செய்திகள்

தாமிர பரணி ஆற்று நீரை மீட்க சத்தியாகிரக போராட்டம்!

தாமிரபரணி நீரை பன்னாட்டு குளிர்பானக் கம்பெனிகள் எடுத்துக் கொள்ளலாம் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நேரில்வந்து தாமிரபரணி ஆற்றைப் பார்வையிட வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசினார்.நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் பிருந்தாகாரத் கலந்து கொண்டு பேசியதாவது:தாமிரபரணி நதியை பாதுகாக்கும் மகத்தான போராட்டத்தில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். தண்ணீர் குறித்த அரசின்அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது என்று நாம் இங்கு கண்ணால் பார்க்கிறோம். நாம் இங்கு ஆற்றில் இறங்குவதை காவல்துறை விரும்பவில்லை. அவர்களுக்கு தண்ணீர் குறித்த தொலை நோக்கு பார்வையும் இல்லை. கோக் -பெப்சி கம்பெனிகள் எவ்வளவு தண் ணீர் வேண்டுமானாலும் உறிஞ்சலாம் என அரசுகள் அனுமதியளித்துள்ளன. மேட் இன் இந்தியா என்ற கருத்தை ஆதரிக்கும் மோடி, இந்தியாவில் உள்ள ஆறுகளின் தண்ணீரை வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு விற்ப னை செய்கிறார். இது எந்த வகையில் நியாயம்?இந்தியா முழுவதும் 27 இடங்களில் பன்னாட்டு குளிர்பான கம்பெனிகள் தண்ணீரை எடுக்க அனுமதிவழங்கியுள்ளனர். ராஜஸ் தான் மாநிலத்தில் பாலை வனங்கள் உள்ளன. அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமம். ஆனால் அங்கும் கூட பெப்சி-கோக் கம்பெனிகள் தண்ணீர் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.கேரளாவின் பிளாச்சி மடாவில் இதே போல் வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகள் கிராமசபை அனுமதியின்றி தண்ணீரை எடுத்தனர். இதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டு போராடினர். இதையடுத்து அந்த கம்பெனிகள் அங்கிருந்து வெளியேறின. வெளிநாட்டு கம்பெனி கள் தண்ணீரை மட்டுமின்றி இங்குள்ள நிலங்களையும் பேரம் பேசி எடுத்துக் கொள்கின்றன. எங்கள் ஆற்றுத் தண்ணீரை யாரும் உறிஞ்ச முடியாது; அதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்; யாரைக் கேட்டு தண்ணீரை எடுக்கி றீர்கள்? கோக்-பெப்சிகம்பெனிகளின் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமிர பரணி ஆற்று தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம் என குளிர்பான கம்பெனி களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது துரதிர்ஷ்ட வசமானது. ஆற்றில் உபரி தண் ணீர் உள்ளது; அந்த உபரி தண்ணீரை தான் கம்பெனி களுக்கு கொடுக்கிறோம் என தமிழக அரசு நீதி மன்றத்தில் ஒரு பொய்யான தகவலை கொடுத்துள்ளது. நீதிமன்றமும் மந்திரவாதி போல தாமிரபரணி ஆற்றில் உபரி தண்ணீர் உள்ளதுபோல் தீர்ப்பு வழங்கி யுள்ளது; உண்மையில் இங்கு என்ன நிலைமை உள்ளது என நீதிபதிகள் முதலில் நேரில் வந்து தாமிரபரணி ஆற்றை பார்வை யிட வேண்டும். இங்குள்ள நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசி னார். அவரது உரையை மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார்.இப்போராட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், க.கனகராஜ் , மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், ஆர்.மல்லிகா, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், விருதுநகர் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன் உட்பட ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 9மணியில் இருந்தே அணி அணியாய் தாமிரபரணி ஆற்றில் திரண்டனர். ஆற்றுக்குள் இறங்குவதைத் தடுக்க ஆற்றை மறித்து காவல்துறையினர் தடுப்பு களை அமைத்திருந்தனர். தீயணைப்புத் துறையினர் பைபர் படகு, ரப்பர் மிதவை களோடு வந்திருந்தனர். போராட்டத்தை ஒட்டிஏராளமான காவல்துறை யினர் தாமிரபரணி ஆற்றில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பேச்சுவார்த்தை

இப்போராட்டம் இரவு வரையிலும் தொடர்ந்து நீடித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சியருடன் பேச்சு நடத்தினர். தாமிர பரணியை பாதுகாப்பது தொடர்பாக ஆட்சியர் உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரையிலும் தாமிர பரணி நதிக்கரையில் செங்கொடிகளோடு அனை வரும் அமர்ந்திருந்தனர்.

நன்றி: தீக்கதிர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s