இந்துத்துவம்

பிரதமரின் கருணைமிக்க வார்த்தைகளை கேட்டபடியே, பசு காவலர்கள் ஒருவரை அடித்துக்கொன்றனர்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து மாட்டை முன்னிறுத்தி, ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் கும்பல் வன்முறை ஏவிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வன்முறைகளுக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள், தலித்துகளுமே. நாடு முழுக்கவும் இத்தகைய பசு ரட்சகர்களின் கொலைகளுக்கும் கும்பல் வன்முறைகளுக்கும் எதிர்ப்பு வந்துகொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி மவுனம் சாதித்து வந்தார்.  சர்வதேச ஊடகங்களின் கவனம் இந்தப் பிரச்னையில் திரும்ப, குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய கருணைமிக்க வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.

“பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதும், தாக்குதல் நடத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பசுக்களை பாதுகாப்பதில் மகாத்மா காந்தி,  ஆச்சார்யா வினோபாவே ஆகியோரைவிட எவரும் சிறந்தவரில்லை. ஆனால் பசுக்களை காப்பாற்ற மனிதர்களைக் கொல்வதை காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. அப்படி செய்வது பசு பக்தி ஆகாது. இது வன்முறையற்ற தேசம்; மகாத்மாவின் தேசம்; அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள். வன்முறைகள் ஒருபோதும் பிரச்னைக்கு தீர்வாகாது. அனைவரும் ஒன்றாக மகாத்மாவின் கனவை நனவாக்க உழைப்போம்” என்று மோடி பேசியிருக்கிறார்.

மோடியின் பேசிய சில மணி நேரத்தில், மேலும் ஒரு கும்பல் வன்முறை அரங்கேறியிருக்கிறது பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில்.  காரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கருதி, அலிமூதீன் என்ற அக்சர் அன்சாரியை அடித்தே கொன்றிருக்கிறது ஒரு கும்பல். மூன்று நாட்களுக்கு முன்புதான், பால் பண்ணை வைத்திருந்த ஒரு இஸ்லாமியர் வீட்டின் முன் செத்த மாடு கிடந்தது என்பதற்காக, அவருடைய வீட்டையே கொளுத்தியது 100 பேருக்கும் மேற்பட்ட கும்பல். இந்த நிலையில்தான் ராம்கர் மாவட்டத்தில் பஜார்டண்ட் என்ற கிராமத்தில் அன்சாரி அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்.

காவல் துறை அதிகாரி ஆர்.கே. மாலிக், இந்த கொலை திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்கிறார். இறைச்சி வியாபாராத்தில் ஈடுபட்டிருந்த அன்சாரியை கொல்ல நாள் பார்த்து காத்திருந்திருக்கிறார்கள். இவர்கள், அன்சாரியுடன் வியாபாரம் செய்தவர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை அதிகாரி சந்தேகிக்கிறார். அன்சாரி மாட்டிறைச்சி கொண்டு சென்றாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்கிறார் இவர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s