கருத்து

#நீட்: நாடு முழுவதும் ஒரே தேர்வு ஒரே முறை என்று முழங்குவதுதான் பிரச்னை!

பிரபு ராஜதுரை

BC 199.25
MBC 198.75
OC 199.5
SC 196.75
BCM 198.75
SCA 198
ST 194.75

இது என்ன?

கடந்த வருடம் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள். அதாவது பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் 199.25/200 மதிப்பெண் எடுத்தால்தான் இடம்!

மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு/மூன்று மதிப்பெண்கள் குறைவாக இருக்கலாம். அவ்வளவுதான்.

இப்படி ஒரு மதிப்பெண்ணை கற்பனையில் கூட சாதிக்க முடியாதவர்கள்தாம் இன்று மருத்துவக் கல்லூரிகளில் தகுதி திறமை பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்றால், 12 வகுப்பில் 60% சதவீதம் எடுத்த அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக போதுமான மருத்துவ கல்லூரிகள் கட்ட நம்மிடம் பொருளாதார வசதி இல்லை. எனவேதான் ஏதோ ஒரு முறையில் மாணவர்களை வடி கட்ட வேண்டியிருக்கிறது.

இப்போதுள்ள தேர்வு முறையில் ஏதேனும் குறை இருந்தால் புதிய முறை அறிமுகப்படுத்தலாம். கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற தமிழக அரசு தேர்வில் ஒருமுறை கூட கேள்வித்தாள் லீக் ஆனதாகவோ, அல்லது திருத்தும் முறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகவோ செய்தி கிடையாதே.

‘பார்த்தீர்களா, மக்களிடையே பெரிய கொந்தளிப்பின்றி டிமானிடைஷேனை நடத்தி விட்டோம்’ என்று தம்பட்டம் அடிப்பார்களிடம். ‘சரி, நடத்தியாயிற்று அல்லவா, அதன் நோக்கம் என்ன, அந்த நோக்கம் நிறைவேறியதா?’ என்றால் பதிலிருக்காது.

பெரும் பலன் ஏதுமில்லாத டிமானிடைசேசன் மக்களைப் போட்டு மூன்று மாதம் பாடாய்ப் படுத்தியது போல, கடின உழைப்பின் உச்சத்தைத் தொட்டுத் திரும்பியிருக்கும் 12 வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வுக்குப் பிந்திய விடுமுறையின் மகிழ்ச்சியை மறுத்து பெற்றோர்களுடன் அவர்களை அலைகழிக்க வைப்பதுதான் மிச்சம்.

நீட் ஏன் தேவையில்லை என்பதை விட ஏன் தேவை என்ற கேள்விக்கான பதில் இங்கு முக்கியம்.

ஏற்கனவே சொன்னதுதான். இந்தியாவின் அணு ‘விஞ்ஞானி’ என்று பாராட்டப்படும் அப்துல் கலாமும் அவரது நண்பரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இங்கு உருவாக்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தவருமாகிய எழுத்தாளர் சுஜாதாவும் பொறியியற் கல்லூரியில் இடம் கிடைப்பதற்குத் தகுந்த மதிப்பெண்கள் பியூசியில் பெற முடியாமல், பிஎஸ்ஸி படித்து பின்னர் எம் ஐ டியில் மூன்று வருட டிப்ளமோ (தற்போது பி டெக்) படித்தவர்கள்.

அவ்வளவு ஏன், இன்று மருத்துவ மாணவர்களின் தலைவிதியை நீதிமன்ற அறைகளில் அலசி ஆராய்ந்து வாதிட்டு, தீர்மானித்துக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்கள், நீதிபதிகளில் பலர் 12 வகுப்பில் மருத்துவ மாணவர்கள் அளவிற்கு மதிப்பெண்கள் எடுக்காமல் போனவர்கள்தாம். அதற்காக தகுதியில் குறைந்தவர்கள் என்றால் அபத்தமாயிருக்கும்.

12 வகுப்பு தேர்வுக்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கு ஆசிரியர்கள் உதவி இருப்பதால், ஓரளவிற்கு சம வாய்ப்பு சாத்தியப்படுகிறது. ஆனால் நீட் தேர்வைப் பொறுத்தவரை பயிற்சி அளிக்கத் தேவையான ஆசிரியர்களை மறுத்து விட்டு ஏழை மாணவர்களையும் வசதி படைத்தவர்களுடன் தேர்வு எழுதக் கூறுவது, எப்படி ஆஸ்ட்ரோ டர்ஃப் (செயற்கை மைதானம்) புதிய விதிகள் என்ற பெயரில் இந்தியா-பாக்கிஸ்தானின் வீரர்களின் தனித்தன்மையான அழகிய கடைதல் விளையாட்டு முறையை ஐரோப்பியர்கள் ஒழித்தார்களோ, அது போலத்தான்.

மருத்துவர்கள் மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். தங்களுடைய நோயாளிகளுடன் அவர்களுக்கு இருக்க வேண்டிய உறவுக்கான திறமையை நமது தேர்வு முறைகள் தீர்மானிக்க இயலாது. பொது சுகாதாரத்திற்கான திட்டங்களை வகுப்பதற்கும் புதிய சிந்தனைகளை புகுத்துவதற்கும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் மருத்துவர்கள் தேவை. பிரிவுகள் என்பது சாதி, மதம், பொருளாதாரம், இடம் அனைத்தையும் உள்ளடக்கியது.

நீட் பயிற்சி மையங்கள் நகரங்களில்தான் அமையப் போகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே அவற்றை பயன்படுத்த இயலும். பெரிதாக எவ்வித பலனும் அளிக்கப் போகாத ஒன்றிற்காக, ஏழைகளின் நியாயங்களை பலி கொடுக்கப் போகிறார்கள்….

நேற்று நடந்த தேர்வில் உள்ளாடைகளை சோதிப்பதும், முழுக்கைகளை வெட்டுவதுமான செயல்கள் நமக்கு வியப்பு மிகுந்த செய்தி. ஆனால் இந்த வகை தீவிர சோதனை, வேறு எங்கோ வட இந்தியாவில் சந்திக்கும் பிர்ச்னைக்கான தீர்வாக இருக்கலாம்.

நாடு முழுவதும் ஒரே தேர்வு. ஒரே முறை என்று முழங்குவதில் இதுதான் பிரச்னை!

(கட்டுரையாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் )

Advertisements

One comment

  1. பாரபட்சமாக நடைபெற்ற நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது read more

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.