தொலைக்காட்சி

ரியாலிட்டி ஷோவில் கமல் ஏன் ‘நடிக்கிறார்’?: கருந்தேள் ராஜேஷ்

கருந்தேள் ராஜேஷ்

திரைப்படங்களில் நடிப்பது என்பது வேறு. தொலைக்காட்சியில் நடிப்பது வேறு. தொலைக்காட்சியில் இயல்பாக இருப்பதாகவே நடிப்பது முற்றிலும் வேறு. இதுதான் பிரச்னை. இயல்பாக இருப்பதாக நன்றாக ப்ரிப்பேர் செய்துகொண்டுவந்து நடிப்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடுகிறது. ஒரு நிகழ்ச்சியை host செய்வதற்கும், அந்தப் பிரபலத்தின் inherent personalityக்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு. அமிதாப் பச்சன் க்ரோர்பதியை ஹோஸ்ட் செய்து அது வெற்றியடைந்ததற்கு அவரது பெர்சனாலிடி அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது காரணம். வெற்றியடைந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும். ஹிந்தி பிக்பாஸின் சல்மான் கான் ஒரு சிறந்த உதாரணம். அவர் இயல்பில் எப்படி இருப்பாரோ அப்படியேதான் அதிலும் இருப்பார். கன்னடத்தின் பிக்பாஸில் சுதீப் இதேபோல்தான்.

ஆனால் கமல் இயல்பில் எப்படி இருப்பார்? அவரது பெர்சனாலிடி தமிழ் மக்களுக்குத் தெரியுமா? இதுவரை தெரியாது. காரணம் அவர் தன்னைக் கச்சிதமாகத் தயார் செய்துகொண்டே வெளியுலகில் எதுவாக இருந்தாலும் செய்கிறார். எனவே இயல்பாக அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதே நமக்குத் தெரியவில்லை. அவருமே இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள மிகுந்த தயாரிப்பும் பிரயாசையும் அவருக்கே தேவைப்படுகிறது. இதுதான் நேற்றைய நிகழ்வில் நான் கவனித்த அம்சம்.

தன்னுடைய ஒரிஜினல் இயல்பு எப்படியோ, அதில் வெளிப்படையாகவே இருந்தாலே நிகழ்ச்சி வெற்றி அடைந்துவிடும். அந்த இயல்பு என்தையே கஷ்டப்பட்டு ப்ரிப்பேர் செய்துகொண்டுவந்தால் அது வெளிப்படையாகத் தெரிந்தும் விடும். கமல்ஹாஸன் பிக்பாஸில் தன்னுடைய தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தப் பார்க்கிறார். ஆனால் அது ஒரு ரியாலிடி ஷோ – திரைப்படம் அல்ல என்பதால் அவர் நடிப்பது நன்றாகத் தெரிந்து, நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது என்பது என் கருத்து.

கமல் இயல்பில் எப்படி இருப்பார் என்று பார்க்க ஆசைப்பட்டுத்தான் பிக்பாஸ் பார்த்தேன். அதில் அது சுத்தமாகத் தெரியவில்லை. நமக்குப் பிடித்த ஒரு ஆளுமையின் வெளிப்படையான இயல்பைப் பார்ப்பதே கடினமாக ஆகிக்கொண்டு இருக்கிறது.

கருந்தேள் ராஜேஷ், திரை எழுத்தாளர். சினிமா ரசனை, திரைக்கதை எழுதலாம் வாங்க ஆகிய நூல்களின் ஆசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s