இந்திய பொருளாதாரம்

ஜி.எஸ்.டி.: தோசைக்கு பதிலாக, பீட்சாவை உண்ணச்சொல்கிறது அரசு!

இட்லிக்கும்,தோசைக்கும் 18% ஜிஎஸ்டி. கார்ப்பரேட்காரனின் பீட்சாவுக்கு 5% ஜிஎஸ்டி ஏன்?

சங்கர் குமார்

சங்கர் குமார்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி இன்று நிறைய படித்தேன்.தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறையில் விவரமாக ஜிஎஸ்டி பற்றி பேசியதைக் கேட்டேன்.ஒரு சாமானியனாக எனக்கு எழுந்த சந்தேகம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது மறைமுகமாக கார்ப்பரேட் கம்பெனிகளை வாழவைப்பது.சிறு தொழில்களை,சிறு வணிகத்தை அழிப்பது.வெளிநாட்டினரின் பார்வைக்கு இந்தியா ஏழை தேசமல்ல, அது ஒரு வளர்ந்து வரும் கார்ப்பரேட் தேசம் என காண்பிக்க நினைக்கும் பொய் தோற்றம். எனக்கு எழுந்த கேள்விகள் இவை.

1. எந்த மண்ணில் பிறந்தோமோ, அங்கு கிடைக்கும் உணவுதான் நாம் உண்ண வேண்டும் என்றார் நம்மாழ்வார். நாம் உண்ணும் இட்லிக்கும்,தோசைக்கும் 18% ஜிஎஸ்டி. கார்ப்பரேட்காரனின் பீட்சாவுக்கு 5% ஜிஎஸ்டி ஏன்? எங்களை பீட்சா சாப்பிட சொல்கிறீர்களா?

2.என் சகோதரர்கள் உற்பத்தி செய்யும் தீப்பெட்டிக்கும், பட்டாசுக்கும் 18% ஜிஎஸ்டி.
டியூரக்ஸ், காமசூத்ரா போன்ற கார்ப்பரெட் கம்பெனிகள் உற்பத்தி செய்யும் ஆணுறைக்கு 0% ஜிஎஸ்டி. எங்கள் தேவை இப்போது காண்டம்தானா மோடிஜி?

3.அரசியல்வாதிகளும்,அம்பானிகளும்,அதானிகளும் தங்கள் பணத்தை பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.ஷேர்மார்க்கெட் ஜிஎஸ்டி லிஸ்ட்லயே இல்லையே ஏன்? உங்களூக்கு நீங்களே வரிவிதிக்க வேண்டிவரும் என்பதால் அதை தவிர்த்துவிட்டீர்களா?

4. கியூபா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் ஒரே தேசம்,ஒரே வரி இருக்கிறது. ஆனால், அந்த நாடுகளில் கல்வியும், மருத்துவமும் இலவசம். நீங்கள் அதில்தான் கொள்ளையே அடிக்கிறீர்கள்.

5. நள்ளிரவில் பார்லிமெண்ட் கூடி,ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இது என்ன வடகொரியாவா? வணிகர்களின் கருத்தைகேட்டீர்களா? இந்தியாவின் இரும்பு முதல்வர் மம்தா பானர்ஜியின் விமர்சனத்துக்கு பிரதமரின் பதில் என்ன?

6. இந்தியா, அமெரிக்கா ஆகவேண்டாமா? என்று கோபப்படுகிறார் தொழில் மந்திரி நிர்மலா சீதாராமன். ஒரு சாதாரண தொழிலாளிக்கு அமெரிக்காவில் என்ன சம்பளம் தெரியுமா? நீங்கள் தொழிலாளிக்கு கொடுக்கும் சம்பளம் பிச்சை காசு. இதற்கு வரிவிதிப்பு வேற. கடலைமிட்டாய்க்கு 18% ஜிஎஸ்டி என்றால், பாவம் கோவில்பட்டிக்காரன் போராடவா போகிறான் என்கிற அலட்சியம். திமிர். சர்வாதிகாரம்.

7. விவசாயிகள் டெல்லியில் போராடியபோது, அவர்களை எதற்கு பிரதமர் சந்திக்கணும். அவசியமில்லையே என்றீர்களே…இப்போது மட்டும் எப்படி விவசாயி வாங்கும் உரத்திற்கு ஜிஎஸ்டி போடுகிறீர்கள்?

8. மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்திற்கு மக்கள் அல்ல. மக்களின் சாபத்திற்கு ஆளானால் அதற்கு பின்னால் பெரிய வீழ்ச்சி காத்திருக்கிறது. வீழத் தயாராகுங்கள்…!

சங்கர் குமார், திரைப்பட இயக்குநர், திரைக்கதாசிரியர்.

One comment

  1. இக் கட்டுரை, ஜி.எஸ்.டி என்ற வரிவிதிப்பு முறையை எதிர்க்கிறதா, அல்லது அதன் அமுலாக்கத்தில் உள்ள குறைகளை எதிர்க்கிறதா? தெளிவில்லை.
    இன்றைய அரசாங்கம் அமுல்படுத்திவரும் அனைத்து பொருளாதார சீர்திருத்தங்களும் காங்கிரஸாலும், அதனுடன் துணைக்கு நின்ற ‘மத சார்பற்ற முன்னணியாலும்’ முன் வைக்கப்பட்ட திட்டங்களேயாகும். அதைச் செயற்படுத்தும் அளுமையற்றிருந்த காங்கிரஸ் கட்சி இன்று அவை அமுல் படுத்தப்படுவதைக் கண்டு காள்புணர்வு கொண்டு பொருமித் தள்ளுகிறது. ஆட்சியை எம்மிடம் விடுங்கள் முறையாக அமுல்படுத்திக் காட்டுகிறோம் என்கிறது. இது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
    அடுத்த பக்கத்தில் இத்திட்டத்தை அமூல்ப் படுத்துவதில் மேற்குவங்கம் தவிர்ந்த அனைத்து மாநிலங்களும் மத்தியரசுடன் ஒத்துழைத்து நிற்பது தெரியவில்லையா? அவ்விதமிருக்க பிரதமரை மட்டும் குறிவைத்துக் தாக்குவது ஏன்? மத்திய மாநில அரசுகளென்ற பேதங்கள் இன்றி இந்தியாவின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் நடந்துவரும் பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது புரியவில்ல்லையா? இந்தியாவை காப்ரேட்களின் கட்டுப்பாடற்ற சந்தையாக மாற்றுவதும், அச் சந்தையைச் சார்ந்து நின்று தம்மை வளர்த்துக் கொள்வதுவுந்தான் ‘இந்திய’ முதலாளி வர்க்கத்தினதும், அதிகாரத்துவ வர்க்கத்தினரதும் குறிக்கோளாக உள்ளது. அனைத்து வேறுபாடுகளையும் கடந்து இவ் வர்க்கங்கள் இந்தியளவில் ஒன்றுபட்டு நிற்கின்றன. இவ்விருவர்க்கங்களையும் ‘குறோனிக்கல் முதலாளித்துவ-அதிகாரத்துவ வர்க்கக் கூட்டென அழைக்கலாம். இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்துள் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் இவ்வர்க்கக் கூட்டின் நலன் காப்பவர்களேயாகும். போர்க்குணமற்ற இரு இடதுசார்க்க்கட்சிகள் உட்பட.
    ஆகவே காங்கிரஸ் பார்வையில் இருந்து கொண்டு மோடி எதிர்ப்பு அரசியல் நடத்துவதை தவிர்க்கவும். வோட்டுபொறுக்கி அரசியல்வாதிகளின் அரசியலுக்குள் ஆட்படாமல் தற்பாதுகாத்துக் கொள்ளவும். புதிய காலனியல் மயமாக்கலை ஏதிர்க்க மக்களை தயார்படுத்தவும்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: