சர்ச்சை

ஃபேஸ்புக் ட்ரெண்டில் சுஜாதா விருது சர்ச்சை!

சுஜாதா விருது அறிவிப்பு எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறது; ஃபேஸ்புக்கில் ட்ரெண்ட் ஆகும் ஆளவுக்கு! சில ஃபேஸ்புக் பதிவுகள் இங்கே…

மனுஷ்யபுத்திரன்:

15 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு இலக்கிய சர்ச்சையை வைத்துக்கொண்டு பெண்களை இழிவுபடுத்தினேன் என்று ஒப்பாரிவைக்கும் அல்பத்திற்கு தெரியுமா இந்த பதினைந்து வருடங்களில் பெண்களின் உரிமைகள் சார்ந்து பொது ஊடகங்களில் எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று? பெண்ணின் துயரங்களை என் கவிதைகளில் எத்தனை பரிமாணங்களில் தொட்டிருக்கிறேன் என்று..? நான் எழுதிய பெண் உலகு சார்ந்த சொற்களின் சிறு நுனியைக்கூட தொட முடியாதவர்கள் என்னை பெண் விரோதி என்று சித்தரித்தால் பெண்களே கைகொட்டி சிரிப்பார்கள். வெறுப்பின் இருட்டில் நின்று புலம்பும் படிப்பறிவற்ற மூடர்க்கு நான் ஏன் என்னை நிரூபிக்க வேண்டும்? சொல்வதற்கு உங்களுக்கு ஒன்றுமில்லை. காலம் உங்களுக்கு எங்கோ நின்றுபோய்விட்டது. பெண் கவிஞர் என்ற வேடத்தை அணிந்துகொண்டு சக பெண்கவிஞர்களுக்கு எதிராக வெறுப்பையும் காழ்ப்பையும் கக்குகிறவர்கள் அம்பலப்பட்டு நாளாகிறது.

ஜீவகரிகாலன்:

பொறுக்கி வாழ்வது, பொறுக்கித் தின்பது, பொறுக்கி விளையாடுவது, பொறுக்கி அரசியல் பண்ணுவது, பொறுக்கி பதிப்பிப்பது, பொறுக்கி குடிப்பது, பொறுக்கி வாழ்த்துவது, பொறுக்கி மகிழ்வது, பொறுக்கி புலம்புவது, பொறுக்கி ஸ்டேட்டஸ் போடுறது, பொறுக்கி கமெண்ட் போடுறது…சர்வம் பொறுக்கி மையம்னு அண்ணாத்த சுப்பிரமணியசாமியே சொல்லிட்டாரு.. இந்தாளு யாரு நம்மள சொல்ல

சுகிர்தராணி:

மாலதி மைத்ரியை மூடர்’சுண்டெலி’ என்றும் கடங்கநேரியானை `பேஸ்புக் பொறுக்கி’ என்றும் வசைபாடியிருக்கிற மனுஷ்ய புத்திரனுக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிளாட்பாரத்தில் பின்னடித்து விற்கப்படும் ஆபாசப் புத்தகம் என்று என் கவிதைத் தொகுப்பைப்பற்றி குறிப்பிட்டவரிடமிருந்து மேற்கூறிய வசைகள் வருவது ஆச்சர்யமில்லை.மூடர், சுண்டெலி,பேஸ்புக் பொறுக்கி போன்றவற்றிற்கு அங்கு புத்தகம் போட்ட பெண்கவிஞர்களின் எதிர்வினை என்ன? சக படைப்பாளியை வசைபாடும்போது பாராமல் கடந்துவிடும் கள்ள மௌனம்தானே..? எனில் அவர்களின் எழுத்து அரசியல்மயப்படுத்தப்பட்ட எழுத்தா ஆண்மயப்படுத்தப்பட்ட எழுத்தா?

பவுத்த அய்யனார்:

மனுஷ்யபுத்திரனின் அவதானிப்பு தவறு. சுஜாதா அவர்கள் நவீன இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தி உள்ளாரோ , அந்த அளவிற்கு நவீன இலக்கியவாதிகளை அவமதிக்கவும் செய்துள்ளார். 1986 இல் சுஜாதா அவர்களை பெங்களூரில் முதன்முறையாகச் சந்தித்தபோது வெற்றுடம்பில் பூணூலுடன்தான் வந்தார் . அதற்காக என்னை வீட்டிற்குள் அனுமதிக்காமல் இல்லை. ஆனால் முதல் சந்திப்பிலேயே இவர் நம்மவர் அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். ( இலக்கியம் சார்ந்து) அவரது கவிதை ரசனையையும் தெரிந்து கொண்டேன். கண்ணால் காண்பதை அப்படியே எழுதுவது அவரது ரசனை. என் கவிதை என்பது , கண் கண்டதை மனது பார்த்து , மன பாதிப்பை எழுதுவது.
சுஜாதா சாதி மதம் துறந்தவர் அல்ல. அதே நேரம் அதை வைத்து மற்றவர்களை அவமதித்தவர் அல்ல.சுஜாதா அவர்களுக்கு தமிழ் எழுத்துலகில் இடமுண்டு் . ஆனால் , அது மனுஷ்யபுத்திரன் கொடுக்கும் இடம் கிடையாது. மனுஷ்யபுத்திரன் மாலதி மைத்ரி அவர்களை அவமதிப்பது அவருக்கு அழகல்ல. கவிதை சார்ந்த சாதனைகளை மனுஷ்யபுத்திரனைவிட மாலதி மைத்ரி அவர்களே அதிகம் செய்துள்ளார். சாதனை என்பது எண்ணிக்கை சார்ந்த்து அல்ல , தரம் சார்ந்தது.

ரஞ்சி:

மனுஷ்ய புத்திரனுக்கு எமது வன்மையான கண்டனங்கள்
மாலதி மைத்ரியை மூடர்’சுண்டெலி’ என்றும் கடங்கநேரியானை `பேஸ்புக் பொறுக்கி’ என்றும் வசைபாடியிருக்கிற மனுஷ்ய புத்திரனுக்கு எஎமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகப் பெண்களிடம் மட்டுமல்ல புலம்பெயர் பெண்களிடமும் கவிதைப்புத்தகம் போடுகிறேன் பல லட்சம் கொள்ளையடித்தவர் தான் இந்த மனுஷ்ய புத்திரன் ranjani

ஜெய தேவன்:

வழக்கத்தை விட உயிர்மை ( மனுஷ்ய புத்திரன்) வழங்கும் ‘சுஜாதா விருதுகள்’ வேறு விவாதத்தை கிளப்பி உள்ளது.பார்ப்பனர் ஒருவர் பெயரால் ,பார்ப்பனர் அல்லாதவர் வழங்குவதும் ஒருவிதத்தில் பார்பனியத்திற்கு காவடி தூக்குவது போல..என்று பொருள் பட கவிஞர் Malathi Maithri..அவர்கள் முகநூல் பதிவுக்கு மனுஷ்ய புத்திரன் நீண்ட விளக்கம் தந்துள்ளார்…அது சரியாகக் கூட இருக்கலாம்
அதே சமயம் கவிஞர் மாலதி மைத்ரி அவர்களை ” மூடர்” எனக் குறிப்பிட்டது மனுஷ்யபுத்திரன் தகுதிக்கு அழகல்ல.

அதே மாதிரி Bogan Sankar..அவர்கள் குறித்து கண்டனத்தை தெரிவிக்க வந்தவர் தேவையில்லாமல் நண்பர் Kadanganeriyaan Perumal அவர்கள் பெயரை வம்படியாக இழுத்து, அவரை ”ஃபேஸ் புக் பொறுக்கி” என்று விளித்திருக்கிறார்.

அவ்வப்போது மனுஷ்யபுத்திரன் அணுகுமுறை குறித்து கடங்கநேரியன் விமர்சிப்பது உண்டு..அதற்கான நியாயங்களும் இருக்கலாம்.ஆனால் அதற்காக இப்படி ஒரு மோசமான சொற் பிரயோகத்தை உயிர்மை ஆசிரியர் பயன் படுத்தி இருக்கக் கூடாது..கடங்கநேரியனும் ஒரு படைப்பாளி. தான் பிரபல்யம் என்பதால் தன்னை எதிர்த்து கருத்து சொல்பவரை இப்படி கடுஞ் சொல்லால் அர்ச்சிப்பது ஒரு படைப்பாளி. பதிப்பாளருக்கு அழகு அல்ல….இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

கருப்பு நீலகண்டன்

சங்க இலக்கியத்தில் பார்ப்பன சரடு விடுகிறார் என அறிஞர் தொ.பரமசிவனால் அம்பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார் சுஜாதா.

தன்னை நேர்காணல் செய்ய வந்த தோழர் சுப.வீ.யை ஆசிரியராக கொண்ட ‘ நந்தன்’ இதழின் செய்தியாளர்களை ‘ என்னய்யா எதுக்கெடுத்தாலும் பாப்பான்தான் காரணம்னு சொல்லுவீங்க போங்கய்யா ‘என விரட்டியடித்துள்ளார் சுஜாதா.

‘மஞ்சள் ரத்தம் ‘ நாவலின் பார்ப்பனியத் தன்மைக்காக எழுத்தாளர் ரவிக்குமாராலும்,’ தன்னுடைய எழுத்துக்களை தலித் எழுத்துக்களாய் கொண்டாட வேண்டும் ‘ எனச் சொன்னதற்காக ‘தலித்முரசு’ இதழில் எழுத்தாளர் அழகிய பெரியவனாலும் கண்டிக்கப்பட்டவர் சுஜாதா.

‘அறிவியல் என்கிறப் பெயரில் புராணப் புளுகுகளை கலந்தடித்து பார்ப்பனியத்தை புகுத்துகிறார்’ என திராவிடர் கழகத்தால நடத்தப்படுகின்ற ‘ உண்மை’ வார இதழில் புலவர் வெற்றியழகனால் முழுமையாக கட்டுடைக்கப்பட்டவர் சுஜாதா.

‘ நபிகள் பற்றியோ இஸ்லாம் பற்றியோ
நான் எழுதினால் எனக்கு சாப்பிடுவதற்கு கை இருக்குமான்னு தெரியலை ‘ என்று இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட ‘சமநிலை சமுதாயம் ‘இதழிலேயே எழுதி பேரா.அ.மார்க்சால் கண்டிக்கப்பட்டவர் சுஜாதா.

‘ விக்ரம்’ திரைப்படத்தில் கணினி பொறியாளர் லிசியிடம் ‘ உங்களால அவசரத்துக்கு எங்களை மாதிரி நின்னுக்குனே ஒன்னுக்கு போவ முடியுமா ‘ வென ஜம்பமடிக்கும ‘உலக நாயக ‘ னின் ‘அரிய வசன’ உபயதாரர் மட்டுமல்ல, ‘ பாய்ஸ் ‘ படத்தில் பெண்களுக்கு எதிரான கெட்டகேவலமான வசன உபயதாரரும் சுஜாதா.

‘ குமுதம் ” ஆசிரியப் பொறுப்பிலிருந்தபோது ‘ வேலைக்குப் போவதற்கு முன் மனைவியின் பிறப்புறுப்புக்கு பூட்டு போட்டுவிட்டு ‘இப்ப இன்னா பண்ணுவே’ என நகைச்சுவை துணுக்கு எனும் பெயரில் பெண்கள் மேல் வன்மத்தை வடித்தவன் சுஜாதா.

இப்படிப்பட்ட ஜென்மத்தை எழுத்தாளர்னு எங்க தலைல காலந்தோறும் கட்டிக்குனே இருங்க…..
நாங்க புலன்களை பொத்திக்குனு
கம்முனு கொண்டாட்றம்
சரிங்கிளா சார்….?

ஒடியன் லட்சுமணன்:

வந்தமா, ரெண்டு புத்தகம் எழுதனும் ..ரெண்டு இலக்கியகூட்டம் அட்டன் பண்ணனும் நமக்கெதுக்கு விருதெல்லாம். இருக்குற இடம்தெரியாம இருந்துட்டுபோயிடணுண்டா

ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்:

இவ்வளவு சண்டைக்கும் சுஜாதா பெயர்தான் காரணமா ?

விநாயகமுருகன்:

சண்டை போடும்போது காறித்துப்புறதுக்கு பதில் பகடியாக கலாய்த்தால் ஜனங்களுக்கு எவ்வளவு பொழுதுபோக்காக இருக்கும்? நானும் சாருவும் இந்த பேஸ்புக் மக்களை தொடர்ந்து ஆறுமாதங்களுக்கு எப்படி குஷிபடுத்தினோம். ஒவ்வொரு பதிவுக்கும் மக்கள் எப்படி வண்டி கட்டிக்கொண்டு வந்து லைக் போட்டு சிரித்தார்கள். அறிஞர்கள், மேதைகள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் இதைத்தானே கற்றுக்கொள்ள வேண்டும்.

விஜய் மகேந்திரன்:

விவேக் ஒரு படத்தில் சொல்வார்.
துப்பாக்கி சுடுற போட்டியில் இந்த ஐ.ஜி தான் வருஷா வருஷம் கோல்டு மெடல்.
அண்ணே எத்தனை பேர் சுடுவாங்கண்ணே!
அது என்னமோ இவர் மட்டும் தான் சுடுவார்
???
நம்மூரு விருதுகளை நினைச்சா?

நாச்சியாள் சுகந்தி:

இணையபொறுக்கி என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள் மனுஷ்?
உங்களை எதிரெப்பவர்களுக்கெல்லாம் பட்டப் பெயர் சூட்டுவது இலக்கியத்தின் ஒருவகையா? மனவிகாராத்தின் வெளிப்பாடா?

கிருஷ்ண பிரபு:

அண்பார்லிமெண்ட் வார்த்தைகளைப் பேசிய சமூகத்தின் உயர்ந்த இடத்தில் இருக்கக் கூடிய அந்தக் கழகப் பேச்சாளரைக் கண்டிக்க மனம் வரவில்லை.

நாடி நரம்பு சதை ரத்தம் நகம் முடி என உடலின் சர்வ நாடியிலும் வெறுப்பரசியலைத் தூக்கிக்கொண்டு மட்டும் எப்படித்தான் ஜீவிக்க முடிகிறதோ.

பகவானே…!

ம்…

சவுக்கு சங்கர்:

புத்தகக் கண்காட்சி கூட இல்லையே. எதற்கு இப்போது கவிஞர்கள் கச்சேரியை ஆரம்பித்திருக்கிறார்கள்?

லக்ஷ்மி சரவணகுமார்:

கவிஞர் மாலதி மைத்ரியை மூடர் என்றும், கவிஞர் சுகிர்த ராணியை அல்பம் என்றும் மனுஷ் குறிப்பிட்டிருப்பது ஆணாதிக்க தடித்தனத்தின் உச்சகட்ட அயோக்கியத்தனம். அத்தோடு கடங்கநேரியானை பொறுக்கி என்றும் போகிற போக்கில் எழுதுகிறார். பொதுவெளியில் மூவரிடமும் மனுஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சொரணை இருக்கிற ஆட்கள் அவரின் மீது கடுமையான கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.

அவர் மன்னிப்பு கேட்காத பட்சத்தில் விருது விழா நடக்கும் தினத்தில் அரங்கத்திற்கு வெளியில் ஒரு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வோம்.

எப்டியும் நம்ம புத்தகம் போடுவாரு ப்ரமோட் பண்ணுவாருன்னு பல்ல இளிச்சுக்கிட்டு அவருக்கு சொம்படிக்கிறதுக்கு பதிலா வேற தொழில் செய்யலாம்.

ரேவதி முகில்:

மூடர்சுண்டெலிபொறுக்கியல்ப விருது

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.