#நிகழ்வுகள்

#நிகழ்வுகள்: அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு ரெட்ரோஸ்பெக்டிவ் நிகழ்வில் ஒரு இயக்குனரின் படங்களில் முக்கியமானவற்றை திரையிட்டு விவாதித்து வருகிறது. இந்த வாரம் இயக்குனர் அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடலும் விவாதமும் நடைபெற உள்ளது. தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

“கமர்ஷியல் சினிமா வட்டத்திலிருந்துதான் ஒருவர் படம் எடுக்க முடியும் என்ற சூழலில், அதற்குள் சிக்கிவிடாமல் அவர் எடுத்த ஒவ்வொரு படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. தணிக்கையில் அவரது சில படங்கள் சிக்கிக்கொண்டபோது, அப்படங்களை பொதுவெளியில் குறுந்தகடுகளாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

சுயாதீன திரைப்படங்களுக்கு திரைப்பட விழாக்கள் பெரும் பொக்கிஷம் என்பதை இவர் படங்களுக்கு கிடைத்த வரவேற்பினைக் கொண்டு பலரும் புரிந்துகொண்டனர். நல்ல கதைக்களம் கொண்ட படங்களைத் தயாரித்தும் வருகிறார். இன்றுவரை சினிமாவின் மீது கத்திரி வைப்பவர்களுக்கு எதிராக துணிந்து படங்கள் இயக்கியும், தயாரித்தும் வருகிறார். அவரது படங்களைப் பார்த்து விவாதிக்க, பல விஷயங்கள் இருக்கிறது. அவசியம் வாருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையிடப்படும் படங்கள்.

1.No smoking – (2007 – 128 mins)
2. Gulaal (2009 – 140 mins)
3. Gangs of Wasseypur -1 (2012 – 154 mins)
4. Gangs of Wasseypur -2 (2012 – 159 mins)

10-06-2017, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, வடபழனி.

Advertisements