செய்திகள்

ரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார்?

ரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார்? என கேட்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தொழில் அதிபர், தமிழ்நாடு அரசின் ஒப்பந்தக்காரர் எனக் கூறப்படும் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த டிசம்பர் 8ல் வருமான வரித்துறையினர் நடத்திட்ட சோதனையில் ரூ 147 கோடி ரொக்கம் அதில் 34 கோடி புதிய, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மேலும் 178 கிலோ தங்கத்துடன் டைரியும் கைப்பற்றி உள்ளனர். சேகர் ரெட்டி டைரியில் ரூ 300 கோடி அளவிற்கு அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 60 நபர்களுக்கு வழங்கிய பணம் குறித்தும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்பட்ட தொகை குறித்தும் டைரியில் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பான்மசாலா போன்ற போதைப் பொருட்களை அரசின் தடையை மீறி சமூக விரோதிகள் விற்பனை செய்திட உதவிய 50 காவல்துறை அதிகாரிகள் பெயர்ப் பட்டியலும் டைரியில் இடம் பெற்றுள்ளது.

லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் பட்டியலை அரசுக்கு அளித்து லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று, வருமான வரித்துறை தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் வெளியிட்ட செய்திகள் இன்று(08.05.2017) அனைத்து நாளேடுகளிலும் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

அரசிற்கு பட்டியல் வந்துள்ளது உண்மையா? அவ்வாறு எனில் சம்மந்தபட்டவர்கள் மீது அரசு எத்தகைய நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டுள்ளது? அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் அவைகளை ஏன் வெளிப்படையாக அரசு தெரிவிக்காமல் மூடி மறைப்பதன் நோக்கம் என்ன? வெளிப்படை தன்மையில்லாமல் அனைத்தையும் மூடி மறைத்து தவறு செய்தவர்கள் அனைவரும் தப்பித்து கொள்ளலாம் என கூட்டாக முடிவு எடுத்து செயல்பட்டு வருகின்றீர்களா? இதன் காரணமாகத்தான் மத்திய அரசை அமைச்சர்கள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் கூறினாரா? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. தெளிவு படுத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சாரும்!.

தான் அடித்திட்ட கொள்ளையில் ரூ 300 கோடி லஞ்சம் கொடுத்திட முடியும் எனில், மணல் கொள்ளையில் ஒப்பந்த பணிகளில் சேகர்ரெட்டி திரட்டிய பணம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்பதும் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். லஞ்சம் கொடுக்கப்பட்டதும், வாங்கப்பட்டதும் உண்மையானால் வருமான வரித்துறையே அப்பட்டியலை வெளியிடாமல் அரசுக்கு ஏன் பரிந்துறை செய்தது?

இது போன்று மாநில தலைமைச் செயலாளர் வீட்டில் பணம், டைரி எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர், அது என்னானது, வருமான வரித்துறை இவைகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது அதன் கடமையாகும். தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடல் வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Advertisements

பிரிவுகள்:செய்திகள்

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s