாசன் காரணம். ஒன்னு தெரிஞ்சிக்கோங்க. அம்பேத்கருக்கு முன்பே திருவள்ளுவப் பறையன், கந்தசாமிப் பறையன், காத்தவராயப்பறையன், எம்..சி. ராஜா பறையன்னு பலர் முன்னோடியாக இருந்தாங்க என்பத மறந்திட்டு அம்பேத்கர்னு நுனிப்புல் மேயாதீங்க. அவர் மகாராஷ்டிராவுல பறையர் மாதிரி இருந்த ஒரு மஹார் சமூகத்தின் வெளிச்சமாக வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பறையன் அறிவாளி. அதனால தான் ரெட்டமலை சீனிவாசப் பறையர் “பறையன்” என்கிற பேர்ல ஒரு பத்திரிக்கை நடத்துனாரு. அதன் தொடர்ச்சியா பறையர் பேரவை சார்பில் “பறையர் குரல்” என்கிற பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தி வருகிறோம்.

    கேள்வி : (ஒங்களுக்கு அறிஞர் குணாவை தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். நான் தெரியும் என்றேன். அவருடைய நூல்களை கொஞ்சம் வாசிச்சிட்டு வாங்க என்றார். சரி என்றேன்). தலித் மக்களுக்கு வேறு என்ன பணிகளை செய்து வருகிறீர்கள்?

    பதில்: பறையர் பேரவை பறையர்களுக்கான இயக்கம் மட்டுமல்ல. சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிற எல்லா மக்களுக்கும் உரியது. குறிப்பாக மலம் அள்ள‌க்கூடிய, பிணம் எரிக்கக் கூடிய பறையர், சக்கிலியர் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஒரு சமூகத்த இழிவா பார்ர்க்குறதுக்கு இந்த மாதிரியான தொழிலை நிரந்தரமா திணித்து வருவதற்கு எதிராக இந்த போராட்டம். எல்லாத்தையும் விட ஒரு சமூகத்த அறிவார்ந்த சமூகமா வளர்த்தெடுக்கனும். அதற்கு தான் ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் போன்றவர்களின் அறிவாயுதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லனும். அதுக்காக பேரவை சார்பில் பல பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம். ஒரு முக்கியமான விஷ‌யத்த உங்களுக்கு சொல்லனும். ஒங்க மய்யத்துல தலித்துன்னு ஒரு கலை விழா நடத்துறீங்களே. அதுக்கு முன்னாடியே 80 -கள்ல எங்கூர்ல பறையர் விழா நடத்தியிருக்கிறோம். இன்னைக்கி அதத்தான் பறையர் கலை விழா என்று பறையர் பண்பாட்டு மீட்டுருவாக்கத்துக்காகவும், அறிவு நிரூபணத்துக்காகவும், மறை துலங்கலுக்காகவும் நடத்தி வருகிறோம். அத நீங்க வெளிநாட்டுக்கு காசாக்கிட்டீங்க.

    கேள்வி : வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    பதில்: அவுங்களுக்கு சொல்றது இருக்கட்டும். மொதல்ல எங்கள தலித்து தலித்துன்னு சொல்லி எங்க மூளைய காயடிக்கிறத நீங்க நிப்பாட்டுங்க. இருக்குற பறையனுங்க எல்லாரையும் திரட்டி தலித்துன்னு புராஜக்டு போடறத நிப்பாட்டி இருந்தீங்கன்னா தமிழ்நாட்டுல பறையர் இனம் ஒரு மாபெரும் வளர்ச்சிய கண்டிருக்கும். அந்த வளர்ச்சிய தடை பண்ணதுமில்லாம பறையனுங்கள புராஜக்டுக்கு காயடிச்சீட்டிங்க. இந்த வேலைய நீங்க மொதல்ல நிப்பாட்டுங்க. அமுங்கி போகக்கூடிய தெருப்புழுதிய எல்லாம் தலைவன்னு வளர்த்து விடாதீங்க. ஒங்க மய்யத்த பறையர் ஆதார மய்யம்னு பேர் மாத்துங்க. எல்லாம் அதுபாட்டுக்கு நடக்கும்.

    Like

  2. இந்து மதத்தை விட்டாய், ஜாதியை விட்டாயா?:

    ஜாதியை ஹிந்து மதம் ஆதரிப்பதாக சொல்லிக்கொண்டு ஹிந்து என்ற மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள், ஜாதியை எதிர்க்க ஏன் முன் வர மாட்டேன் என்கிறார்கள்?….. அதில் உள்ள கொடுமையான கருத்துகளான ஜாதீய கருத்துக்களை எதிர்க்க ஏன் முன் வரவில்லை? அப்படி முன்வந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பாய் சாதியற்ற சமுதாயம் அமைந்திருக்கும் அல்லவா?

    “கடவுள் இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள்” என்று வீர வசனம் பேசியவர்களால், “ஜாதிய இல்லை. ஜாதியை கற்பித்தவன் மூடன், ஜாதியை பின்பற்றுபவன் மலம் தின்பவன்” என்று சொல்ல இயலவில்லையே ஏன்? இவர்களுக்கு ஹிந்து என்ற மதம் வேண்டாம், ஆனால் அந்த மதம் சொல்லிக்கொடுத்த வர்ணாசிரம கருத்துக்கள் மட்டும் வேண்டும். கடவுளா ஜாதியை படைத்தார்? கடவுளை மட்டும் திட்டுவதற்கு? எவனும் கடவுளை படைக்கவில்லை, கடவுள் என்ற பெயரில் இவர்கள் செய்த கொடுமைகளை எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள், கண்ணால் கண்டிராத கடவுளை திட்டுகிறார்கள், ஆனால் கண்ணால் காணும் ஜாதி கொடுமைகளை திட்ட மறுக்கிறார்கள்.

    —— அறிவென்ற ஆயுதம் செய்வோம் எனும் வெப்சைட்டில் படித்தது.

    Like

  3. திராவிட மற்றும் டுமில் தேசியம் பேசுபவர்களுக்கு:

    திராவிட/தமிழ் தேசீய கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் குடும்பமும் கலப்பு திருமணம் செய்துகொண்டாலே போதுமே, எதுக்கு இப்படி ஒரு அறிவிப்பு?

    கடந்த என்பது வருடங்களில் உங்கள் திராவிட கூட்டத்தில் இருந்து வீட்டுக்கு ஒருவர் கலப்பு திருமணம் செய்து இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் ஜாதி பாதி ஒழிந்து இருக்குமே, அதை செய்யாமல் இப்போது ஏன் இந்த கபட நாடகம்?

    கலப்புதிருமணம் செய்தால் வெட்டுவோம் என்று சொன்னபோது எங்கே சென்று இருந்தீர்கள்?

    பொங்கலூர் மணிகண்டன் மேடை போட்டு பேசும் போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? அந்த மாநாட்டை தடுக்க நீங்கள் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை?

    முடிந்தால் ஆதிதிராவிட முன்னேற்றத்தை கையில் எடுத்து எங்களுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி போராட முன் வாருங்கள் ஏனென்றால் இந்த மாதிரி கண்துடைப்பு நாடகங்களை பார்த்து பார்த்து சலித்து போய்விட்டது.

    கலப்பு திருமணத்தை உங்கள் கொள்கைகளில் ஒன்றாக கொண்டு வந்து இருக்கலாமே, ஏன் கொண்டு வரவில்லை?

    இது ஒன்றும் குறை சொல்வது இல்லை. உங்களின் உண்மை நிலையை எடுத்து சொல்வது.
    –——————-

    தலித் தேசியம் பேசுபவர்களுக்கு:

    தலித் தேசியம் பேசுபவர்களில் எத்தனை பேர் பறையர்-பள்ளர்-சக்கிலியர்-குறவர்-இருளர் கலப்பு திருமணம் செய்ய முன் வருகிறார்கள்?

    ஒரு கூட்டம் இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறிவிட்டு பேன்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டு அலைகிறது. இன்னொரு கூட்டமோ இன்னமும் மலம் அள்ளிக்கொண்டு ஆதி தமிழன் பட்டம் போட்டுகொண்டு திராவிட ஜால்ரா போட்டுகொண்டு திரிகிறது, இன்னொரு கூட்டமோ பிரபாகரனை சேரிக்குள் கொண்டு வந்ததை பெருமையாய் பேசிக்கொண்டு திரிகிறது….

    ஆனால் இவர்கள் அனைவரும் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்பதை மறந்துவிட்டு திரிகிறார்கள்.

    இப்படி இருக்கும் போது தலித் தேசியம் பேச எப்படி உங்களுக்கு மனது வருகிறது? வர்ணாசிர திராவிட/தமிழ் தேசியங்கள் போலவே இதுவும் வர்ணாசிர தலித் தேசியம்தானா?

    முதலில் உங்களை ஒன்று படுத்த உங்களுக்குள் கலப்பு திருமணங்களை செய்ய முன்வாருங்கள் அதை உங்களின் கொள்கையாக அறிவியுங்கள் அதற்க்கு அப்புறம் அடுத்தவர்களை பற்றி யோசிப்போம்.
    —— அறிவென்ற ஆயுதம் செய்வோம் எனும் வெப்சைட்டில் படித்தது.

    Like

  4. பறையர்கள் யார்??? –- நான் பறையன் . என்னுடைய பெயர் சி.சாம் பறையர்.

    நான் தமிழ்நாடு பறையர் பேரவை என்னும் மாந்த நேய மக்கள் அமைப்பை செயல் படுத்திக்கொண்டு இருக்கிறேன்.என்னுடைய சொந்த ஊர் இராசபாளையம்.மதுரையில் இருந்து தென்காசி /குற்றாலம் செல்லும் வழியில், நடு மையத்தில் உள்ளது.

    நான் பள்ளிப் படிப்பை, என்னுடைய பிறந்தாங்குடியில் சோமையாபுரம் சி.எஸ்.ஐ {தென் இந்தியத் திருச் சபை } மூலம் உருவாக்கப் பட்ட ஆரம்பப் பள்ளியில் படித்தேன் ஐந்தாம் வகுப்பு வரையில். மேலும் ஆறாம் வகுப்பு, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த,சத்திரப்பட்டி என்னும் பட்டிக்காட்டில் உள்ள சாமிநாதபுரம் பள்ளியில் ,விடுதியில் தங்கிப் படித்தேன். மீண்டும் ஏழாம்வகுப்புக்கு என்னுடைய சொந்த ஊரின் அருகிலுள்ள திருவில்லிபுத்தூரில் உள்ள ,சி.எம்.எஸ். உயர் நிலைப் பள்ளியில் மீண்டும் படித்து,பெரிய பத்து என்று சொல்லும் பதினோராம் வகுப்பு படித்து முடித்தேன்.

    என்னுடைய கல்லூரி படிப்பான புகுமுக வகுப்பை, நெல்லை மாவட்டத்தில் உள்ள தூய யோவான் கல்லூரியில்(செயின்ட் ஜான்ஸ் கல்லூரி) படித்தேன். அதன் பின்பு, தி அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு , பொருளாதாரம் (எக்கனாமிக்ஸ்)படித்து முடித்தேன். பள்ளிப் படிப்பு முதல் இன்று வரையில் நான் பிறந்த,என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

    எனக்கு இந்த பறையர் இனத்தின் விடுதலைப் பணிக்கு என்னை யாரும் அழைத்ததும் இல்லை,நானும் எந்த ஒரு தீண்டாமையையும் அனுபவவித்ததும் இல்லை என்றாலும் நான் இதுவரையில் திருமணமே செய்யாமல் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்.

    நானும் கல்லூரிப் பருவத்தில், மது, மாது, சூது,பேய் ,பிசாசு, பேடை, பெட்டை என்று அனைத்தையும் அறிந்து தெரிந்து கொண்டு, அவைகள் அனைத்தையும் அனுபவித்து, இன்று வரையில் ஐம்பது அகவையைத் தாண்டியும் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    எனக்கு பெரிதாக யாரும் குருக்களோ ,அல்லது வேறு யாரும் என்னை இந்த பணியை செய்யச் சொல்லவில்லை.இது எப்படியோ என்னுடைய நாடி நரம்பில் மரபணுவில் உள்ள ஒரு செயல். நானும் படித்தேன்.ஒரு வேலையை பார்த்துவிட்டு குடியும் குடித்தனமாக மாறலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவில்லை. நானும் ஒருபோதும் என்னுடைய பறையர் என்னும் அடையாளத்தை எங்கேயும் எப்போதும் மறைத்ததில்லை. அதற்க்கு கிடைத்த பரிசு நான் ரெம்பவும் நல்லவன் என்பதே.

    நானாக என்னை தயார் செய்துகொண்டேன்.பின் நாளில் அறிவர் அம்பேத்கர் நூல்களைப் படித்தேன். பறையர்களுக்குப் போராடிய மாவீரர்கள் யாராவது உண்டா என்று தேடி பிடித்து அலைந்து கொண்டு பலவித நூல்களைப் படித்து தெரியும்போது எனக்கு புறநானூறு எழுதிய மாங்குடி மருதன் கிழார் “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கல்லது குடியும் இல்லை” என புறநானூறு …முன்னூற்றி முப்பது ஐந்து பதினேழாம் வரியில் சொல்லப்பட்டதை … வாசித்து வாசித்து… மிகவும் பெருமை கொண்டேன்.

    என்னை யாரும் உருவாக்காமலே, நானே என்னுடைய பறையர் இனத்தின் வரலாறுகளைத் தேடிக் கண்டு பிடித்த ஒரு பெருமை எனக்கு.அது ஒரு மமதை என்றும் சொல்லலாம். அதனால் கண்டு பிடிக்கப் பட்ட மாபெரும் தலைவனான இரட்டைமலை சீநிவாசன் பறயனே. பறையர்களின் முதல் விடுதலைப் போராளி என்று தெரிந்து கொண்டு அம் மாவீரன் உருவாக்கிய தமிழ் நாடு பறையர் மகாசனம்தான் இன்று தமிழ் நாடு பறையர் பேரவை என்னும் பெயரில் இயங்கி வருகிறது.

    எனவே பறையர் இனத்தின் விடுதலை விரும்பும் அனைவரும் மனமார போற்றப் படும் இப் பறையர் பேரவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தன் ஆர்வமாக செயல் படும் அனைத்துப் பறையர்களையும் அழைக்கிறோம்.

    வரலாறு என்னை விடுதலை செய்யும்.
    வரலாறு தெரியாத எந்த ஒரு மாந்த இனமும் …
    தன் வரலாற்றை மீட்டு எடுக்க முடியாது….
    இதுவே வரலாறு நமக்கு காட்டும் பாடம்.
    எனவே ஞானம் உள்ள ஞானவெட்டியான் பரம்பரையே,
    நாடாண்ட நந்தகுல அரசப் பறையற்குலமே, வா…
    இப் பறையர் இனத்தின் மாந் களத்தின் வரலாறுகளை மீட்டு ….
    மீண்டும் நாடாள அணிதிரள் …அறிவர்கூட்டமாய்.
    உன்னுடைய பங்களிப்பை ,நீ பிறந்த உன்னுடைய பறையர் இனத்தின் வரலாறுகளை மீட்டு இம் மண்ணின் மைந்தர்கள் மீண்டும் நாடாள பணி செய்ய வா …வா… என்று அனைத்துப் பறையர் இனத்தின் நல்ல உள்ளங்களையும் அழைக்கிறோம்.

    வரலாறு உன் கையில்.. வரலாறு இல்லாத எல்லா சாதியும் ஆட்சி செய்து விட்டது..வரலாறு உள்ள பறையர் இனம் எப்போது ஆட்சி செய்யப் போகிறது…

    விடுதலையும்…விடியலும் உன்கையில்…
    நாளையப் பொழுது உன்னுடைய பறையர் இனத்தின் விடியலில்..
    புறப்பட்டு பறைய ..உன் விடியலை நோக்கி..
    என்றும் பறையர் விடுதலைப் பணியில்
    –———- சி.சாம் பறையர்.

    Like

  5. // தலித் என்பது ஜாதியல்ல, தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் ஜாதிய அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் உணர்வு. //
    —————————–

    தலித் என்றால் தாழ்த்தப்பட்டவன், கீழ்ச்சாதி என்று அர்த்தம்.

    முஸ்லிம்கள், தலித்துக்கள் மற்றும் ஏழை ஹிந்து சகோதரர்கள் மீது கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டு வாழ விடாமல் செய்கிறான் பாப்பாரத் தேவ்டியாமவன். ஆகையாலதான் எங்கள் தந்தை பெரியார்:

    1. “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என சொன்னார்.

    2. “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என சொன்னார்.
    —————–

    இந்தியாவில் தலித்துக்கள்(தலித் கிருத்துவர் உட்பட) 40 சதவீதம், முஸ்லிம்கள் 30 சதவீதம். இரண்டும் சேர்ந்தால் 70 சதவீதத்துக்கு மேல். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அரேபியா மற்றும் 55 இஸ்லாமிய நாடுகளும் இந்தியா சொன்ன பேச்சை கேட்கும். இந்தியா மிகப்பெரிய வல்லரசாகிவிடும். வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கும்.

    தலித் சகோதரா, இன்னமுமா புரியவில்லை. இந்த பாப்பாரத் தேவ்டியாமவனின் இடஒதுக்கிடு உனக்கு இனியும் தேவையா?. பார்ப்பன வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறு. திருக்குரானை கையிலெடு. இஸ்லாத்தை தழுவு. டெல்லி முதல் அரேபியா வரை நாம் ஆட்சி செய்யலாம்.

    Like

  6. // நான் ஒரு தலித்தாக இருப்பதாலேயே மார்க்ஸியவாதி என என்னை உணர்கிறேன் என்று என்னால் சொல்ல இயலும். //
    ——————–

    பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s