செய்திகள்

இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும்!

இந்தித்திணிப்பு எதிர்ப்பையும் கீழடியை பாதுகாப்பதையும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நிரலாக்கிக்கொள்ள வேண்டும் என தமுஎகச மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  1. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனித்துவமான நாகரிகத்தைக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள் என்பதை சங்க இலக்கியம் எடுத்துரைத்தது. ஆனாலும் அது இலக்கியம் தானே, உண்மை எவ்வளவோ, கற்பனை எவ்வளவோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள் உண்டு. அதைப் போக்கியது கீழடி அகழாய்வு. அன்றே ஒரு நகர நாகரீகம் வைகை நதிக்கரையில் இருந்தது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கண்டெடுக்கப்பட்ட பலநூறு பொருட்கள் சங்க இலக்கிய வாழ்வை மெய்ப்பிக்கும் சான்றுகள். அவற்றின் காலமும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓர் இன மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் இப்படியொரு வரலாற்று ஆதாரம் கிடைத்தால் எந்த ஒரு அரசும் பெருமையோடு அதனைப் பாதுகாக்கவும் அடுத்தகட்ட ஆய்வினை முன்னெடுக்கவும் முயலும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசோ அவற்றை தடம் தெரியாமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக தமுஎகசவும் , இன்னும் பிற அமைப்புகளும், ஊடகங்களும், தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும், நீதிமன்றத் தலையீட்டாலும் சிலமுன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் கீழடி ஆய்வினை முழுமையாக முடிக்கப் பல பத்தாண்டுகள் ஆகலாம். அதுவரை ஆய்வுப் பணியை தொடர உரிய ஆணையும். தேவையான நிதியும் வழங்கிட மத்திய அரசை ,தமிழ் சமூகத்தின் மனச்சாட்சியாக நின்று ,இம்மாநாடு வற்புறுத்தி வேண்டுகோள் வைக்கிறது.

  2. கீழடியில் அடையாளம் காணப்பட்டுள்ள தொல்லியல் மேடு உள்ள 110 ஏக்கர். தனி நபர்களுக்கு உரிமையான இந்நிலத்தை உரிய இழப்பீடு அளித்து அரசு தன்னகப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வற்புறுத்துகிறது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் தொல்லியல் சான்றுகள் சேதமாகும் வாய்ப்புள்ளதை அரசுகள் உணர வேண்டும்.

  3. தொல்லியல் ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர், அப்பணி முடியும் வரை அப்பொறுப்பில் இருப்பதே இதுவரை உள்ள தொல்லியல் துறையின் நடைமுறை. ஆனால் கீழடி ஆய்வினை சிதைக்கும் முயற்சியின் பகுதியாக, கீழடி அகழாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக் காரணம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டுள்ள இவ்வநீதியான நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். பெங்களூர், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சுட்டிக் காட்டியுள்ள படி அவரை மீண்டும் கீழடி அகழாய்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

  4. ”சிந்து வெளி நாகரீகம் முதல் கீழடி நாகரீகம் வரை” என்ற பொருளில் கள அருங்காட்சியம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இவ்வகழாய்வுப் பணியில் தமிழகத் தொல்லியல் துறையும் ஈடுபட தமிழக அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.

9 . இவ்விரு பிரச்னைகளையும் அரசியல் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலின் பகுதியாக மாற்ற வேண்டும் என உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.

  1. இந்துத்துவாவின் பாசிச பாணியிலான ஒற்றைத்திணிப்பு தீவிரப்படுத்தப்படும் நிலையில், நாம் இவ்விரு பிரச்னைகளையும் அணுக வேண்டியுள்ளது. வரலாற்றைத் திரித்தல், பண்பாட்டு வேர்களையும் வேற்றுமைகளையும் மறுத்து அழித்தல் உணவு உரிமை உட்பட அனைத்திலும் தலையிட்டு ஆதிக்கம் செலுத்த முயல்வது, பன்முகத்தன்மைகொண்ட தேசிய இனங்களின் இன அடையாளங்களை அழித்தல் என்கிற பாசிசத்தை நோக்கிய மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் பகுதியே கீழடி அகழ்வாய்வை மூடிப்புதைக்கவும் சிதைக்கவும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என இம்மாநாடு தமிழ்மக்களுக்கு முன்னுணர்த்த விரும்புகிறது. மாபெரும் மக்கள் எழுச்சியை இன்றைய நிலைமைகள் கோரி நிற்பதை உணர்ந்து தமிழகத்தின் சகல பகுதி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்த்தெழுந்து குரல் கொடுப்போம். தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் மொழியுரிமை, பண்பாட்டு உரிமை, உணவு உரிமை, கல்வி உரிமைக்கான எழுச்சிமிகு மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்திட இம்மாநாடு தீர்மானிக்கிறது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.