எண்டீடிவி இணை நிறுவனரான பிரனாய் ராயின் டெல்லி மற்றும் டெராடூனில் உள்ள வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 48 இழப்பு ஏற்படுத்தியதற்காக பிரனாய் ராய் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ராய் மீதும் ஹோல்டிங் நிறுவனம் ஒன்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளரான பிரனாய் ராய் தன்னுடைய மனைவி ராதிகா ராயுடன் இணைந்து 1988-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தை தொடங்கினார். தற்போது எண்டீடிவி நிறுவனத்தின் சேர்மனாக உள்ளார்.
2015-ஆம் ஆண்டு எண்டீடிவி நிறுவனத்தின் மீது சட்டவிரோதமான வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அது குற்றச்சாட்டு பொய்யானது என எண்டீடிவி நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் வங்கி முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனை இன்று நடத்தப்பட்டிருக்கிறது. எண்டீடிவி நிறுவனத்தின் சார்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
எண்டீடிவி ஊடகங்கள் மோடி தலைமையிலான மத்திய அரசின் போக்குகளை தொடர்ந்து விமர்சித்து வந்தன. இதுதான் சிபிஐ ரெய்டுக்கு காரணம் என சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.