செய்திகள்

விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டுக: பிரதமருக்கு சுதாகர் ரெட்டி கடிதம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கடந்த 7,8 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான புதுப்பிக்கப் பட்ட ஜீவா இல்லத்தில் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பி. பத்மாவதி, கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. இதில் தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா, மூத்த தலைவர் தா. பாண்டியன், சி.மகேந்திரன், என்.பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்ட முடிவில் தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ” நடிகர் ரஜினிகாந்த் தனியாக நின்றால் கூட வாக்குகள் கிடைக்கும் ஆனால்
பாஜகவில் இணைந்தால் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் சீத்தாரம் யெச்சூரி மீது டெல்லியில் சங் பரிவார் கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயற்சித் திருப்பது கண்டனத்திற்குரியது.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் இந்த தாக்குதல் மூலம் பாஜகவின் சர்வாதிகார ஆட்சி புலப்படுகிறது. ஜனநாயகத்திற்கும், கட்சிகளுக்கும் ஆளும் பாஜக அரசு மரியாதை அளிக்க வேண்டும். மோடியின் மௌனம் பிரதமர் மோடிக்கும் இதே மனநிலை தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எனவே, மாற்று கட்சியினர் மீதான தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்திருப்பதற்கு மத்தியபிரதேச அரசின் தவறான முடிவே கரணம். அதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என உள்துறை அமைச்சர் கூறுவது சரியல்ல. உள்துறை அமைச்சர் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

விளைபொருட்களுக்கு உரிய விலை கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு பெரு முதலாளிகளுக்கு 13.5 லட்சம் கோடி ரூபாய் வரிசலுகைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் காலூன்ற பாஜக எத்தனை முயற்ச்சிகள் எடுத்தாலும் அதனால் முடியாது. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கினால் கூட வாக்குகளை பெறலாம். ஆனால், பாஜகவில் இணைந்தால் அவரை தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள். ஜனாதிபதி தேர்தலில் மத்திய அரசு அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யாவிட்டால் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் முடிவு செய்வோம்.

பல்வேறு தளங்களில் (CBI ) சிபிஐயை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. மோடி என்ற ஒருவரை மையமாக கொண்டு சிபிஐயை தன் விருப்பத்திற்கு பயன்படுத்துகிறது.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது நடப்பது போல மிகப்பெரிய பிரச்சனைகள் நடைபெறும் இடங்களுக்கு எதிர்கட்சி தலைவர்களை அனுமதிக்காதது வாடிக்கையாகி விட்டது. ராகுல் காந்தியை அனுமதிக்காதது பாஜக வினர் தவறிழைத்திருப்பதை உறுதி செய்கிறது ” என்றும் அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், கோவை மாவட்ட செயலார் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாநிலக் குழு கூட்டத் தீர்மானங்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் கோவை ஜீவா இல்லத்தில் ஜூன் 7, 8 தேதிகளில் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பி.பத்மாவதி, கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா, மூத்த தலைவர் தா. பாண்டியன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இளநிலை, முது நிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கு விலக்குப் பெறுவதற்காக, தமிழக சட்டமன்றத்தில் இரண்டு சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
இச்சட்ட திருத்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்தப் போக்கு, மாநில அரசுகளின் உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் எதிரானது.

எனவே, இந்த சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கவேண்டும். அதை மாநில அரசும் வலியுறுத்த வேண்டும். என மானியாழ்க் குழு கேட்டுக் கொள்கிறது.

சென்னை ஐஐடி மாணவர் மீதான தாக்குதல்

சென்னை ஐஐடியில், மாணவர் சூரஜ், மதவெறி கொண்ட மாணவர்களால் கொடுமையான முறையில் தாக்கியதில், வலது கண் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெறிமிக்க, அராஜகமான, இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அண்மை காலத்தில் இந்திய உயர்கல்வி மையங்களை, அச்சத்தில் ஆழ்த்தி, அதனை தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர மதவெறி சக்திகள் மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவ தலைவர், கண்ணையா குமர் தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஹைத்ராபாத் பல்கலைக் கழகத்தில் ரோகித் விமுலா தன்னை மாய்த்து கொள்ளும் அளவிற்கு மனரீதியான சித்ரவதைகளை கொடுத்து, அவர் இறப்பதற்கு பல்கலைகழகமே காரணமாகிவிட்டது. நேரு பல்கலைக் கழக மாணவர் தமிழகத்தை சார்ந்த சேலம் முத்துக் கிருஷ்ணனுக்கும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் திருப்பூர் சரவணனுக்கும் இதே நிலை ஏற்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.

புகழ் மிக்க, உயர் கல்வி அமைப்பான சென்னை ஐஐடியிலும், மதவெறி சக்திகளின் வெறியாட்டம் இப்பொழுது கூடுதலாகிக் கொண்டே செல்கிறது. முதலில் மாணவர்களால் நடத்த பெற்ற அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டு, அது இந்தியாவின் முக்கிய பிரச்சனையாக மாறியது. இப்பொழுது மாட்டுக் கறி விருந்தில் சக மாணவர்களுடன் பங்கேற்றார் என்பதற்காக மாணவர் சூரஜ் கொலை வெறிக் கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வெறியை, நடத்திய கூட்டத்திற்கு மணீஸ் என்னும் மாணவர் தலையேற்றுள்ளார். இந்த மாணவர் இதற்கு முன்னரே இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளைகளில் ஈடுபட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு பேராசிரியரை தேசவிரோதி என்று நேருக்கு நேர் கூறியிருக்கிறார். இந்த மாணவர் மீது, எந்த நடிவடிக்கையையும் நிர்வாகம் எடுக்கவில்லை. இது எந்த அளவிற்கு உயர் கல்வி நிறுவனங்கள் மதவெறி சக்திகளின் பிடியில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

சென்னை ஐடிஐயில் தாக்குதல் நடத்திய மாணவன் மீது உடனடியாக எடுக்க வேண்டும். மதவெறி கல்வி நிலையங்களை ஆக்ரமிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி, அதற்கு முறையான தீர்வு காண ஒருங்கிணைய வேண்டும் என்று தமிழக மக்களை இந்தியக் கம்யூனிஸ் கட்சி அறை கூவி அழைக்கிறது.

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழக மக்களை அறைகூவி அழைக்கின்றோம்.

கல்விக் கூடங்களில் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற மொழி திணிப்பையும், இந்தியில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் தான் மத்திய அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு, என்ற அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையையும், தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மத்தியில் ஆட்சி புரியும், மோடியின் அரசு, இந்திய குடியரசு தலைவருக்கு 117 பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. இந்தியை கட்டாயம், பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பதற்கும், இந்தியில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் தான் மத்திய அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு உண்டு என்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

தமிழகம், உரிமை போராட்டம் நடத்தி, தமிழகத்தில் இந்தியை திணிக்க மாட்டோம் என்பது மட்டுமல்லாமல், இந்தி திணிப்பை விரும்பாத மற்ற மாநிலங்களுக்கும் இந்த உரிமையை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறோம். இந்த உறுதியை குழி தோண்டி புதைகக்க, இன்று சதி செய்கிறது என்று மத்திய அரசை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டுகிறது.

தமிழகம் தனித்தன்மை கொண்ட மாநிலம். உலகில் செழுமை மிக்க மூத்த மொழியை தாய் மொழியாகக் கண்ட மாநிலம். இங்கு தாய் மொழி உரிமை பறிக்கப்பட்டால் அதன் எதிர் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை, இந்திய நாடு முன்னரே அறிந்திருக்கிறது. இருந்தாலும் குழப்பங்களை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதை தனது தந்திரமாக கொண்ட பா.ஜ.க தமிழ் மக்களின் உரிமையையையும் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன், அரசின் இந்த ஆணையை உடனே திருப்ப பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அரசியல் சட்டதால் ஏற்று கொள்ளப்பட்ட அட்டவனை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக இந்த சூழலில் அறிவிக்க வேண்டும் என்பதையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

குண்டர் சட்டத்திற்கு எதிராக

திருமுருகன் காந்தி உட்பட நால்வர் மீது குண்டர் சட்டத்தை தமிழக அரசு. பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளது. தமிழக மக்களின் உரிமைக்காக போராடுகிறவர்களுக்கு அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை தமிழக அரசு, திருப்ப பெற்று. இவர்கள் நால்வரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்விற்கான அஞ்சலி மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டு, இந்த குண்டர் சட்டத்தை பிறப்பித்துள்ளார்கள். குண்டர் சட்டம் போடுவதற்கென்றே இதே போல மேலும் சில வழக்குகள், இவர் மீதும் மற்ற நால்வர் மீதும் போடப்பட்டுள்ளது.

அண்மைகாலங்களில் தமிழக உரிமைகாகவும், மதவெறி மிக்க கார்பரேட் ஆதரவு மோடி அரசாங்க்கத்தின், தமிழக மக்கள் மீதான தாக்குதலை எதிர்த்தும் இளைஞர்கள் வலிமை மிக்கப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு புகழ் மிக்க மெரினா பேராட்டமே சாட்சியாகும். இதைப் போலவே, சமூகப் பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களும் அதிகரித்துள்ளது.
இதை ஒடுக்குவதற்கு தமிழக காவல்துறை, மத்திய அரசின் வழிகாடுதலில் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருகிறது. போராடும் வேறு சில இளைஞர்கள் மீதும் குண்டர் சட்டம் போடும் முயற்சி நடப்பதாகவும் தெரிகிறது.

மெரினா கடற்கரை, காந்தியடிகள், பாரதியார், திராவிட இயக்கத் தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஆகியோரிள் அரசியல் போராட்டங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த இடம் இது. அங்கு தமிழ் மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராடச் சென்ற, திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்தியிருப்பது தமிழ் போராட்ட பரம்பரியத்தையே அவமதிக்கும் செயலாகும்.
திருமுருகள் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது, போடப் பட்ட குண்டர் சட்டத்தை உடன் திருப்ப பெற வேண்டும். பேச்சுரிமை, போராடும் உரிமையை ஆகியவற்றை பறிக்கின்ற வகையில் இனிமேல் தமிழ் உரிமைக்கு போராடுகிறவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயயன்படுத்த கூடாது என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துக

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பிரதி நிதிகளின் தலைமையில் இயங்கிவந்த உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை அதிமுக அரசு முடக்கியுள்ளது. கடந்த 2016 அக்டோபர் முதல் அதிகாரிகளின் கட்டுப் பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதால் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வழி இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் சாதியினர், பழங்குடியின மக்கள் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை சட்டமுறைப் படி செய்யத் தவறியதும், தேர்தல் ஆணையத்தை அரசின் கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதும், உள்ளாட்சித் தேர்தல் தடை பட்டதற்கு முக்கியக் காரணமாகும். இது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளித்த தவறுகளைத் திருத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வரவில்லை. அதிமுக அரசின் ஜனநாயக விரோத செயல்களைக் கண்டித்ததுடன் காலதாமதமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை விரைந்து நடத்துமாறு தமிழ்நாடு அரசைக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.