செய்திகள்

நிதி ஆயோக் சொல்லும் தலைகீழ் நிலச்சீர்திருத்தம்!

விவசாயிகளின் நிலம் வாரிசு உரிமை மாற்றத்தில் துண்டு துண்டாகி வருகிறது. அவற்றை ஒரே துண்டாக, பெரிய நிலமாக்கினால்தான், நவீன விவசாயம் சாத்தியம்... உற்பத்திப் பெருகும். ஆனால், அதற்கெல்லாம் விவசாயிகள் ஒத்துவர மாட்டார்கள். எனவே.. பெரிய முதலாளிகள் விவசாயிகளின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, அந்தந்த துண்டு நிலத்திற்கு உரிய குத்தகையை ‘நியாயமாக‘ கொடுத்துவிடுவார்கள். உற்பத்தியைக் கம்பெனிகள் செய்யும்.

மதிவாணன்

mathivanan
சி. மதிவாணன்

லாபம்தான் முக்கியம் என்ற திசையில் காவிகளின் ஏகாதிபத்திய- பெருமூலதன அரசு அதிவிரைவாகச் செயல்படுகிறது. உற்பத்திக்கு உதவாத அனைத்தையும் உற்பத்திக்கானதாக மாற்ற வேண்டும் என்கிறது.

இது நியாயம்போல் தென்படும். ஆனால், கேள்வியென்னவென்றால், உற்பத்தி யாருக்கானது என்பதுதான்!

காவி அரசின் சமீபத்திய செயல்பாடுகள் ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே‘ என்பதைச் சொல்கின்றன. வெகு சாதாரணமாக ஆயிரம் ஆயிரம் கோடிகளில் முதலாளிகளுக்குச் சலுகை செய்யும் அரசு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய யோசிக்கிறது. மாணவர்களின் கல்விக் கடன்களை கத்தியை வைத்து வசூலிக்கத் தயங்காத வங்கிகள், கடன் பெற்றும் திருப்பிக் கட்டாத ரிலையன்சுக்கு மாணவர் கல்விக் கடனை வசூலிக்கும் உரிமையைத் தருகின்றன. மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காவி அரசுக்கு ‘உலகம் என்பது முதலாளிகள் மட்டுமே‘ என்று சொல்வதற்கான ஆதாரங்கள் மட்டுமே இவை.

சரி. இப்போது விவசாயிகள் பிரச்சனைக்கு வருவோம்.

திட்ட ஆணையத்தை ஏறக்கட்டிவிட்டு வந்த நிதி ஆயோக் “மூன்றாண்டுகளுக்கான செயல்திட்டம் 2017–18 இலிருந்து 2019–20 வரை” என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதன் ஒரு பகுதி விவசாயத்தை முன்னேற்றுவது பற்றி சொல்கிறது. அந்த ஆவணத்தின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் சற்று கருத்தூன்றிப் படியுங்கள்….

“காலப்போக்கில் இந்தியாவில் நிலவுடைமை மேலும் சிறிய அளவிலானதாகவும் சிதறியதாகவும் ஆகியுள்ளது. 2010–11 விவசாய கணக்கெடுப்பின் படி 47% சாகுபடி நிலங்கள் அளவில் அரை ஹெக்டேருக்கும் குறைவானதாக உள்ளன. இந்த நிலத்துண்டுகள் ஐந்துபேர் கொண்ட குடும்பத்தை பராமரிக்கப் போதுமானதாக இல்லை. எனவே பல விவசாயிகள் வருமானத்திற்கான மாற்று ஆதாரங்களைத் தேடுகின்றனர். ஆனால் பல மாநிலங்களில் குத்தகை சட்டங்கள் மிகக் கடுமையாக இருப்பதால் இந்த விவசாயிகள் தாம் கைவிட்டுச்செல்லும் நிலங்களைக் குத்தகைக்கு விடத் தயங்குகின்றனர். இதன் விளைவாக, அதிகரித்த அளவில் பண்ணை நிலங்கள் தரிசாக விடப்படுகின்றன. குத்தைகைதாரர் நிலஉடைமையாளர் ஆகிய இருதரப்பாரின் உரிமைகளையும் சமன்பாடு செய்து பாதுகாக்கக்கூடிய நவீன குத்தகைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதென்பது இதற்கான தீர்வுகளில் ஒன்றாகும்”

இந்த ராஜதந்திர வாசகத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. நியாயமாகப் பேசுவதாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அதிகம். சற்று பொழிப்புரை கொடுத்தால் புரியும்.

விவசாயிகளின் நிலம் வாரிசு உரிமை மாற்றத்தில் துண்டு துண்டாகி வருகிறது. அவற்றை ஒரே துண்டாக, பெரிய நிலமாக்கினால்தான், நவீன விவசாயம் சாத்தியம்… உற்பத்திப் பெருகும். ஆனால், அதற்கெல்லாம் விவசாயிகள் ஒத்துவர மாட்டார்கள். எனவே.. பெரிய முதலாளிகள் விவசாயிகளின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, அந்தந்த துண்டு நிலத்திற்கு உரிய குத்தகையை ‘நியாயமாக‘ கொடுத்துவிடுவார்கள். உற்பத்தியைக் கம்பெனிகள் செய்யும்.
– இதுதான் அந்தப் பொழிப்புரை.

இப்போது கேள்விகளைப் பரிசீலியுங்கள்…

1. விவசாயிகளின் நிலங்களை முதலாளிக்கு அளிக்கும் நிலக்குத்தகை விவசாயிகளின் தேவையை நிறைவேற்றுமா?

2. பெரும் பண்ணையை உருவாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் எத்தனை விவசாயிக்கு/ விவசாயத் தொழிலாளிக்கு வேலைத் தரும்?

3. குத்தகை சட்டங்கள் கிராமப்புர பொருளாதாரத்தை முன்னேற்ற முன்பு உருவாக்கப்பட்டன. தற்போதைய வழி கிராமப்புர நிலத்தை முதலாளிகளின் லாபத்திற்கு அளிக்கப்படுவது எப்படி ஏழைகளுக்கு உதவியாக இருக்கும்?

4. நிலச்சீர்திருத்தச் சட்டங்களைக் கடுமையாக்கி, கிராமப்புர மக்களின் கையில் நிலத்திற்கான அதிகாரத்தைக் கொடுக்காமல், அரசியல் சட்டத்தின் சாரத்தின்படி நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல், தலைகீழ் நிலச்சீர்திருத்தத்தை ஏன் இந்தியா முன்மொழிகிறது?

இந்தக் கேள்விகளுக்கு நிதி ஆ(அ)யோக்(கியர்களி)டம் பதில் இல்லை!

புரட்சிகரமான நிலச் சீர்திருத்தம்! விவசாயத்தின் மீது விவசாயிகளின்- விவசாயத் தொழிலாளர்களின் கட்டுப்பாடு! என்று கம்யூனிஸ்டுகள் முழங்க வேண்டும்.

எதிர்காலப்பாதை தெளிவாகவே இருக்கிறது. வாருங்கள் தோழர்களே.. முன்செல்வோம்.. காவிகளிடமிருந்து இந்தியாவைக் காப்போம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.