கருத்து

#நீட்: அத்தனை தரக்குறைவானதா மாநில பாடத் திட்டங்கள்?….

பிரபாகரன் அழகர்சாமி

ஸ்டேட் போர்டு பாடத்திட்டம் தரக்குறைவானது, சென்ட்ரல் போர்டு பாடத்திட்டம் அதிகத் தரம்வாய்ந்தது என்பது நம்மிடையே நிலவும் மிகப்பெரிய மாயை.

தமிழ்நாடு மாநில அரசின் பாடத்திட்டம், ஒரு 6 வயது குழந்தையும் ஒரு 15 வயது சிறுமியும் அந்தந்த வயதில் என்ன அறிவைப்பெற வேண்டுமோ அதற்கு உரிய வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சகல விசயங்களிலும் முன்னேறிய நாடுகளான ஸ்கேன்டிநேவியன் நாடுகளில் (நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து), பள்ளிக் கல்வியை 7 வயதிதான் துவங்குகிறார்கள். இங்கே நம் நாட்டில், மூன்றரை வயதில் எல்.கே.ஜி, இரண்டரை வயதில் ப்ரி கே.ஜியில் சேர்பதைதான் தரமான உயர்தரக்கல்வி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்!

சென்ட்ரல் போர்டு பாடத்திட்டம் என்பது, முதல் தலைமுறை மாணவர்களையோ, கிராமப்புற மாணவர்களையோ மனதில் வைத்து உருவாக்கப்பட்டது அல்ல. அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கும் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளின் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் அது.

ஆனால் ஒரு மாநில அரசு, தன் மாநிலத்தில் ஒரு கடைகோடி கிராமத்தில், பின் தங்கிய ஒரு சமூகத்தில் பிறந்த முதல் தலைமுறை மாணவனையும் மனதில் வைத்துதான் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கமுடியும்.

முன்னேறிய பகுதியில் வாழும் முன்னேறிய வகுப்பினை சேர்ந்த ஒரு குழந்தைக்கும், கடைகோடி பகுதியில் வாழும் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த ஒரு குழந்தையும் ஒரேமாதிரியான கல்வி வாய்ப்பினை பெறவேண்டும் என்பதுதான் சமச்சீர் கல்வியின் நோக்கம்.

அப்படி எந்த சமூக நோக்கமும் சிபிஎஸ்ஈ பாடத்திற்கு இருக்கத்தேவையில்லை. இருக்கப்போவதுமில்லை.

தமிழகத்தின் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்து எத்தனையோ ஆயிரம் தலைசிறந்த மருத்துவர்கள் இந்த நாட்டில் உருவாகியிருக்கிறார்கள். உலகெங்கும் இருந்து தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

தற்போது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வில் வெறும் 2% சதவிகிதமே உள்ள சிபிஎஸ் ஈ மாணவர்கள்தான் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் சிபிஎஸ் ஈ பாடத்திட்டம் உயர்வானது என்று பொருளாகாது.

2006ஆம் ஆண்டுவரை, தமிழகத்தில் மருத்துவம் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்திவந்தது நம் மாநில அரசு. அந்த நுழைவுத்தேர்வுகளில், சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் மிகப்பெரும்பான்மையினோர் பின்தங்கியே இருந்தனர். இதனாலேயே பத்தாம் வகுப்புவரை சிபிஎஸ் ஈ படித்துவிட்டு, 11,12 வகுப்புகளை மாநில பாடத்திட்டத்திற்கு மாறியோர் பல்லாயிரக்கணக்கானோர். அப்போது யாரும் மாநில அரசின் பாடத்திட்டம்தான் சிறந்தது அதனால் அதற்கு மாறினோம் என்று சொல்லவில்லை!

Advertisements

பிரிவுகள்:கருத்து

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s